//
Type Here to Get Search Results !

4th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

4th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ரூ. 18,600 கோடி முதலீட்டில் முதல்வர் விஜய் முன்னிலையில் தமிழக அரசு எல்அண்ட்டி நிறுவனம் ஒப்பந்தம்
  • ரூ.18,600 கோடி முதலீட்டில் 8,200 நபர்களுக்கு உறுதியளிக்கப்பட்ட வேலைவாய்ப்பு அளிக்கும் வகையில் தமிழ்நாட்டில் எல் அண்ட் டி (லார்சன் & டூப்ரோ) நிறுவனம் மூன்று திட்டங்கள் மேற்கொள்வதற்கு தமிழக முதல்வர் விஜய் முன்னிலையில், புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
  • முதல்வர் விஜய் தலைமையிலான அரசு பொறுப்பேற்ற பின்னர், தொழில் துறையில் மேற்கொள்ளப்படும் முதல் புரிந்துணர்வு ஒப்பந்தம் இது என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தியாவின் மிக நீண்ட காலம் பதவி வகித்த தேர்ந்தெடுக்கப்பட்ட பிரதமர் என்ற வரலாற்றுச் சாதனையை மோடி படைத்தார் 
  • 2014 மே 26 அன்று பிரதமராக முதன்முதலில் பதவியேற்ற மோடி, ஜூன் 10 அன்று தொடர்ச்சியாக 4,399 நாட்கள் பதவியில் இருந்து, இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952 மே 13 அன்று பதவியேற்றது முதல் 1964 மே 27 அன்று அவர் இறக்கும் வரை நீடித்த நேருவின் 4,398 நாட்கள் என்ற சாதனையை முறியடிக்கிறார் .
  • கடந்த 2014ம் ஆண்டு மே 26ம் தேதி முதன்முதலில் பிரதமராக பதவியேற்ற மோடி வரும் 10ம் தேதியுடன் தனது 4399 தொடர்ச்சியான நாட்களை பதவியில் நிறைவு செய்ய உள்ளார். 
  • இதன் மூலம், இந்தியாவின் முதல் பொதுத் தேர்தலுக்குப் பிறகு 1952-ம் ஆண்டு மே 13-ம் தேதி பதவியேற்றது முதல், 1964-ம் ஆண்டு மே 27-ம் தேதி அவர் இறக்கும் வரை நீடித்த நேருவின் 4,398 நாட்கள் என்ற சாதனையை மோடி முறியடிப்பார்.
  • இது மோடியின் அரசியல் வாழ்க்கையில் மற்றுமொரு மைல்கல்லைக் குறிக்கிறது. அவர் ஏற்கனவே கடந்த ஆண்டு ஜூலை 25, அன்று, முன்னாள் பிரதமர் இந்திரா காந்தியின் மிக நீண்ட தொடர்ச்சியான பதவிக்காலத்தை முறியடித்திருந்தார். இந்திரா காந்தி ஜனவரி 24, 1966 முதல் மார்ச் 24, 1977 வரை, அதாவது 4,077 நாட்கள், தொடர்ச்சியாக பிரதமராக பதவி வகித்தார்.
ருத்ரா எம்-2 ஏவுகணை சோதனை வெற்றி
  • வானிலிருந்து தரையில் உள்ள இலக்கை துல்லியமாக தாக்கி அழிக்கும் திறன்வாய்ந்த ருத்ரா எம்-2 ஏவுகணை, எதிரி நாடுகளின் ரேடியோ அலைவரிசை மற்றும் ரேடார் சிக்னல்களை 300 கிலோ மீட்டர் தொலைவில் இருந்தே கண்டறியும் திறன் கொண்டது.
  • ருத்ரா எம்-2 ஏவுகணை முழுக்க முழுக்க உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்டதாகும். இந்த ஏவுகணை, ஒடிசா மாநிலம் சந்திப்பூர் ஏவுதளத்தில் வெற்றிகரமாகப் பரிசோதிக்கப்பட்டது.
  • சுகோய் போர் விமானத்தின் உதவியுடன் மேற்கொள்ளப்பட்ட இந்தச் சோதனையின் முடிவில், 'ருத்ரா' எம்-2 ஏவுகணை தனது இலக்கைத் துல்லியமாகத் தாக்கியதாகத் தகவல்கள் தெரிவிக்கின்றன.
  • வானத்திலிருந்து தரைப்பகுதி, கடற்பரப்பில் உள்ள எதிரிகளின் ரேடார்கள், தகவல் தொடர்புத் தளவாடங்களை தொலைவிலிருந்தே கண்டறிந்து அழிக்கும் திறன் கொண்டது.
விமான விலை நிர்ணயம் செய்வதற்காக, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களுக்குக்கான விலை நிலைப்படுத்தல் நிதிக்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல் 
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவைக் குழு, திட்டமிடப்பட்ட இந்திய விமான நிறுவனங்களின் உள்நாட்டு மற்றும் சர்வதேச செயல்பாடுகளுக்காக, விமான எரிபொருள் விலையை  நிலைப்படுத்துவதற்கான நடவடிக்கைகளுக்கு ஆதரவை வழங்குவதற்காக, எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு  ரூ.10,000 கோடிக்கு மிகாத ஒருமுறை நிதி ஆதரவை வழங்க ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இந்த நிதி, மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகத்தின் மானியக் கோரிக்கைகள் மூலம், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு வட்டியில்லா முன்பணமாக வழங்கப்படும். 
  • மேற்கு ஆசியாவில் நிலவும் நெருக்கடி காரணமாக, எரிபொருள் விலையில் ஏற்பட்டுள்ள ஏற்ற இறக்கங்களை சந்திக்க விமான நிறுவனங்களுக்கு நிலையான விமான எரிபொருள் விலை நிர்ணயத்தை எளிதாக்கும் வகையில், எண்ணெய் சந்தைப்படுத்தல் நிறுவனங்களுக்கு இந்த நிதியுதவி வழங்கப்படும்.
தேசிய தலைநகர் மண்டல திட்ட வாரியத்தின் திட்டத்திற்கு மத்திய அமைச்சரவைக் குழு ஒப்புதல்
  • பிரதமர் திரு. நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் குழு கூட்டத்தில், தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில், காற்று மாசுவைக் குறைப்பதற்கும், சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்து முறைகளை ஊக்குவிப்பதற்கும், முக்கியத்துவம் வாய்ந்த இரண்டு ஆண்டு காலத் திட்டத்திற்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது. 
  • இத்திட்டத்திற்கான நிதி, மத்திய வீட்டுவசதி மற்றும் நகர்ப்புற விவகாரங்கள் அமைச்சகத்தின் கீழ் செயல்படும் தேசிய தலைநகர் மண்டலத் திட்டமிடல் வாரியம் வாயிலாக வழங்கப்படும். 
  • மேலும், இத்திட்டம், மத்திய சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைகள் அமைச்சகம், மத்திய பெட்ரோலியம் மற்றும் இயற்கை எரிவாயு அமைச்சகம் ஆகியவற்றால் செயல்படுத்தப்படும். 
  • தில்லி, ஹரியானா, ராஜஸ்தான், உத்தரப்பிரதேசம் ஆகிய மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களின் ஒத்துழைப்புடன் இந்த திட்டம் நடைமுறைப் படுத்தப்படும்.
  • மத்திய அரசின் பங்களிப்பாக ரூ.5,041 கோடியும், இத்திட்டத்தில் பங்கேற்கும் மாநிலங்கள் / யூனியன் பிரதேசத்தின் பங்களிப்பாக ரூ.1,601 கோடி மதிப்பிலான வரிச் சலுகைகள் உட்பட, மொத்தம் ரூ.9,585 கோடி நிதி ஒதுக்கீட்டுடன் இத்திட்டம் செயல்படுத்தப்படுகிறது. 
  • தில்லி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் பதிவு செய்யப்பட்டு, பிஎஸ்-IV அல்லது அதற்கு முந்தைய மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு உட்பட்டு இயங்கும் சரக்கு வாகனங்கள், பேருந்துகளின் உரிமையாளர்களை, பிஎஸ்-VI அல்லது மேலும் கடுமையான மாசு உமிழ்வு விதிமுறைகளுக்கு இணங்கக்கூடிய வாகனங்கள் அல்லது மின்சார வாகனங்களாக மாற்றிக்கொள்ள ஊக்குவிப்பதே இத்திட்டத்தின் நோக்கமாகும். 
  • சுற்றுச்சூழலுக்கு உகந்த போக்குவரத்துத் தொழில்நுட்பங்களுக்கு மாறுவதை விரைவுபடுத்துவதன் மூலம், இத்திட்டம் வாகனங்கள் வெளியிடும் புகையின் அளவை கணிசமாகக் குறைத்து, தில்ல, அதனைச் சுற்றியுள்ள பகுதிகள் முழுவதும் காற்றின் தரத்தை மேம்படுத்தப் பெரிதும் உதவிடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
ஒடிசாவில் ராமேஷ்வரிலிருந்து பாரதீப் வரை புதிய கடலோர நெடுஞ்சாலை அமைப்பதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, ஒடிசாவில் ராமேஷ்வரிலிருந்து பாரதீப் வரை புதிய கடலோர நெடுஞ்சாலை அமைப்பதற்கு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. 
  • இது இரண்டு தொகுப்புகளின் கீழ், அரசு தனியார் கூட்டாண்மை மாதிரியில் அமைக்கப்படுகிறது. இதன் மொத்த நீளம் 160.18 கிலோ மீட்டர், இதற்கான மொத்த மூலதனச் செலவு ரூ.8300.79 கோடி ஆகும்.
  • ராமேஷ்வரிலிருந்து பாரதீப் வரையிலான புதிய கடலோர நெடுஞ்சாலையின் திட்டப் பகுதி, ஒடிசாவின் குர்தா, பூரி, கேந்திரபடா, ஜகத்சிங்பூர் மாவட்டங்கள் வழியாக அமைக்கப்படுகிறது. 
  • தற்போதுள்ள தேசிய நெடுஞ்சாலை-16 சாலை கட்டமைப்பு, தங்க நாற்கர சாலையின் ஒரு பகுதியாக இருப்பதுடன், ஏற்கனவே குர்தா, புவனேஸ்வர், கட்டாக் போன்ற முக்கிய நகரங்கள் வழியாகச் செல்லும் 6 வழிச் சாலையாகவும் உள்ளது. தற்போதுள்ள தேசிய நெடுஞ்காலை-316, புவனேஸ்வர்–பூரியை இணைத்து, மேலும் சதாபடா, கோனார்க் வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. 
  • பூரி–சதாபடா, பூரி–கோனார்க் வழித்தடங்களில் தற்போதுள்ள சாலை பழுதடைந்துள்ளது. இந்த வழித்தடத்தில் சுமார் 40% பகுதி சாலை புனரமைப்பு மட்டுமே செய்யப்பட்டிருப்பதாலும், சாலையில் அதிக அளவில் உள்ளூர் பயணிகள் போக்குவரத்து இருப்பதாலும், இந்த வழித்தடம் சீரான நீண்ட தூர வாகனப் போக்குவரத்திற்குப் பொருத்தமற்றதாக உள்ளது.
  • இத்திட்டங்கள் முழுமையாக நிறைவடையும்போது, ராமேஷ்வர் மற்றும் பாரதீப் இடையிலான பயண நேரம் சுமார் 2 மணி நேரம் 30 நிமிடங்கள் குறையும் என எதிர்பார்க்கப்படுகிறது.
மத்தியப் பிரதேசத்தில் 2-வழிச் சாலையை 4-வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • மத்தியப் பிரதேச மாநிலத்தில் அமைந்துள்ள என்ஹெச்-347பி தேசிய நெடுஞ்சாலையின் ஹிவார்கேடி -ரோஷ்னி-ஆஷாபூர்-ருதி பிரிவில் உள்ள இடைநிலைச் சாலையை இருவழிச் சாலையாகத் தரம் உயர்த்துவதற்கும் (125.01 கி.மீ), அதே நெடுஞ்சாலையின் தேஷ்கான் - ஜுல்வானியா பிரிவில் உள்ள இருவழிச் சாலையை 4-வழிச் சாலையாக அகலப்படுத்துவதற்கும் (108.643 கி.மீ) பிரதமர் திரு நரேந்திரமோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான அமைச்சரவைக் குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது. இத்திட்டப் பணிகள் ரூ.4,415.60 கோடி மதிப்பீட்டில் செயல்படுத்தப்பட உள்ளன.
  • இந்தத் தரம் உயர்த்தும் பணிகள் மூலம், பெதுல், கந்த்வா, கர்கோன், பர்வானி ஆகிய மாவட்டங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் நிலவும் கடுமையான போக்குவரத்து நெரிசலுக்குத் தீர்வு காணப்படும். 
  • இத்திட்டத்தின் ஒரு பகுதியாக, கார்கோன் மாவட்டத்தில் 16.20 கி.மீ நீளமுள்ள ஒரு புதிய பசுமை வழி புறவழிச் சாலை அமைக்கப்பட உள்ளது. 
  • இத்திட்டத்தின் மூலம் சராசரி பயண வேகம் அதிகரிக்கும். பயண நேரம் குறையும். மேலும் சாலைப் பாதுகாப்பு, எரிபொருள் பயன்பாட்டுத் திறன், வாகன இயக்கச் செலவுகள் ஆகியவை மேம்படும். இதன் விளைவாக, அப்பகுதியின் போக்குவரத்து வசதியும், சமூக-பொருளாதார வளர்ச்சியும் மேலும் மேம்படும்.
தெலங்கானாவில் ஆர்மூர்-ஜக்டியால்-மஞ்சேரியல் பகுதி, ஜக்டியால்-கரீம்நகர் பகுதியை நான்கு வழிப்பாதையாக விரிவுபடுத்துவதற்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • தெலங்கானாவில், தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்-63-ன் ஆர்மூர்-ஜக்டியால்-மஞ்சேரியல் பகுதியையும், தேசிய நெடுஞ்சாலை என்ஹெச்-563-ன் ஜக்டியால்-கரீம்நகர் பகுதியையும் 4-வழிப்பாதை தரத்திற்கு விரிவுபடுத்துவதற்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு இன்று ஒப்புதல் அளித்துள்ளது. இத்திட்டத்தின் மொத்த நீளம் 190.76 கிலோ மீட்டராகும். இதற்கான செலவு ரூ.7597.16 கோடியாகும்.
  • ஆர்மூர்-ஜக்டியால்-மஞ்சேரியல் திட்டப் பகுதியானது தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத், ஜக்டியால், மஞ்சேரியல் மாவட்டங்கள் வழியாக அமைகிறது. இச்சாலைப் பகுதியில் அமைந்துள்ள அன்க்சாபூர், கோருட்லா, ஜக்டியால், தர்மபுரி, லக்ஷெட்டிப்பேட்டை, மஞ்சேரியல் ஆகிய இடங்கள் குடியிருப்பு, வணிகப் பகுதிகள் காரணமாக, தற்போது கடும் போக்குவரத்து நெரிசல் ஏற்படுகிறது. 
  • அதேபோல், ஜக்டியால்-கரீம்நகர் திட்டப் பகுதியானது ஜக்டியால், போத்தாரம், கங்காதரா கரீம்நகர் போன்ற கடும் போக்குவரத்து நெரிசல், அதிகப்படியான கட்டுமானங்கள் நிறைந்த பகுதிகள் வழியாகச் செல்கிறது.
  • இத்திட்டங்கள் 4-வழிப்பாதை அமைப்பில் உருவாக்கப்படவுள்ளன. குடியிருப்பு, வணிகப் பகுதிகளைச் சுற்றிச் செல்லும் வகையில் புறவழிச் சாலைகளும் இதில் அமைக்கப்படும். மேலும், கட்டணமில்லா சுங்கச்சாவடியும் அமைக்கப்படவுள்ளது. 
  • இத்திட்டத்தின் மூலம், மணிக்கு 100 கிலோ மீட்டர் வேகத்தில் பயணிக்கும் வகையிலான சாலை வடிவமைப்பு உறுதி செய்யப்படுவதுடன், தெலங்கானா மாநிலத்தின் நிஜாமாபாத், ஜக்டியால், மஞ்சேரியல், கரீம்நகர் ஆகிய மாவட்டங்களில் பயணத் திறனும் மேம்படுத்தப்படும்.  
பீகாரில் உள்ள ககாரியா-பூர்னியா பகுதியை (143.529 கி.மீ.) ரூ.3936.05 கோடி செலவில் 4-வழிச்சாலையாகத் தரம் உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக் குழு, பீகாரில் உள்ள என்ஹெச்-31, என்ஹெச்-231-ன் ககாரியா-பூர்னியா பகுதியை (143.529 கிலோ மீட்டர்) ரூ.3936.05 கோடி செலவில் சுங்கக் கட்டண முறையில் 4-வழிச்சாலையாகத் தரம் உயர்த்த இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
  • இதன் மூலம் ககாரியா, பகல்பூர், கதிஹார், பூர்னியா மாவட்டங்களில் உள்ள குடியிருப்புப் பகுதிகளில் போக்குவரத்து நெரிசல் நீங்கும். இந்தத் திட்டத்தின் ஒரு பகுதியாக, பூர்னியா நகரின் 6.729 கி.மீ நீளமுள்ள விரிவாக்கப்பட்ட பசுமைவழி புறவழிச்சாலை உருவாக்கப்படும். 
  • இத்திட்டம் சராசரி பயண வேகத்தை அதிகரித்து, பயண நேரத்தை சுமார் இரண்டு மணி நேரமாகக் குறைத்து, ஒட்டுமொத்த சாலைப் பாதுகாப்பு, எரிபொருள் சிக்கனம், வாகன இயக்கச் செலவுகளை மேம்படுத்தும். இதன் மூலம் பிராந்தியப் போக்குவரத்து, சமூக-பொருளாதார வளர்ச்சி மேம்படும்.
  • இத்திட்டம் பீகார் முழுவதும் உள்ள முக்கிய சரக்குப் போக்குவரத்து மையங்களுக்குத் தடையற்ற போக்குவரத்து வசதியை அளிக்கிறது. 
  • மேலும், இந்த மேம்படுத்தப்பட்ட வழித்தடமானது, ஒரு ஜவுளித் தொகுப்பு, இரண்டு பெரிய உணவுப் பூங்கா, இரண்டு மீன்பிடி கடல் உணவுப் பூங்கா, நான்கு முக்கிய ரயில் நிலையங்கள், ஒரு விமான நிலையம், நான்கு தேசிய நெடுஞ்சாலைகள், இரண்டு துணை நெடுஞ்சாலைகள் ஆகியவற்றை இணைப்பதன் மூலம் பல்முனைப் போக்குவரத்து ஒருங்கிணைப்பை மேம்படுத்தி, இப்பிராந்தியம் முழுவதும் சரக்குகள், பயணிகளின் விரைவான போக்குவரத்தை எளிதாக்கும். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel