Type Here to Get Search Results !

உலக சுற்றுச்சூழல் தினம் / WORLD ENVIRONMENT DAY

 

TAMIL

 • இயற்கை வளங்களான நீர்நிலைகள், காடுகள், வன உயிரினங்கள், வளிமண்டலம், பறவைகள், சோலைகள், கடற்கரைகள், மனிதர்கள் உள்பட அனைத்து உயிரினங்களும் வாழ இன்றியமையாதது.
 • சுற்றுசூழல் சமநிலை என்பது மனிதர்கள், விலங்குகள், பறவைகள், தாவரங்கள், கடல்வாழ் உயிரினங்கள் போன்றவற்றின் நல்வாழ்விற்கு அவசியமானது. இந்த சமநிலையில் ஏற்படும் மாற்றங்கள் சுற்றுச்சூழலை மட்டுமன்றி, உயிரினங்களின் வாழ்வுக்கும் அச்சுறுத்தலாகவும் ஆபத்தாகவும் அமையும்.
 • வளர்ச்சி என்பது தவிர்க்க முடியாத ஒன்று. மனிதன் நாகரிகம் என்ற ஓன்றை உருவாக்கத் தொடங்கியதிலிருந்தே வளர்ச்சி அதன் அங்கமாக மாறிவிட்டது. 
 • மாற்றம் நன்மையை மட்டும் கொடுக்காது. நவீன விஞ்ஞான, தொழில்நுட்ப, தொழில்துறை வளர்ச்சியின் காரணமாக சுற்றுச்சூழல் மாசடைகிறது. 
 • ரசாயனக் கழிவுகள், புகை என்பன நீர் நிலைகள், வளிமண்டலம் போன்றவற்றை மாசுபடுத்துவதால் அவற்றை உள்ளிழுத்து வாழும் உயிரினங்களுக்கு ஆபத்து ஏற்படுகிறது.
 • விதைத்தவன் அதன் பலனை அறுக்கத்தானே வேண்டும். மாசுப்பொருட்களை சுற்றுசூழலில் கலந்தவன் அதன் விளைவுகளை அனுபவிக்கவும் வேண்டும். 
 • அப்படித் தான் கடந்த நூற்றாண்டுகளில் சுற்றுசூழல் மாசின் விளைவுகளான புவி வெப்பமயமாதல், அதனால் ஏற்படும் வானிலை மாற்றம், பஞ்சம், வெள்ளம், பனிச்சறுக்கு, காலநிலை மாற்றம், நோய்பரவல் என்று மனித இனம் சந்தித்து வருகிறது. 
 • இது மனிதனை மட்டும் பாதிக்காமல் ஒட்டு மொத்த உயிரினக் கூட்டத்தையே பாதிக்கிறது. அருகிவரும் உயிரினங்கள் பட்டியலில் உள்ள உயிரினங்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்துக்கொண்டே இருக்கிறது.
 • மரங்களுக்கும், மனிதர்களுக்கும் இடையிலான உறவு மிகவும் முக்கியமானதாகும். மனிதனின் இருப்புக்கு மரங்கள் அத்தியாவசியம், அவை இல்லையெனில் நாம் சுவாசிக்க காற்று கிடைக்காது. வெப்பநிலை சமன்படுத்தும் முக்கிய பணியை மரங்கள் தான் செய்கின்றன. 
 • ஆண்டுக்கு சராசரியாக பூமி 1°Cவரை வெப்பமானால் பூமி தாங்கும். ஆனால் இன்றைய உலகின் நகரமயமாதல், காடுகள் அழிப்பால் 2°C வரை வெப்பம் அதிகரிக்கிறது. 
 • இதைத்தடுக்க கார்பன் கிரெடிட் என்ற பெயரில் பசுமையில்ல வாயு வெளியேற்றலைக் குறைத்து வருகிறது ஐக்கிய நாடுகளின் சுற்றுசூழல் மேம்பாட்டு மையம். எனவே காடுகள் அழிக்கப்படுவதை தடுக்க வேண்டும்.
 • ஜூன் 5, உலக சுற்றுச்சூழல் தினம், பருவநிலை மாற்றம் குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தவும், சுற்றுச்சூழலை மேம்படுத்தும் செயல்களில் ஈடுபடுவதை ஊக்குவிக்கவும் ஆண்டுந்தோறும் சுற்றுச் சூழல் தினம் கொண்டாடப்படுகிறது.
 • உலகெங்கும் வெப்பம் அதிகரித்து வரலாம், ஆனால் அதன் தாக்கத்தை எல்லோரும் ஒரே மாதிரியாக உணர்வதில்லை. இதேபோலதான் பருவநிலை மாற்றம் ஏற்படுத்தும் பாதிப்புகளும் உள்ளன என்று ஆய்வு ஒன்று சுட்டிக்காட்டுகிறது.
எந்த ஆண்டு முதல் உலக சுற்றுச்சூழல் தினம் அனுசரிக்கப்படுகிறது?
 • 1972-ஆண்டு சுவீடன் தலைநகரான ஸ்ரொக்ஹோமில் நடைபெற்ற ஐக்கிய நாடுகள் சபையின் மனித குடியிருப்பும், சுற்றுச்சூழலும் என்ற வரலாற்று புகழ்மிக்க உலக மாநாட்டு நடைபெற்றது. சுற்றுச்சூழல் பாதுகாப்பின் அவசநிலை கருதி, ஜுன் 5-ந் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக அறிவித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
 • 1974ஆம் ஆண்டிலிருந்து ஒவ்வோர் ஆண்டும் ஜூன் மாதம் 5ஆம் தேதி உலக சுற்றுச்சூழல் தினமாக கொண்டாடப்படுகிறது.
2021ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்
 • 2021ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தினத்துக்கான கருப்பொருளாக `சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு' என ஐக்கிய நாடுகள் சபை அறிவித்துள்ளது.
 • சுற்றுச்சூழல் அமைப்பின் மறுசீரமைப்பு என்பது, சுற்றுச்சூழல் மோசமடைவதை தடுப்பது, அம்மாதிரியான செயல்களை நிறுத்துவது மற்றும் ஏற்பட்ட பாதிப்புகளை சரி செய்ய பணியாற்றுவது என ஐநா தெரிவித்துள்ளது.
 • எனவே தான் இந்த வருடத்திற்கான கருப்பொருளாக "மறுமுறை யோசிப்பது. மீண்டும் உருவாக்குவது, பாதுகாப்பது" என்பதை நிறுவி உள்ளதாக ஐநா தெரிவித்துள்ளது.
 • கடந்த வருடம் 'பல்லுயிர்ப் பெருக்கத்தை' ஐக்கிய நாடுகள் சபை கருப்பொருளாக அறிவித்திருந்தது.
2022ஆம் ஆண்டுக்கான கருப்பொருள்
 • இந்த ஆண்டு உலக சுற்றுச்சூழல் தினக் கொண்டாட்டத்திற்கான கருப்பொருள் 'ஒரே ஒரு பூமி.' அறியப்பட்ட அனைத்து விண்மீன் திரள்கள், நட்சத்திர கூட்டங்கள் மற்றும் கிரகங்களில், பூமி மட்டுமே உயிர்களை ஆதரிக்கிறது என்ற உண்மையை இக்கருப்பொருள் அடிக்கோடிட்டுக் காட்டுகிறது. 
 • மனித செயல்கள் நமது சுற்றுச்சூழலுக்கு மாற்ற முடியாத சேதத்தை ஏற்படுத்துவதால், நமது உயிர்க்கோளத்திற்கு மேலும் சேதம் ஏற்படுவதைக் குறைக்க அல்லது தடுக்க வேண்டிய அவசரத் தேவை உள்ளது என்பதை நினைவுறுத்துகிறது.
ENGLISH
 • Natural resources such as water bodies, forests, wildlife, atmosphere, birds, oases, beaches, all living things including humans are essential for survival.
 • Ecological balance is essential for the well-being of humans, animals, birds, plants, and marine life. Changes in this balance can threaten and endanger not only the environment but also the lives of living things.
 • Growth is inevitable. Development has been a part of human civilization since its inception.
 • Change does not only bring benefits. Environmental pollution due to modern scientific, technological and industrial developments.
 • Chemical wastes and fumes pollute water bodies and the atmosphere, endangering the organisms that inhale them.
 • The sower must reap its fruits. Anyone who mixes pollutants into the environment must experience its effects.
 • That is how in the last centuries the human race has been experiencing the effects of environmental pollution such as global warming, climate change, famine, flooding, skiing, climate change, and disease.
 • It affects not only humans but the entire organism as a whole. The number of endangered species is increasing day by day.
 • The relationship between trees and humans is very important. Trees are essential for human existence, otherwise we would not have air to breathe. Trees do the main job of balancing the temperature.
 • The Earth can withstand temperatures of up to 1 ° C on average per year. But in today's world of urbanization, deforestation is increasing the temperature to 2 C.
 • To prevent this, the United Nations Environment Program is reducing carbon emissions in the name of carbon credit. Therefore, deforestation must be prevented.
 • June 5, World Environment Day, is celebrated annually to raise awareness about climate change and to encourage people to engage in activities that promote the environment.
 • Global warming may be on the rise, but not everyone feels the same way. One study suggests that there are similar effects of climate change.
Since which year is World Environment Day observed?
 • The historic 1972 United Nations Conference on Human Habitat and the Environment was held in Stockholm, Sweden. Considering the urgency of environmental protection, the resolution was passed declaring June 5 as World Environment Day.
 • World Environment Day has been celebrated on June 5 every year since 1974.
Theme for 2021
 • The United Nations has declared the theme for Environment Day 2021 as 'Restructuring of the Ecosystem'.
 • The UN says the restoration of the ecosystem is aimed at preventing environmental degradation, halting such activities and repairing the damage caused.
 • That is why the UN says the theme for this year is "Rethinking. Re-creating, Preserving".
 • Last year, the United Nations announced the theme of 'Biodiversity'.
Theme for 2022
 • The theme for this year's World Environment Day celebration is 'Only One Earth.' This theme underscores the fact that of all known galaxies, galaxies, and planets, only Earth supports life.
 • It is a reminder that there is an urgent need to reduce or prevent further damage to our biosphere as human actions cause irreversible damage to our environment.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel