
12th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரூ. 134.83 கோடி மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் - முதல்வர் விஜய் அறிவிப்பு
- தமிழ்நாட்டில் நெல் சாகுபடி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பிற்கும், விவசாயிகளின் வாழ்வாதாரத்திற்கும் முக்கியப் பங்காற்றி வருகிறது.
- குறிப்பாக காவிரி டெல்டா மாவட்டங்கள் மற்றும் டெல்டா அல்லாத மாவட்டங்களில் குறுவை, கார் மற்றும் சொர்ணவாரிப் பருவங்களில் மேற்கொள்ளப்படும் நெல் சாகுபடியை ஊக்குவித்து, நெல் உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறனை அதிகரிக்கும் நோக்கில் 2026ம் ஆண்டில், 134.83 கோடி ரூபாய் மதிப்பீட்டில் குறுவை சிறப்புத் தொகுப்புத் திட்டம் செயல்படுத்தப்படும் என முதல்வர் விஜய் அறிவித்துள்ளார்.
- இத்திட்டத்தின் மூலம், இயந்திரமயமாக்கல் ஊக்குவிக்கப்படுவதுடன், நீர் மேலாண்மை மேம்படுத்தப்படும். தரமான விதைகள் மற்றும் தொழில் நுட்பங்கள் பயன்பாட்டின் மூலம் நெல் சாகுபடியின் பரப்பு, உற்பத்தி மற்றும் உற்பத்தித் திறன் அதிகரிக்கப்படுவதுடன், விவசாயிகளின் வருமானத்தை உயர்த்தி, மாநிலத்தின் உணவுப் பாதுகாப்பை வலுப்படுத்த இத்திட்டம் உறுதுணையாக அமையும்.
- மத்திய புள்ளியியல், திட்ட அமலாக்க அமைச்சகம் கடந்த மாதத்திற்கான (மே, 2026) நுகர்வோர் விலை குறியீட்டு எண்களை வெளியிட்டுள்ளது.
- இதன்படி தேசிய அளவிலான சில்லறை பணவீக்கம் 3.93 சதவீதமாக உள்ளது. கிராமப்புறங்களில் இது 4.25 சதவீதமாகவும், நகர்ப்புறங்களில் 3.53 சதவீதமாகவும் பதிவாகியுள்ளது.
- நுகர்வோர் உணவுப் பொருட்கள் விலை குறியீட்டு எண் அடிப்படையிலான உணவுப் பொருட்களின் பணவீக்கம் ஒட்டுமொத்தமாக 4.78 சதவீதமாகக் கணக்கிடப்பட்டுள்ளது.
- கிராமப்புற உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.85 சதவீதமாகவும், நகர்ப்புற உணவுப் பொருட்களின் பணவீக்கம் 4.66 சதவீதமாகவும் உள்ளது.
- வீட்டுவசதிக்கான பணவீக்கம் தேசிய அளவில் 2.12 சதவீதமாக உள்ளது. முக்கிய நுகர்வுப் பொருட்களில் உருளைக்கிழங்கு, பட்டாணி, மோட்டார் கார் ஆகியவை குறைந்த பணவீக்கத்தைக் கொண்டுள்ளன.
- அதே நேரத்தில் வெள்ளி ஆபரணங்கள், தக்காளி, தங்கம் ஆகியவை அதிக பணவீக்கத்தைப் பதிவு செய்துள்ளன. மாநில அளவில் தெலங்கானா, தமிழ்நாடு, ஆந்திரப் பிரதேசம் ஆகிய மாநிலங்கள் அதிக பணவீக்கத்தைக் கொண்டுள்ள முதல் மூன்று மாநிலங்களாக உள்ளன.
- மே மாதத்திற்கான விலை விவரங்கள் 1407 நகர்ப்புறச் சந்தைகள், 1465 கிராமங்களிலிருந்து சேகரிக்கப்பட்டு, முழுமையாகவும், துல்லியமாகவும் இத்தரவுகள் வெளியிடப்பட்டுள்ளன.
- இந்திய விமானப்படை சுமார் ரூ.21,935 கோடி செலவில் 56 சி-295 போக்குவரத்து விமானங்களை கொள்முதல் செய்து வருகிறது.
- இதில் 40 விமானங்கள் குஜராத் மாநிலம், வதோதராவில் உள்ள உற்பத்தி ஆலையில், ஏர்பஸ் நிறுவனத்துடன் இணைந்து டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம்ஸ் நிறுவனத்தால் அசெம்பிள் செய்யப்பட உள்ளன.
- இந்நிலையில் இந்தியாவில் தயாரிக்கப்பட்ட முதலாவது 'சி-295' ராணுவப் போக்குவரத்து விமானம் தனது முதல் சோதனை ஓட்டத்தை வெற்றிகரமாக நிறைவு செய்துள்ளதாக இந்திய விமானப்படை தெரிவித்துள்ளது.
- பிரிக்ஸ் நாடுகளின் வேளாண் அமைச்சர்கள் பங்கேற்கும் இரண்டு நாள் மாநாடு மத்தியப்பிரதேச மாநிலத்தின் வணிக தலைநகரும், தூய்மையான நகர் என பெயர் பெற்ற நகரமுமான இந்தூரில் இன்று தொடங்கியது.
- இந்த மாநாட்டில் உரையாற்றிய மத்திய வேளாண் துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்தியாவின் உணவு உற்பத்தி 37.60 கோடி டன்களை எட்டியுள்ளதாகவும் வேளாண் துறையின் வளர்ச்சி 4.5 சதவீதமாக பதிவாகியுள்ளதாகவும் தெரிவித்துள்ளார்.

