//
Type Here to Get Search Results !

11th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

11th JUNE 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நிதி ஆயோக் கவுன்சிலினின் 11வது கூட்டம்
  • டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் இன்று 11-வது நிதி ஆயோக் குழு (NITI Aayog Governing Council) கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
  • ஜனாதிபதி மாளிகை வளாகத்தில் உள்ள கலாசார மையத்தில் நடைபெறும் இந்த முக்கிய ஆலோசனைக் கூட்டத்தில், "2047-ல் வளர்ச்சியடைந்த இந்தியா" என்ற கருப்பொருளில் நடக்கிறது. 
  • தமிழக முதல்வர் விஜய் உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களின் முதல்வர்கள் பங்கேற்றுள்ளனர். நாட்டின் வளர்ச்சி திட்டங்கள், பொருளாதார முன்னேற்றம், மத்திய-மாநில ஒருங்கிணைப்பு மற்றும் நிர்வாக சீர்திருத்தங்கள் தொடர்பாக முக்கிய விவாதங்கள் நடைபெற உள்ளன.
  • பிரதமர் மோடி தலைமையில் நடைபெறும் இந்தக் கூட்டத்தில் மாநில முதல்வர்கள், யூனியன் பிரதேசங்களின் துணை நிலை ஆளுநர்கள் பங்கேற்றுள்ளனர்.
இந்திய கடற்படைக்காக மேம்பட்ட திறன்மிக்க உலகளாவிய நேவிகேஷன் செயற்கைக்கோள் அமைப்பு ஜாமர்களை கொள்முதல் செய்ய பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தம்
  • இந்திய கடற்படைக்காக 20 மேம்பட்ட திறன்மிக்க உலகளாவிய நேவிகேஷன் செயற்கைக் கோள் அமைப்பு ஜாமர்களை ரூ.449 கோடி செலவில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பெங்களூருவைச் சேர்ந்த அக்கார்டு சாஃப்ட்வேர் & சிஸ்டம் தனியார் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் ஒப்பந்தத்தில் கையெழுத்திட்டுள்ளது. 
  • இதில், குறைந்தபட்சம் 75 சதவீதம் உள்நாட்டு தயாரிப்புப் பொருட்களைக் கொண்டதாக இருக்கும். இதற்கான ஒப்பந்தம் புதுதில்லியில் 2026 ஜூன் 10 அன்று பாதுகாப்புத்துறைச் செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது. 
  • எதிர் நாட்டின் செயற்கைக் கோள் சமிஞ்ஞை பெறுதல், கண்காணிக்கும் செயல்திறனைக் குறைத்தல், சமிஞ்ஞைகளை ஏமாற்றுதல் அல்லது திசை திருப்புதல் ஆகியவை இந்த கொள்முதல் செய்யப்படும் அமைப்பின் திறன்களில் அடங்கும். 
  • பன்முக அச்சுறுத்தல்கள் நிறைந்த சூழலில், இந்திய கடற்படை கப்பல்கள் பாதுகாப்பாக செயல்படுவதற்கு இது வழிவகுக்கும். இந்த ஒப்பந்தம் தற்சார்பு இந்தியா, மேக் இன் இந்தியா ஆகிய அரசின் உறுதிப்பாட்டை வலுப்படுத்துவதோடு நாட்டின் கடல்சார் பாதுகாப்பு கட்டமைப்பை மேம்படுத்துகிறது. 
  • பாதுகாப்புத் திறன்களை வலுப்படுத்துவதற்கும் மேம்பட்ட ராணுவத் தொழில்நுட்பத்தை உள்நாட்டிலேயே உருவாக்குவதற்குமான முயற்சிகளில் இது முக்கிய அம்சமாக உள்ளது.
ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற கூட்டமைப்பின் 64வது இடைக்கால அமர்வு
  • பூமி எதிர்கொண்டு வரும் மிக முக்கியமான அச்சுறுத்தலான உலக வெப்பமயமாதல் மற்றும் சுற்றுச்சூழல் பாதுகாப்பு குறித்த ஐக்கிய நாடுகளின் பருவநிலை மாற்ற கூட்டமைப்பின் 64-வது இடைக்கால அமர்வு ஜெர்மனியின் பான் நகரில் அதிகாரப்பூர்வமாகத் தொடங்கியுள்ளது.
  • வரவிருக்கும் பிரம்மாண்ட உலகப் பருவநிலை உச்சிமாநாட்டிற்கான மிக முக்கிய ஆயத்த விவாதமாக இந்த அமர்வு கருதப்படுகிறது. இதில் உலக நாடுகள் அனைத்தும் இணைந்து எதிர்காலப் பாதுகாப்பு உத்திகள் குறித்து விரிவான ஆலோசனைகளை மேற்கொண்டு வருகின்றன.
  • இந்த 64-வது இடைக்கால அமர்வில், வளரும் மற்றும் பின்தங்கிய நாடுகள் பருவநிலை மாற்ற பாதிப்புகளை எதிர்கொள்வதற்குக் கார்பன் உமிழ்வை அதிகம் வெளியிடும் வளர்ந்த நாடுகள் வழங்க வேண்டிய நிதி மற்றும் இழப்பீடுகள் குறித்து மிகத் தீவிரமாக விவாதிக்கப்படுகிறது. 
  • குறிப்பாக, பாதிக்கப்பட்ட நாடுகள் தங்களின் உள்கட்டமைப்பை மாற்றி அமைப்பதற்கான 'தழுவல் நிதியை' கணிசமாக அதிகரிப்பது குறித்து இந்த அமர்வில் முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது.
  • பருவநிலை மாற்றக் கட்டுப்பாட்டு இலக்குகளை நாடுகள் எவ்வாறு துல்லியமாகப் பின்பற்றுகின்றன என்பதைக் கண்காணிக்கும் நோக்கில், 'பெலெம் குறிகாட்டிகளை' முழுமையாகச் செயல்படுத்துவது குறித்து சுற்றுச்சூழல் வல்லுநர்கள் இந்த மாநாட்டில் வலியுறுத்தி வருகின்றனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel