
1st JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
உச்ச நீதிமன்றத்திற்கு 5 புதிய நீதிபதிகள் நியமனம்
- இந்திய உச்ச நீதிமன்றத்தில் நிலவி வரும் வழக்குச் சுமைகளைக் குறைக்கவும், காலிப்பணியிடங்களை விரைந்து நிரப்பவும் ஐந்து புதிய நீதிபதிகளை நியமித்து மத்திய அரசு இன்று (ஜூன் 1, திங்கள்கிழமை) அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
- இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்பை மத்திய சட்டம் மற்றும் நீதித்துறை இணையமைச்சர் (தனிப் பொறுப்பு) அர்ஜுன் ராம் மேக்வால் அவர்கள் தனது எக்ஸ் (X) சமூக வலைதளப் பக்கத்தில் முறைப்படி வெளியிட்டுள்ளார்.
- அதன்படி, உச்ச நீதிமன்றத்தின் புதிய நீதிபதிகளாகப் பொறுப்பேற்க உள்ளவர்களின் விவரங்கள் பின்வருமாறு:
- நீதிபதி ஷீல் நாகு: பஞ்சாப் மற்றும் ஹரியாணா உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
- நீதிபதி ஸ்ரீ சந்திரசேகர்: மும்பை உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
- நீதிபதி சஞ்சீவ் சச்தேவா: மத்தியப் பிரதேச உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
- நீதிபதி அருண் பல்லி: ஜம்மு காஷ்மீர் மற்றும் லடாக் உயர் நீதிமன்றத்தின் தலைமை நீதிபதி.
- மூத்த வழக்கறிஞர் வி. மோகனா: உச்ச நீதிமன்றத்தின் மூத்த பெண் வழக்கறிஞரான வெங்கட சுப்ரமணி மோகனா.
- முன்னதாக, உச்ச நீதிமன்றத்தில் தலைமை நீதிபதி உட்பட மொத்தம் 34 நீதிபதிகள் மட்டுமே பணியாற்ற அனுமதி இருந்த சூழலில், கடந்த மே 5-ஆம் தேதி கூடிய மத்திய அமைச்சரவை இக்கூட்டமைப்பின் மொத்த எண்ணிக்கையை 38 ஆக உயர்த்தி வரலாற்றுச் சிறப்புமிக்க ஒப்புதலை வழங்கியிருந்தது.
- தற்போது இந்த 5 புதிய நீதிபதிகளின் சேர்க்கை மூலம் உச்ச நீதிமன்ற நீதிபதிகளின் ஒட்டுமொத்த எண்ணிக்கை 37 ஆக உயர்கிறது.
- தமிழகத்தின் கோயம்புத்தூரில் ஒரு எளிய பின்னணியில் பிறந்த வி. மோகனா, தற்போது உச்சநீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டுள்ளதன் மூலம், வழக்கறிஞரிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண் என்ற வரலாற்றை பெற்றிருக்கிறார்.
- 1983-ல் அறிமுகப்படுத்தப்பட்ட 5 ஆண்டு சட்டப் படிப்பின் முதல் பேட்ச் மாணவியான இவர், கோவை சட்டக் கல்லூரியில் தனது சட்டப்படிப்பை முடித்தார். தொடர்ந்து, 1980-களின் இறுதியில் கோவை மாவட்ட நீதிமன்றங்களில் தனது பணியைத் தொடங்கினார்.
- பெண் ராணுவ அதிகாரிகளுக்கு நிரந்தர ஆணையம் (Permanent Commission) வழங்க வேண்டும் என்ற வழக்கில் வாதாடி அவர் முன்வைத்த வாதங்கள் தான்.
- இது பலரது கவனத்தை பெற்றதுடன் இந்த வழக்கின் தீர்ப்பு, இந்திய ராணுவத்தில் பாலின சமத்துவத்துக்கான முக்கிய முன்னேற்றமாகக் கருதப்படுகிறது. அவரது சட்டத் திறமையை அங்கீகரித்து, 2015-ல் உச்சநீதிமன்றம் இவரை 'மூத்த வழக்கறிஞர்' ஆக அங்கீகரித்தது.
- வழக்கமாக உயர்நீதிமன்ற நீதிபதிகளே உச்சநீதிமன்றத்திற்கு உயர்த்தப்படுவார்கள். ஆனால், வழக்கறிஞர் பணியிலிருந்து நேரடியாக உச்சநீதிமன்ற நீதிபதியாவது மிகவும் அரிதான ஒன்று.
- நீதிபதி இந்து மல்ஹோத்ராவிற்குப் பிறகு, இந்த வழியில் நீதிபதியாகும் இரண்டாவது பெண் மோகனா ஆவார். அதேசமயம், தமிழ்நாட்டில் இருந்து உச்சநீதிமன்ற நீதிபதியாகும் இரண்டாவது பெண்ணும் இவர்தான்.
- ஐபிஎல் தொடரின் இறுதிப் போட்டியில் நேற்று அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் நடப்பு சாம்பியனான ஆர்சிபி, 2022-ம் ஆண்டு சாம்பியனான குஜராத் டைட்டன்ஸ் அணியுடன் மோதியது.
- டாஸ் வென்ற ஆர்சிபி அணியின் கேப்டன் ரஜத் பட்டிதார் பீல்டிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட் செய்த 20 ஓவர்கள் முடிவில் குஜராத் டைட்டன்ஸ் அணி 8 விக்கெட்கள் இழப்புக்கு 155 ரன்கள் எடுத்தது.
- இதையடுத்து 156 ரன்கள் இலக்குடன் பேட் செய்த ஆர்சிபி அணி 18 ஓவர்களில் 5 விக்கெட்கள் இழப்புக்கு 161 ரன்கள் எடுத்து வெற்றி பெற்றது.
- விராட் கோலி 42 பந்துகளில், 3 சிக்ஸர்கள், 9 பவுண்டரிகளுடன் 75 ரன்களும், ஜிதேஷ் சர்மா 14 பந்துகளில், 11 ரன்களும் சேர்த்து களத்தில் இருந்தனர்.
- 5 விக்கெட்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற ஆர்சிபி அணி சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்டது. இதன் மூலம் ஐபிஎல் வரலாற்றில் சாம்பியன் பட்டத்தை தக்கவைத்துக் கொண்ட 3-வது அணி என்ற பெருமையை ஆர்சிபி அணி பெற்றது.
- சிங்கப்பூர் ஓபன் சர்வதேச பேட்மிண்டன் போட்டி அங்குள்ள உள்விளையாட்டு அரங்கில் நடந்து வருகிறது. விறுவிறுப்பாக நடைபெற்ற இறுதிப்போட்டியில் இந்தோனேசியாவின் ஃபஜார் அல்ஃபியான் - முகமது ஃபிக்ரி ஜோடியை இந்திய ஜோடி வீழ்த்தியது.
- சுமார் 1 மணி நேரம் 13 நிமிடங்கள் நீடித்த இந்த விறுவிறுப்பான ஆட்டத்தில், இந்தோனேசியா ஜோடியை 18-21, 21-17, 21-16 என்ற கணக்கில் இந்திய ஜோடி வீழ்த்தியது.
- இந்த வெற்றியின் மூலம் சிங்கப்பூர் ஓபன் பட்டத்தைக் கைப்பற்றிய முதல் இந்திய ஆடவர் இரட்டையர் ஜோடி என்ற பெருமையை இவர்கள் பெற்றுள்ளனர்.

