
20th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாட்டில் 10ம் வகுப்பு தேர்வு முடிவுகள் வெளியானது
- தமிழ்நாட்டில் இன்று பத்தாம் வகுப்பு முடிவுகள் வெளியாகி உள்ளன. 2026ம் ஆண்டு மார்ச், ஏப்ரலில் 8.70 லட்சம் மாணவர்கள் பத்தாம் வகுப்பு தேர்வு எழுதியுள்ளனர்.
- அதில் 8.21 லட்சம் மாணவர்கள் தேர்ச்சி அடைந்துள்ளனர். இதில் தேர்ச்சி அடைந்த மாணவிகளின் சதவிகிதம் 96.47%. மாணவர்களின் சதவிகிதம் 92.15 சதவிகிதம் ஆகும். மாணவர்களை விட, 4.32 சதவிகிதம் அதிகமாக மாணவிகள் தேர்ச்சி அடைந்துள்ளனர்.
- இந்தத் தேர்வில் அதிக தேர்ச்சி பெற்ற டாப் 5 மாவட்டங்கள் - புதுக்கோட்டை - 1வது இடம், சிவகங்கை - 2வது இடம், தஞ்சாவூர் - 3வது இடம், திருச்சி - 4வது இடம், கன்னியாகுமரி - 5வது இடம்
- அரசுப் பள்ளிகள் அதிக தேர்ச்சி சதவிகிதம் பெற்ற டாப் 5 மாவட்டங்கள் - சிவகங்கை - 1வது, இடம், புதுக்கோட்டை - 2வது இடம், தஞ்சாவூர் - 3வது இடம், ராமநாதபுரம் - 4வது இடம், திருச்சி - 5வது இடம்.
- நார்வேயில் நடந்த நார்டிக் உச்சி மாநாட்டில் கலந்து கொண்ட பிரதமர் மோடி ஐஸ்லாந்து, பின்லாந்து, டென்மார்க் பிரதமர்களை தனித்தனியாக சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார்.
- மேற்காசியா மற்றும் ஐரோப்பாவில் உள்ள 5 நாடுகளுக்கு அரசு முறை பயணமாக பிரதமர் மோடி சென்றுள்ளார். ஐரோப்பிய நாடுகளான நெதர்லாந்து, ஸ்வீடன், நார்வே, இத்தாலி நாடுகளுக்கு சுற்றுபயணம் சென்றுள்ளார்.
- ஸ்வீடன் பயணத்தை முடித்து கொண்டு நேற்றுமுன்தினம் நார்வே தலைநகர் ஓஸ்லோவுக்கு சென்றார்.ஆஸ்லோவில் பிரதமருக்கு இந்திய வம்சாவளியினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.
- இந்த நிலையில் ஆஸ்லோவில் இந்தியா-நார்டிக் நாடுகளின் 3வது உச்சி மாநாடு நடந்தது.
- இந்த மாநாட்டிற்கு முன்னதாக ஐஸ்லாந்து பிரதமர் கிறிஸ்ட்ரன் பிராஸ்டாடோடிர், பின்லாந்து பிரதமர் பெட்டேரி ஆர்போ,டென்மார்க் பிரதமர் மெட்டே பிரெட்ரிக்ஸன் ஆகியோரை பிரதமர் மோடி தனித்தனியாக சந்தித்து பேசினார்.
- இந்த சந்திப்புகளின் போது வர்த்தகம் மற்றும் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி போன்ற துறைகளில் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்துவதற்கான வழிகள் குறித்து விவாதித்தார்.
- ஐந்து நார்டிக் நாடுகளும் இணைந்து 1.9 டிரில்லியன் டாலருக்கும் அதிகமான மொத்த உள்நாட்டு உற்பத்தியைக் கொண்டுள்ளன. மேலும் அவை புதுப்பிக்கத்தக்க ஆற்றல் மற்றும் நிலையான கடல்சார் நிர்வாகத்தில் உலகளவில் முன்னணி வகிக்கின்றன.
- நார்வேயில் இருந்து தனது வெளிநாட்டு பயணத்தின் இறுதிக்கட்டமாக மோடி நேற்று இரவு இத்தாலிக்குச் சென்றார்.
- இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி அழைப்பின் பேரில் அங்கு சென்றுள்ள மோடி இரு தரப்பு உறவை வலுப்படுத்துவது குறித்து மெலோனியுடன் ஆலோசனை நடத்துகிறார்.

