//
Type Here to Get Search Results !

3rd JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

3rd JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக டிகே சிவக்குமார் பதவியேற்பு
  • கர்நாடகாவின் புதிய முதல் அமைச்சராக இன்று டிகே சிவக்குமார் பதவியேற்றார். கர்நாடகா ஆளுநர் மாளிகையில் நடந்த விழாவில் டிகே சிவக்குமாருக்கு கர்நாடகா ஆளுநர் தாவர் சந்த் கெலாட் பதவி பிரமாணம் மற்றும் ரகசிய காப்பு பிரமாணம் செய்து வைத்தார்.
  • டிகே சிவக்குமாருடன் மொத்தம் 13 பேர் பதவியேற்று கொண்டனர். இதில் ஒருவர் துணை முதல்வராகி உள்ளார். மற்ற 12 பேர் அமைச்சர்களாக செயல்பட உள்ளனர். அமைச்சர்களுக்கு இன்னும் இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்படவில்லை.
  • இதையடுத்து அமைச்சர்களாக கேஎச் முனியப்பா, கேஜே ஜார்ஜ், எம்பி பாட்டீல், ராமலிங்க ரெட்டி, சதீஷ் ஜார்கிகோளி, கிருஷ்ணபைரே கவுடா , பிரியங்க் கார்கே (காங்கிரஸ் தேசிய தலைவர் மல்லிகார்ஜுன கார்கேவின் மகன்), யுடி காதர், ஈஸ்வர் காண்ட்ரே, யதீந்திரா சித்தராமையா (முன்னாள் முதல்வர் சித்தராமையாவின் மகன்), பைரதி சுரேஷ், ஷரண் பிரகாஷ் பாட்டீல் உள்ளிட்டோர் பதவியேற்று கொண்டனர்
ஐ.நா. சபையின் தலைவராகிறார் வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரக்மான்
  • ஐக்கிய நாடுகள் சபையின் 81 வது அவையின் தலைவருக்கான தேர்தல் நேற்று (02-06-26) நடைபெற்றது. இந்த தேர்தலில் தலைவர் பதவிக்கு வங்கதேச வெளியுறவுத்துறை அமைச்சர் கலிலூர் ரக்மான் மற்றும் சிப்ரஸ் நாட்டின் சிறப்புப் பிரதிநிதி ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் ஆகியோர் போட்டியிட்டனர்.
  • 193 நாடுகளை உறுப்பினர்களாகக் கொண்ட இந்த அவைக்கு, தலைமை வகிப்பதற்கு நடத்தப்பட்ட இந்த தேர்தலில் 190 நாடுகளின் பிரதிநிதிகள் வாக்களித்தனர். இந்த தேர்தலில், வங்கதேசத்தின் கலிலூர் ரக்மான் 99 வாக்குகளைப் பெற்றுப் பெற்றுள்ளார்.
  • இவரை எதிர்த்துப் போட்டியிட்ட சப்ரஸ் நாட்டின் ஆண்ட்ரியாஸ் கக்கூரிஸ் 91 வாக்குகளைப் பெற்றுத் தோல்வியடைந்தார். இந்த தேர்தலில் பெரும்பான்மைக்கு 96 வாக்குகள் பெற வேண்டியது அவசியம் என்பது குறிப்பிடத்தக்கது.
  • இந்நிலையில், வரும் செப்டம்பர் மாதம் முதல் தொடங்கும் ஐக்கிய நாடுகள் சபையின் 81 வது அவைக்கு கலிலூர் ரக்மான் தலைவராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel