//
Type Here to Get Search Results !

21st MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

21st MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான அரசின் அமைச்சரவை விரிவாக்கம்
  • தமிழ்நாட்டில் முதலமைச்சர் விஜய் தலைமையிலான தவெக அரசின் அமைச்சரவை விரிவாக்கம் செய்யப்பட்டுள்ளது. புதிதாக 23 பேர் அமைச்சர்களாக பதவியேற்றுள்ளனர்.
  • ஏற்கெனவே அறிவிக்கப்பட்டபடி, காலை 10 மணிக்கு ஆளுநர் மாளிகையில் புதிய அமைச்சர்கள் அமைச்சர்கள் பதவியேற்பு விழா தொடங்கியது. 
  • அதன் பின்னர், புதிய அமைச்சர்களாக ஸ்ரீநாத், கமலி உள்ளிட்ட 23 பேரும் பதவியேற்றனர். இதில், காங்கிரஸ் சார்பாக ராஜேஷ் குமார், விஸ்வநாதன் ஆஜிய இருவரும் அமைச்சர்களாக பதவியேற்றனர். அமைச்சர்களுக்கு பொறுப்பு ஆளுநர் ராஜேந்திர அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.
  • புதிய அமைச்சர்களுக்கான இலாக்காக்களும் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • ஸ்ரீநாத் - மீன்வளத்துறை
  • கமலி - கால்நடைத் துறை
  • விஜயலட்சுமி - பால்வளத்துறை
  • ரஞ்சித் குமார் - வனத்துறை
  • வினோத் - வேளாண் துறை
  • ராஜீவ் - சுற்றுச்சூழல் மற்றும் காலநிலை மாற்றத் துறை
  • ராஜ்குமார் - வீட்டு வசதி மற்றும் நகர்ப்புற வளர்ச்சி உள்ளிட்ட துறைகள்
  • காந்திராஜ் - கூட்டுறவு துறை
  • மதன் ராஜா- கிராமப்புற தொழில்கள் துறை
  • ஜெகதீஸ்வரி - சமூக நலத்துறை
  • ராஜேஷ்குமார் - சுற்றுலா துறை
  • விஜய் பாலாஜி - கைத்தறி துறை
  • லோகேஷ் தமிழ்செல்வன் - வணிக வரி உள்ளிட்ட துறைகள்
  • விஜய் தமிழன் பார்த்திபன் - போக்குவரத்து துறை உள்ளிட்ட துறைகள்
  • ரமேஷ் - இந்து சமய அறநிலையத் துறை
  • விஸ்வநாதன் - உயர்கல்வித்துறை அமைச்சர்
  • குமார் - செயற்கை நுண்ணறிவு, தகவல் தொழில்நுட்ப துறை
  • தென்னரசு - வெளிநாட்டு வாழ் தமிழர்கள், அகதிகள் & இடம்பெயர்ந்தோர் நலத்துறை
  • சம்பத்குமார் - பிற்படுத்தப்பட்டோர், மிக பிற்படுத்தப்பட்டோர் நலத்துறை
  • முகமது ஃபர்வஸ் - தொழிலாளர் நலத்துறை உள்ளிட்ட துறைகள்
  • சரத்குமார் - மனிதவள மேலாண்மை துறை
  • மரிய வில்சன் - நிதித்துறை
  • விக்னேஷ் - மதுவிலக்கு, ஆயத்தீர்வை துறை
  • இதன்மூலம், ஏற்கெனவே நிதித்துறை அமைச்சராக இருந்த செங்கோட்டையன் அத்துறையிலிருந்து வருவாய் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். மரிய வில்சன், நிதித்துறை அமைச்சராக உள்ளார்.
  • விரிவாக்கம் செய்யப்பட்ட பிறகு விஜய் அமைச்சரவையில் கீர்த்தனா, கமலி, விஜயலட்சுமி, ஜெகதீஸ்வரி ஆகிய 4 பெண் அமைச்சர்கள் இருப்பார்கள்.
  • விஜய் அமைச்சரவையில் கமலி, விஸ்வநாதன் , ராஜ்மோகன், லோகேஷ் தமிழ்செல்வன், தென்னரசு, காந்திராஜ், மதன்ராஜா ஆகிய 7 பேர் பட்டியல் பிரிவை சேர்ந்தவர்களாக இருப்பார்கள்.
இத்தாலியுடன் ராணுவ தயாரிப்பு, கனிம வளம், நர்ஸ்கள் வேலைவாய்ப்பு ஒப்பந்தத்தில் கையெழுத்திட்ட இந்தியா
  • நார்வேயில் நடைபெற்ற இந்தியா-நோர்டிக் உச்சிமாநாடு, ஸ்வீடன் மற்றும் நெதர்லாந்து நாடுகளுக்கான இருதரப்பு பயணங்களை முடித்துக் கொண்டு, தனது 6 நாள் ஐரோப்பிய பயணத்தின் இறுதிப் பகுதியாக பிரதமர் மோடி இத்தாலி சென்றார்.
  • இரு நாட்டுத் தலைவர்களின் சந்திப்பில் பாதுகாப்பு, வர்த்தகம், பசுமை ஆற்றல் மற்றும் உள்கட்டமைப்பு உள்ளிட்ட பல்வேறு துறைகளில் முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன.
  • இந்தியப் பிரதமர் மோடியும், இத்தாலி பிரதமர் ஜியோர்ஜியா மெலோனியும் ரோம் நகரில் நடத்திய உயர்மட்ட பேச்சுவார்த்தையை அடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான இருதரப்பு உறவு 'சிறப்பு உத்திசார் கூட்டாண்மை' (Special Strategic Partnership) என்ற புதிய நிலைக்கு உயர்த்தப்பட்டுள்ளது.
  • இந்தியா-மத்திய கிழக்கு-ஐரோப்பா பொருளாதாரப் பெருவழிப்பாதையின் (IMEEC) மேற்கு நங்கூரமாக இத்தாலி செயல்படுகிறது. கடல்சார் போக்குவரத்து மற்றும் துறைமுகங்களை நவீனப்படுத்துவது தொடர்பாக இரு நாடுகளும் புதிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டுள்ளன.
  • உக்ரைன் விவகாரம், மேற்கு ஆசியா மற்றும் ஈரான் நெருக்கடிகள் குறித்தும் இரு தலைவர்களும் விவாதித்தனர். இந்திய செவிலியர்கள் இத்தாலியில் பணிபுரிவதற்கான இடம்பெயர்வு ஒப்பந்தம், உயர் கல்வி, ஆராய்ச்சி மற்றும் காலநிலை மாற்றம் தொடர்பான கூட்டாண்மை, ஆயுர்வேதம், விவசாயம் மற்றும் இந்திய கடல்சார் உணவுப் பொருட்களை இத்தாலிக்கு ஏற்றுமதி செய்வதற்கான ஒப்பந்தங்கள் கையெழுத்திட்டுள்ளன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel