//
Type Here to Get Search Results !

23rd MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

23rd MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வேலைவாய்ப்பு முகாமின் கீழ் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி நியமனக் கடிதங்களை வழங்கினார்
  • பல்வேறு அரசுத் துறைகள் மற்றும் அமைப்புகளில் புதிதாக நியமிக்கப்பட்டுள்ள 51,000 இளைஞர்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று காலை 11 மணிக்கு காணொலிக் காட்சி மூலம் நியமனக் கடிதங்களை வழங்கினார். 
  • நிகழ்ச்சியில் உரையாற்றிய அவர், இந்த நிகழ்வு நாடு முழுவதும் உள்ள ஆயிரக்கணக்கான இளைஞர்களுக்கு மிகவும் முக்கியமான நாள் என்று விவரித்தார். 
  • அரசு சேவையில் புதிதாக இணைந்தவர்களை வரவேற்ற அவர், ரயில்வே, வங்கி, பாதுகாப்பு, சுகாதாரம் மற்றும் கல்வி உள்ளிட்ட துறைகளில் இந்தியாவின் வளர்ச்சிக்கு அவர்களின் உடனடி பங்களிப்பை வலியுறுத்தினார். 
  • "வரவிருக்கும் ஆண்டுகளில், வளர்ந்த பாரதத்தின் தொலைநோக்குப் பார்வையை நனவாக்குவதில் நீங்கள் அனைவரும் முக்கிய பங்கு வகிப்பீர்கள்" என்று திரு மோடி கூறினார்.
அக்னி 1 ஏவுகணை சோதனை வெற்றி
  • இந்திய ராணுவத்தின் பலத்தை உலகிற்குப் பறைசாற்றும் வகையில் குறுகிய தூர இலக்குகளைத் துல்லியமாகத் தாக்கும் திறன் கொண்ட அக்னி 1 ஏவுகணை  ஒடிசா மாநிலம் சந்திப்பூரில் உள்ள பிரத்யேக சோதனை மையத்தில் வெற்றிகரமாகச் சோதனை செய்யப்பட்டுள்ளது.
  • இந்தியாவின் பாதுகாப்புத் திறனை அடுத்த கட்டத்திற்கு எடுத்துச் செல்லும் ஒரு முக்கிய முன்னேற்றமாக இந்த ஏவுகணைப் பரிசோதனை பார்க்கப்படுகிறது.
  • நமது நாட்டின் பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனத்தால் இந்த அதிநவீன ஏவுகணை உள்நாட்டிலேயே முழுமையாக உருவாக்கப்பட்டுள்ளது. 
  • இந்த ஏவுகணையானது சுமார் 700 கிலோமீட்டர் முதல் 1,200 கிலோமீட்டர் தொலைவில் உள்ள எதிரிகளின் இலக்குகளை மிகத் துல்லியமாகச் சென்று தாக்கும் வல்லமை படைத்தது. 
  • அதுமட்டுமின்றி, சுமார் 2,500 கிலோ எடையுள்ள கடுமையான வெடிகுண்டுகள் அல்லது அணுஆயுதங்களை மிக எளிதாகச் சுமந்து செல்லும் திறனும் இதில் உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel