//
Type Here to Get Search Results !

2nd JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

2nd JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

ஜல் ஜீவன் மிஷன் 2.0 செயல்படுத்துவதற்காக தமிழக அரசுக்கும், மத்திய அரசுக்கும் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம்
  • தமிழக முதல்வர் ச.ஜோசப் விஜய் இன்று (ஜூன் 2) சென்னை, தலைமைச் செயலகத்திலிருந்தும், ஒன்றிய அரசின் ஜல் சக்தித் துறை அமைச்சர் சி.ஆர்.பாட்டீல் புது டெல்லியிலிருந்தும் காணொலிக் காட்சி வாயிலாகக் கலந்துகொண்ட கூட்டத்தில், அவர்கள் முன்னிலையில் உயிர் நீர் இயக்கம் (ஜல் ஜீவன் மிஷன்) 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்துக்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்திடப்பட்டது.
  • ஜீவன் மிஷன் 2.0 திட்டத்தின் நீட்டிக்கப்பட்ட செயலாக்கக் காலத்திற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் இன்று கையெழுத்திடப்பட்டதன் மூலம், ஒன்றிய அரசின் குடிநீர் மற்றும் சுகாதாரத் துறையால் தமிழ்நாட்டிற்கு வழங்கப்பட வேண்டிய தொகையில் முதற்கட்டமாக ரூ.2,177.27 கோடி நிதி கிடைக்கப் பெறும்.
  • ஜல் ஜீவன் மிஷன் திட்டம் 2028-ஆம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டிருப்பது, கிராமப்புறங்களில் உள்ள அனைத்துக் குடும்பங்களுக்கும் பாதுகாப்பான, போதுமான மற்றும் நிலையான குடிநீர் வழங்கலை உறுதி செய்வதில் ஒன்றிய அரசும் தமிழ்நாடு அரசும் கொண்டுள்ள தொடர்ச்சியான உறுதிப்பாட்டை மீண்டும் வலியுறுத்துகிறது.
2026 மே மாதத்தில் ரூ. 1,94,000 கோடி ஜிஎஸ்டி வரி வசூல்
  • மத்திய நிதி அமைச்சகம் வெளியிட்டுள்ள அதிகாரப்பூர்வ புள்ளிவிவரங்களின்படி, சரக்கு மற்றும் சேவை வரி வசூல் கடந்த மே மாதத்தில் 3.2 சதவீதம் உயர்ந்து ரூ.1.94 லட்சம் கோடியை தாண்டியுள்ளதாக மத்திய அரசின் தரவுகள் தெரிவிக்கின்றன.
  • உள்நாட்டு பரிவர்த்தனைகள் மற்றும் இறக்குமதி மூலம் வருவாய் அதிகரித்ததே இந்த வளர்ச்சிக்கான முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது.
  • மே மாதத்தில் சிஜிஎஸ்டி ரூ.37,397 கோடி, எஸ்ஜிஎஸ்டி ரூ.45,143 கோடி, ஐஜிஎஸ்டி ரூ.51,990 கோடி வசூலாகியுள்ளது. இறக்குமதி மூலம் கிடைத்த ஐஜிஎஸ்டி வருவாய் மட்டும் 19.1 சதவீதம் உயர்ந்து ரூ.59,654 கோடியாக உள்ளது.
  • திருப்பி வழங்கப்பட்ட தொகைகளை கழித்த பிறகு, நிகர ஜிஎஸ்டி வருவாய் ரூ.1.67 லட்சம் கோடியாக உயர்ந்துள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel