
29th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாட்டின் புதிய டிஜிபி மகேஷ்குமார் அகர்வால் நியமனம்
- தமிழ்நாட்டின் புதிய டிஜிபியாக மகேஷ்குமார் அகர்வால் நியமனம் செய்யப்பட்டுள்ளார். சிபிஐ, சிபிசிஐடி உட்பட முக்கிய புலனாய்வு அமைப்புகளில் பணிபுரிந்தவர் மகேஷ்குமார் அகர்வால் 1994ஆம் ஆண்டு பேட்ச் தமிழ்நாடு கேடர் ஐபிஎஸ் அதிகாரி மகேஷ்குமார் அகர்வால்.
- 22 வயதிலேயே ஐபிஎஸ் தேர்வில் வெற்றி பெற்று அதிகாரியானவர் மகேஷ்குமார் அகர்வால்.
- புதுதில்லி, பூசாவில் நடைபெற்ற 'தேசிய வேளாண் மாநாடு - கரீஃப் சாகுபடி இயக்கம் 2026'-ன் இரண்டாம் நாள் கூட்டத்தில், மத்திய வேளாண் துறை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌகான் பங்கேற்றார்.
- அவர், இந்திய வேளாண்மையின் முழுமையான வளர்ச்சி குறித்து மாநில வேளாண் அமைச்சர்கள், மூத்த அதிகாரிகள், விஞ்ஞானிகள், விவசாயிகள் ஆகியோருடன் விரிவான கலந்துரையாடல்களை நடத்தினார்.
- வேளாண் வளர்ச்சியை விரைவுபடுத்துவதற்கு, விவசாயிகளை மையமாகக் கொண்ட நடவடிக்கைகள் இப்போது தேவை என்று அவர் வலியுறுத்தினார்.
- இந்த மாநாட்டில், மத்திய வேளாண் துறை இணை அமைச்சர்கள் திரு ராம்நாத் தாக்கூர், திரு பகீரத் சௌத்ரி ஆகியோரும் கலந்துகொண்டனர். தமிழ்நாடு வேளாண் துறை அமைச்சர் திரு ஆர் வினோத், ஒடிசா துணை முதலமைச்சரும், வேளாண் அமைச்சருமான திரு கனக் வர்தன் சிங் தியோ, உத்தரப் பிரதேச வேளாண் அமைச்சர் திரு சூர்ய பிரதாப் ஷாஹி, குஜராத் வேளாண்மை அமைச்சர் திரு ஜிதுபாய் சவ்ஜிபாய் வகானி உட்பட பல்வேறு மாநிலங்களின் வேளாண் துறை அமைச்சர்களும் அதிகாரிகளும் இதில் பங்கேற்றனர்.

