//
Type Here to Get Search Results !

நடப்பு ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த 100 விமான நிலையங்களின் பட்டியல் / SKYTRAX WORLD AIRPORT AWARDS 2026

  • நடப்பு ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த 100 விமான நிலையங்களின் பட்டியல் / SKYTRAX WORLD AIRPORT AWARDS 2026: சர்வதேச விமான போக்குவரத்து தரவரிசை அமைப்பான ஸ்கைட்ராக்ஸ் (Skytrax World Airport Awards 2026) வெளியிட்டுள்ள நடப்பு ஆண்டிற்கான உலகின் மிகச்சிறந்த 100 விமான நிலையங்களின் பட்டியலில், இந்தியாவின் 5 முன்னணி விமான நிலையங்கள் இடம்பிடித்து அசத்தியுள்ளன.
  • இந்தியாவின் மிக உயர்ந்த தரவரிசை கொண்ட விமான நிலையமாக டெல்லி ஏர்போர்ட் முதலிடம் பிடித்துள்ளது. கடந்த ஆண்டை விட 4 இடங்கள் முன்னேறி 28-வது இடத்தைப் பிடித்துள்ள இது, "இந்தியா மற்றும் தெற்காசியாவின் மிகச்சிறந்த விமான நிலையம்" என்ற விருதையும் தட்டிச் சென்றுள்ளது.
  • தோட்ட நகரம் (Garden City) என்றழைக்கப்படும் பெங்களூரின் இயற்கை அழகைப் பிரதிபலிக்கும் 'டெர்மினல் 2' சுற்றுச்சூழல் நட்பு கட்டடக் கலைக்காகப் பாராட்டப்பட்டு, உலகளவில் 41-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • பயணிகளை விரைவாகக் கையாளும் திறன், டிஜிட்டல் தொழில்நுட்பப் பயன்பாடு ஆகியவற்றில் சிறந்து விளங்கி 43-வது இடத்தைக் கைப்பற்றியுள்ளது.
  • சுற்றுலாப் பயணிகளின் வருகை அதிகரிப்பு மற்றும் புதிய உள்கட்டமைப்பு வசதிகளால், கோவாவின் புதிய விமான நிலையம் உலக அரங்கில் 64-வது இடத்தை எட்டியுள்ளது.
  • மும்பையின் 'டெர்மினல் 2' உலகளவில் "வாழும் அருங்காட்சியகம்" என்று கொண்டாடப்படுகிறது. இந்தியாவின் பாரம்பரிய கலைப் படைப்புகள், அதிவேக லக்கேஜ் சிஸ்டம் மற்றும் பிரீமியம் ஷாப்பிங் வசதிகளுடன் சர்வதேச வணிகப் பயணிகளின் ஃபேவரிட் இடமாக மாறி 66-வது இடத்தைப் பிடித்துள்ளது.
  • சர்வதேச அளவில் சிங்கப்பூரின் சாங்கி விமான நிலையம் 14-வது முறையாக உலகின் மிகச்சிறந்த விமான நிலையத்திற்கான முதலிடத்தைத் தக்கவைத்துக் கொண்டுள்ளது.

2026-ஆம் ஆண்டின் உலகின் டாப் 10 விமான நிலையங்கள்

  1. சாங்கி ஏர்போர்ட் - சிங்கப்பூர்
  2. இன்சியான் ஏர்போர்ட் - சியோல், தென்கொரியா
  3. ஹனேடா ஏர்போர்ட் - டோக்கியோ, ஜப்பான்
  4. ஹாங்காங் சர்வதேச ஏர்போர்ட் - ஹாங்காங்
  5. நரிடா ஏர்போர்ட் - டோக்கியோ, ஜப்பான்
  6. சார்லஸ் டி கோல் ஏர்போர்ட் - பாரிஸ், பிரான்ஸ்
  7. லியோனார்டோ டா வின்சி ஏர்போர்ட் - ரோம், இத்தாலி
  8. இஸ்தான்புல் ஏர்போர்ட் - துருக்கி
  9. மியூனிக் சர்வதேச ஏர்போர்ட் - ஜெர்மனி
  10. வான்கூவர் சர்வதேச ஏர்போர்ட் - கனடா

ENGLISH

  • SKYTRAX WORLD AIRPORT AWARDS 2026: In the list of the world's top 100 airports for the current year released by Skytrax (Skytrax World Airport Awards 2026), the international air transport rating organization five of India's leading airports have secured a place, making a remarkable impression.
  • Delhi Airport has emerged as India's highest-ranked airport, taking the top spot within the country. Advancing four places from the previous year to secure the 28th position globally, it has also clinched the prestigious title of "Best Airport in India and South Asia."
  • Reflecting the natural beauty of Bengaluru known as the "Garden City" 'Terminal 2' has been lauded for its eco-friendly architecture, securing the 41st position worldwide.
  • Excelling in the efficient handling of passengers and the utilization of digital technology, it has successfully captured the 43rd spot.
  • Driven by an increase in tourist arrivals and the introduction of new infrastructure facilities, Goa's new airport has reached the 64th position on the global stage.
  • Mumbai's 'Terminal 2' is celebrated globally as a "Living Museum." Featuring traditional Indian art masterpieces, a high-speed baggage handling system, and premium shopping amenities, it has become a favorite destination for international business travelers, securing the 66th position.
  • On the international stage, Singapore's Changi Airport has retained the top spot as the world's best airport for the 14th time.

World's Top 10 Airports of 2026

  1. Changi Airport – Singapore
  2. Incheon Airport – Seoul, South Korea
  3. Haneda Airport – Tokyo, Japan
  4. Hong Kong International Airport – Hong Kong
  5. Narita Airport – Tokyo, Japan
  6. Charles de Gaulle Airport – Paris, France
  7. Leonardo da Vinci Airport – Rome, Italy
  8. Istanbul Airport – Turkey
  9. Munich International Airport – Germany
  10. Vancouver International Airport – Canada

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel