//
Type Here to Get Search Results !

26th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

26th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மக்கள் தொகை மாற்றங்களை ஆராய உயர்மட்ட குழு அமைத்தது மத்திய அரசு
  • ஊடுருவல் மற்றும் பிற காரணங்களால் ஏற்படும் இயல்புக்கு மாறான மக்கள் தொகை மாற்றங்கள் எந்த ஒரு நாட்டின் நிகழ்காலத்துக்கும் எதிர்காலத்துக்கும் மிகக் கடுமையான சவாலாக அமைகின்றன.
  • இந்தச் சவாலைக் கையாள்வதற்காக மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து ஆராய்வதற்கு உயர்மட்டக் குழு அமைக்கப்படும் என்று கடந்த ஆண்டு சுதந்திர தின உரையில் பிரதமர் நரேந்திர மோடி அறிவித்திருந்தார். 
  • இதை அடுத்து மக்கள் தொகை மாற்றங்களை ஆராய்வதற்காக உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையில் உயர்மட்ட குழு அமைப்பட்டுள்ளதாக மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா தெரிவித்துள்ளார்.
  • ஓய்வுபெற்ற நீதிபதி பிரகாஷ் பிரபாகர் நாவ்லேகர் தலைமையில் செயல்படும் இக்குழுவில், மக்கள் தொகை கணக்கெடுப்பு ஆணையருடன் இணைந்து ஓய்வுபெற்ற ஐஏஎஸ் அதிகாரி துர்கா சங்கர் மிஸ்ரா, ஓய்வுபெற்ற ஐபிஎஸ் அதிகாரி பாலாஜி ஸ்ரீவஸ்தவா, டாக்டர் ஷமிகா ரவி ஆகியோர் உறுப்பினர்களாக இடம் பெறுவர். மத்திய உள்துறை அமைச்சகத்தின் இணைச் செயலாளர் (வெளிநாட்டினர்-1) இக்குழுவின் உறுப்பினர் செயலாளராகப் பணியாற்றுவார்.
  • சட்டவிரோத குடியேற்றம் மற்றும் இயல்புக்கு மாறான காரணங்களால் நாடு முழுவதும் ஏற்பட்டு வரும் மக்கள் தொகை மாற்றங்கள் குறித்து இக்குழு ஒரு விரிவான மதிப்பீட்டை மேற்கொள்ளும்.
  • மத மற்றும் சமூக மட்டத்தில் நிகழும் அசாதாரண மக்கள் தொகை மாற்றங்களின் போக்குகளைப் பகுப்பாய்வு செய்யும். மேலும், இதற்கான ஒரு திட்டமிடப்பட்ட, காலவரையறைக்கு உட்பட்ட தீர்வை முன்வைக்கும்" என தெரிவிக்கப்பட்டுள்ளது.
ஷெட்யூல்டு வகுப்பினருக்கான நலத்திட்டங்களின் செயலாக்கத்தை டிஜிட்டல் மயமாக்கி வலுப்படுத்துவதற்கு ஏதுவாக, 'பிஎம்-அஜய்' இணையதளம், 'அஜய்' செயலியை மத்திய அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்
  • பிரதமரின் ஷெட்யூல்டு வகுப்பினருக்கான மேம்பாட்டுத் திட்டம் (பிஎம்-அஜய்) திட்டத்தை விரைவாகவும், தரமாகவும் செயல்படுத்தும் நோக்கில், இதற்கான இணையதளம் மற்றும் செயலியைமத்திய சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை அமைச்சர் டாக்டர் வீரேந்திர குமார் தொடங்கி வைத்தார்.
  • இத்திட்டம், காகிதப் பயன்பாடற்ற முறையில், முழுமையாக டிஜிட்டல் மயமாக்கப்பட்ட, நிகழ்நேர அடிப்படையிலான பணி, அமலாக்க நடைமுறைக்கு மாறுவதை இலக்காகக் கொண்டுள்ளது.
  • அனைத்து மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த செயலாளர்கள், மூத்த அதிகாரிகள்  இணையவழியாக இந்த நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.
  • ஷெட்ட்யூல்டு வகுப்பினரின் சமூக-பொருளாதார மேம்பாட்டை இலக்காகக் கொண்டு, இத்திட்டத்தின் கீழ், பல்வேறு நலத்திட்டங்களை, சமூக நீதி மற்றும் அதிகாரமளித்தல் துறை செயல்படுத்தி வருகிறது. 
  • இத்திட்டம் சார்ந்த சேவைகளை அலைபேசி வாயிலாக பெறுவதற்கும், கிராமப்புற அளவில் திட்டமிடல், செயலாக்கத்தை இறுதி நிலை வரை உறுதி செய்வதற்கும், கள அளவிலான கண்காணிப்பை மேம்படுத்துவதற்கும், நிகழ்நேர அறிக்கையிடலை எளிதாக்குவதற்கும், வெளிப்படைத்தன்மை, டிஜிட்டல் நிர்வாகத்தை வலுப்படுத்துவதற்கும் இந்த செயலி வடிவமைக்கப்பட்டுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel