//
Type Here to Get Search Results !

19th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

19th JULY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மதுரை அருகே 2000 வருட பழமையான தாழிப்பானை கண்டுபிடிப்பு
  • மதுரை அருகே 2000 வருட பழமையான தாழிப்பானை கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. சங்க காலத்திற்கு முன்பு அதாவது கிபி 2000 வருடத்திற்கு முன்பாக தமிழகத்தில் இறந்தவர்களை மண் பானையில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது.
  • இதில் முழு உடலையும் உள்ளே வைத்து புதைப்பார்கள். மண்பானையில் முழு உடலையும் வைத்து புதைப்பார்கள் அல்லது இறந்தவர்களின் எலும்புகளை சேகரித்து அதனை பானையில் வைத்தும் புதைப்பார்கள் அல்லது இறந்தவர்கள் பயன்படுத்திய பொருட்களை மட்டும் தாழிப் பானையில் வைத்து புதைக்கும் வழக்கம் இருந்துள்ளது. இந்த மண்பானை கருப்பு சிகப்பு நிறத்தில் இருக்கும்.
உலகக்கோப்பையில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து 3-வது இடம் பிடித்து வெண்கலம் வென்றது
  • அமெரிக்காவின் மியாமி நகரில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் 23-வது உலகக் கோப்பை கால்பந்து திருவிழா இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.
  • 48 அணிகள் மகுடத்திற்காகப் போட்டியிட்ட இந்த கால்பந்து தொடரில், 3வது இடத்தை (வெண்கலப் பதக்கம்) தீர்மானிப்பதற்கான வாழ்வா சாவா ஆட்டத்தில் முன்னாள் சாம்பியன்களான இங்கிலாந்தும் பிரான்ஸும் நேருக்கு நேர் மோதின.
  • ரசிகர்களுக்குக் கோல் விருந்து படைத்த இந்தத் திரில்லரான ஆட்டத்தில், 6-4 என்ற கோல் கணக்கில் பிரான்ஸை வீழ்த்தி இங்கிலாந்து அணி வரலாற்று வெற்றியைப் பதிவு செய்து, உலகக் கோப்பையில் 3-வது இடத்தைக் கைப்பற்றி அசத்தியுள்ளது.
ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் - பி.வி. சிந்து சாம்பியன்
  • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் இந்தியா, சீனா, ஜப்பான் உள்ளிட்ட பல்வேறு நாடுகளை சேர்ந்த வீரர்கள் பங்கேற்றுள்ளனர். டோக்கியாவில் நடைபெற்று வரும் இத்தொடரின் பெண்கள் ஒற்றையர் பிரிவில் இறுதிப்போட்டி இன்று நடைபெற்றது.
  • இதில் ஜப்பானின் அகனி யமாகுசியை எதிர்கொண்ட இந்தியாவின் பி.வி.சிந்து வெற்றி பெற்றுள்ளார். அகனி யமாகுசியை 21-14, 21-17 என்ற செட்களில் வீழ்த்திய பி.வி.சிந்து ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பெண்கள் ஒற்றையர் பிரிவில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளார்.
  • ஜப்பான் ஓபன் பேட்மிண்டன் தொடரில் பி.வி.சிந்து பெறும் முதல் சாம்பியன் பட்டம் இதுவாகும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel