
8th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு பிளஸ்-2 தேர்வு முடிவுகள் வெளியீடு
- தமிழகத்தில் மார்ச் மற்றும் ஏப்ரல் மாதங்களில் நடைபெற்ற பிளஸ்-2 பொதுத்தேர்வு முடிவுகள் வெளியாகியுள்ளன. இந்த ஆண்டு பிளஸ்-2 தேர்வில் ஒட்டுமொத்தமாக 94.56% மாணவர்கள் தேர்ச்சியடைந்துள்ளனர். இது கடந்த ஆண்டைக் காட்டிலும் சற்று அதிகம் என்பது குறிப்பிடத்தக்கது.
- மாவட்ட வாரியான தேர்ச்சி விகிதத்தில் ஈரோடு மாவட்டம் மாநிலத்திலேயே முதலிடத்தைப் பிடித்து சாதனை படைத்துள்ளது. அடுத்தடுத்த இடங்களை திருப்பூர் மற்றும் கோயம்புத்தூர் மாவட்டங்கள் பிடித்துள்ளன.
- வழக்கம்போல இந்த ஆண்டும் மாணவர்களை விட மாணவிகளே அதிக அளவில் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளின் தேர்ச்சி விகிதம் மாணவர்களைக் காட்டிலும் சுமார் 4% அதிகமாக உள்ளது.
- கணிதம், இயற்பியல் மற்றும் கணினி அறிவியல் ஆகிய பாடங்களில் நூற்றுக்கு நூறு (Centum) மதிப்பெண்கள் பெற்ற மாணவர்களின் எண்ணிக்கை கடந்த ஆண்டை விட அதிகரித்துள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் இந்திய விமானப்படை இணைந்து, தாக்குதல் நடத்துவதற்கான நவீன சாதனத்துடன் கூடிய ஏவுகணை சோதனையை, 2026 மே 07 அன்று, ஒடிசா கடற்பகுதியில், வெற்றிகரமாக நடத்தின.
- 'தாரா' எனப்படும் இந்த சாதனம் தொலைவில் உள்ள இலக்கைத் துல்லியமாகக் கண்டறிந்து தாக்கி அழிப்பதற்கு உதவிடும். இந்த சாதனத்தை வழிகாட்டுதல் அமைப்பு இல்லாத ஏவுகணைகளில் பொருத்துவதன் மூலம், அவற்றை மேம்பட்ட தாக்குதல் திறன் கொண்ட ஏவுகணைகளாக மாற்ற முடியும்.
- இது, முதல்முறையாக உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட ஆயுத அமைப்பு ஆகும். தரைவழியாக இலக்குகளைத் தாக்கி அழிப்பதற்காகப் பயன்படுத்தப்படும் குறைந்த விலையிலான ஆயுதங்களின் செயல்திறன், துல்லியம், ஆகிய அம்சங்களை மேம்படுத்தும் நோக்கில், ஹைதராபாத்தில் உள்ள 'இமாரத் ஆராய்ச்சி மையம்' மற்றும் பிற டிஆர்டிஓ அமைப்பின் ஆய்வகங்கள் இணைந்து 'தாரா' என்ற ஆயுத அமைப்பை வடிவமைத்து உருவாக்கியுள்ளன.
- அதிநவீன, அதே சமயம் குறைந்த விலை தொழில்நுட்ப அமைப்புகளைப் பயன்படுத்தும், ஊடுருவிச் செல்லும் தன்மை கொண்ட ஏவுகணை அமைப்பு இதுவாகும்.
- இந்தத் தொகுப்பை உருவாக்கும் பணிகள், மேம்பாடு மற்றும் உற்பத்தி கூட்டமைப்பு, பிற இந்தியத் தொழில் நிறுவனங்களுடனும் இணைந்து மேற்கொண்டன. இந்நிறுவனங்கள் தற்போது இதன் உற்பத்திப் பணிகளைத் தொடங்கியுள்ளன.

