//
Type Here to Get Search Results !

18th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

18th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

17வது தமிழ்நாடு சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடர்
  • தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையில், 17வது சட்டப்பேரவையின் முதல் கூட்டத் தொடரைத் தமிழ்நாடு ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் இன்று (18.06.2026) தொடங்கி வைத்து உரையாற்றினார்.
  • இதனையடுத்து தமிழ்நாடு சட்டமன்றப் பேரவையின் கூட்டத்தொடர் நிகழ்ச்சி நிரலைச் செயலாளர் இரா. சாந்தி வெளியிட்டிருந்தார்.
  • அதன்படி ஜூன் 19ஆம் தேதியான நாளை (வெள்ளிக்கிழமை) சட்டமன்றப் பேரவையின் முன்னாள் உறுப்பினர்கள் மறைவு குறித்து இரங்கற் குறிப்புகளும், இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் முதுபெரும் தலைவர் தோழர் நல்லகண்ணு, சட்டமன்றப் பேரவை முன்னாள் செயலாளர் சி.கு. இராமசாமி, பிரபல திரைப்படத் தயாரிப்பாளர்கள் ஆர்.பி. சௌத்ரி, கே. ராஜன் மற்றும் பிரபல திரைப்பட இயக்குநர் பாரதிராஜா ஆகியோரின் மறைவுக்கு இரங்கல் தீர்மானங்களும் நிறைவேற்றப்பட உள்ளன. அதனைத் தொடர்ந்து, ஆளுநர் உரைக்கு நன்றி தெரிவிக்கும் தீர்மானம் முன்மொழியப்பட்டு விவாதம் தொடங்கப்பட உள்ளது.
அமெரிக்கா - ஈரான் இடையே அமைதி ஒப்பந்தம் கையெழுத்து
  • பிரான்சின் வெர்சாய்ஸ் அரண்மனையில் நடைபெற்ற ஜி7 (G7) உச்சிமாநாட்டின் இடையே, அமெரிக்க அதிபர் டொனால்ட் டிரம்ப் மற்றும் ஈரான் அதிபர் மசூத் பெசெஷ்கியான் ஆகியோர் போரை நிறுத்தவும், ஈரானின் அணுசக்தித் திட்டம் குறித்த பேச்சுவார்த்தைகளை மீண்டும் தொடங்கவும் வழிவகை செய்யும் வரலாற்றுச் சிறப்புமிக்க புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளனர்.
  • உடனடியாக அமலுக்கு வந்துள்ள இந்த இடைக்கால ஒப்பந்தத்தின்படி, ஈரான் தனது செறிவூட்டப்பட்ட யுரேனியம் இருப்பைக் கணிசமாகக் குறைக்க ஒப்புக்கொண்டுள்ளது. 
  • இதற்குப் பிரதிபலனாக, வாஷிங்டன் ஈரான் மீதான சில கடுமையான பொருளாதாரத் தடைகளைத் தளர்த்தியுள்ளது. இதன் மூலம் ஈரான் தனது கச்சா எண்ணெயைச் சர்வதேச சந்தையில் எவ்விதக் கட்டுப்பாடுகளும் இன்றி தாராளமாக விற்க அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. 
  • மேலும், போரினால் பாதிக்கப்பட்ட ஈரானின் மறுசீரமைப்புப் பணிகளுக்காகக் குறைந்தபட்சம் 300 பில்லியன் டாலர் நிதியுதவி வழங்கவும், ஈரானின் முடக்கப்பட்ட சொத்துக்களைத் திரும்ப ஒப்படைக்கவும் அமெரிக்கா இணங்கியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel