//
Type Here to Get Search Results !

2nd MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

2nd MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

சோலார் உற்பத்தியில் தென்னிந்திய மாநிலங்களில் தமிழகம் முதலிடம்
  • நிலக்கரி போன்ற இயற்கை வளங்களை சார்ந்திருக்காமல், இயற்கையாக கிடைக்கும் சூரிய ஒளியை பயன்படுத்தி மின்சாரம் தயாரிப்பதில் இந்தியா உலக அளவில் கவனம் ஈர்த்து வருகிறது. 
  • குறிப்பாக, இந்தியாவின் தென்பகுதியில் சூரிய மின்சக்தி உற்பத்தியில் தமிழ்நாடு ஒரு முன்னோடி மாநிலமாக உருவெடுத்துள்ளது. அதன்படி, ஒன்றிய மின்சார ஆணையம் அண்மையில் வெளியிட்ட தரவுகளின்படி, கடந்த மார்ச் மாதத்தில் தென்னிந்திய மாநிலங்களில் மொத்தம் 613 கோடி யூனிட் சூரியசக்தி மின்சாரம் உற்பத்தியாகி உள்ளதாம். 
  • இதில் தமிழகம் மட்டும் தனிச்சிறப்பாக 218.60 கோடி யூனிட்களை உற்பத்தி செய்து முதலிடத்தை அலங்கரிக்கிறது. கடந்த 2025ம் ஆண்டு மார்ச் மாதத்தில் தமிழகத்தின் உற்பத்தி 160 கோடி யூனிட்களாக மட்டுமே இருந்தது குறிப்பிடத்தக்கது. 
  • ஓராண்டு காலத்திற்குள் சுமார் 58 கோடி யூனிட்கள் கூடுதலாக உற்பத்தி செய்யப்பட்டு, தமிழகம் மின் உற்பத்தியில் தன்னிறைவை நோக்கி வேகமாக நடைபோடுகிறது. 
  • தமிழகத்தை தொடர்ந்து கர்நாடகா 181 கோடி யூனிட்களுடன் இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது. ஆந்திரா 113 கோடி யூனிட்களையும், தெலுங்கானா 71 கோடி யூனிட்களையும் உற்பத்தி செய்துள்ளன.
  • கேரளா 29 கோடி யூனிட்களுடன் அடுத்த இடத்தில் இருக்க, புதுச்சேரி யூனியன் பிரதேசம் 10 லட்சம் யூனிட்களை பதிவு செய்துள்ளது. இந்த ஒப்பீட்டு லிஸ்ட்டில், தமிழகத்தின் பங்கு மிகப்பெரிய அளவில் இருப்பது நன்றாகவே தெரியவருகிறது. 
  • தமிழகத்தில் நிலவும் சாதகமான வானிலைதான் இந்த வெற்றிக்கு மிக முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது. ஆண்டுக்கு 300 நாட்களுக்கு மேல் சூரிய ஒளி தடையின்றி கிடைப்பதால், சூரியசக்தி மின் நிலையங்களுக்கு தமிழகம் ஒரு சொர்க்கபுரியாக மாறியுள்ளது. 
  • கடந்த மார்ச் மாத நிலவரப்படி, தமிழகத்தின் மொத்த சூரியசக்தி மின் உற்பத்தித் திறன் 13,579 மெகாவாட் என்ற நிலையை எட்டியுள்ளது.
  • கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில், தமிழகத்தின் வளர்ச்சி வியக்க வைக்கிறது. 2024-25 நிதியாண்டில் 1,573 கோடி யூனிட்களாக இருந்த சூரியசக்தி மின் உற்பத்தி, 2025 ஏப்ரல் முதல் இந்த ஆண்டு மார்ச் வரையிலான காலகட்டத்தில் 1,969 கோடி யூனிட்களாக உயர்ந்துள்ளது.
காப்பீட்டுத் துறையில் 100% வெளிநாட்டு முதலீடு செய்ய மத்திய அரசு அனுமதி
  • இந்தியாவின் காப்பீட்டுத் துறையில் ஒரு மிகப்பெரிய மாற்றத்தைக் கொண்டுவரும் வகையில், இத்துறையில் 100 சதவீத நேரடி வெளிநாட்டு முதலீட்டிற்கு (FDI) மத்திய அரசு அனுமதி அளித்துள்ளது.
  • அதேவேளையில், எல்.ஐ.சி (LIC) நிறுவனத்தில் வெளிநாட்டு முதலீட்டு வரம்பு 20 சதவீதமாகவே தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
  • இந்த புதிய சீர்திருத்தத்தின் மூலம், வெளிநாட்டு நிறுவனங்கள் இந்தியக் காப்பீட்டு நிறுவனங்களில் முழுமையாக முதலீடு செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel