
9th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்
- தவெக தலைவர் விஜய் கடந்த மே 10-ஆம் தேதி தமிழக முதல்வராகப் பதவியேற்றுக் கொண்டார். அப்போது, குழந்தைகள், பெண்களின் பாதுகாப்புக்காக சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை உருவாக்கப்படும் என்று அறிவித்து இருந்த நிலையில், பதவியேற்பு விழா மேடையிலேயே அதுதொடர்பான கோப்பில் கையெழுத்திட்டார்.
- இதைத் தொடர்ந்து, அதிரடிப்படையின் ஐ.ஜி.யாக பவானீஸ்வரி நியமிக்கப்பட்டார். இந்த படையில் மேலும், ஒரு எஸ்.பி. 02 டிஎஸ்பி, மற்றும் 04 ஆய்வாளர்கள் உட்பட 30-க்கும் மேற்பட்ட போலீஸார் நியமிக்கப்பட்டுள்ளனர்.
- இதனை தொடந்து, சென்னை எழும்பூர் ராஜரத்தினம் மைதானத்தில் சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை திட்டத்தை முதல்வர் விஜய் தொடங்கி வைத்தார்.
- அப்போது பெண் காவலர்களின் அணிவகுப்பு மரியாதையை காவல்துறை வாகனத்தில் சென்று முதல்வர் பார்வையிட்டார். அதன் பின்னர் எஸ்.பி ஷானாஸ் தலைமையிலான சிங்கப்பெண் அதிரடிப் படை காவல்துறையினர் அளித்த அணிவகுப்பு மரியாதையை முதல்வர் விஜய் ஏற்றுக்கொண்டார்.
- புதுச்சேரியில் நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் தேசிய ஜனநாயக கூட்டணி மீண்டும் ஆட்சியை தக்க வைத்துக் கொண்ட நிலையில் முதலமைச்சராக ரங்கசாமி ஐந்தாவது முறையாக பொறுப்பேற்றுக் கொண்டார்.
- அவருடன் நமச்சிவாயம் மற்றும் மல்லாடி கிருஷ்ணாராவ் ஆகியோர் அமைச்சர்களாக பதவியேற்றுக் கொண்ட நிலையில், மீதமுள்ள மூன்று அமைச்சர் பதவி நிரப்பப்படாமல் இருந்தது.
- இந்த நிலையில் முதலமைச்சர் ரங்கசாமியின் பரிந்துரையின் பெயரில் சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜவேலு, சிவக்கொழுந்து மற்றும் காரைக்காலைச் சேர்ந்த ராஜசேகரன் (பாஜக) ஆகியோரை அமைச்சர்களாக நியமிக்க குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு ஒப்புதல் அளித்துள்ளார்.
- இந்தியாவின் 2026-ம் ஆண்டுக்கான பிரிக்ஸ் தலைமைத்துவத்தின் ஒரு பகுதியாக இந்திய தேசிய அறிவியல் மையம், பிரிக்ஸ் அறிவியல் மையக் கூட்டமைப்பின் 2026-ம் ஆண்டுக்கான முதலாவது கூட்டத்தை நடத்தியது.
- நீடித்த வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவை மேம்படுத்துதல், தென்பகுதி நாடுகள் ஒத்துழைப்பை வலுப்படுத்துதல் என்ற தலைப்பின் கீழ், காணொலிக் காட்சி வாயிலாக நடைபெற்ற இக்கூட்டத்தில் பிரேசில், சீனா, எகிப்து, எத்தியோப்பியா, இந்தோனேஷியா, ரஷ்யா, தென்னாப்பிரிக்கா, பெலாரஸ், நைஜீரியா, வியட்நாம் ஆகிய 10 நாடுகளின் அறிவியல் மையங்கள் பங்கேற்று பொறுப்புமிக்க சமத்துவமான செயற்கை நுண்ணறிவு வளர்ச்சிக்கான பகிரப்பட்ட பிரகடனத்தை முன்னெடுப்பது குறித்து விவாதித்தன.
- இக்கூட்டத்தை இந்திய தேசிய அறிவியல் மையத்தின் சர்வதேச விவகாரங்களுக்கான துணைத்தலைவர் பேராசிரியர் டெபசிஸ் மித்ரா வழிநடத்தி அறிவியல் மையங்களிடையே முறையான விவாதங்களை ஒருங்கிணைத்தார்.
- இக்கூட்டத்தில் அறிவியல், நீடித்த வளர்ச்சிக்கான செயற்கை நுண்ணறிவு குறித்த வரைவுப்பிரகடனம் குறித்து பரிசீலிக்கப்பட்டது.
- பகிரப்பட்ட கணினி உள்கட்டமைப்பு, கூட்டுத்தரவுத் தளங்கள், பன்மொழி செயற்கை நுண்ணறிவு மாதிரிகள் ஆகியவற்றில் ஒருமித்த கருத்து எட்டப்பட்டது.
- கூட்டுப் பணிக்குழுக்கள், ஆராய்ச்சியாளர்கள், பரிமாற்றத் திட்டங்கள், வெளிப்படையான வள அறிவியல் உள்கட்டமைப்புகளுக்கு அழைப்பு விடுக்கப்பட்டது. இக்கூட்டத்தின் பரிந்துரைகள், திருத்தப்பட்ட வரைவு பிரகடனத்தில் சேர்க்கப்படும்.
- பிரிக்ஸ் அறிவியல் மைய கூட்டமைப்பின் 2-வது நேரடிக் கூட்டம், 2026 ஜூலை 22, 23 ஆகிய தேதிகளில் ஐதராபாத் ஐஐடி-யில் நடைபெறவுள்ளது.

