
18th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கேரள முதலமைச்சராக டி.சதீசன் பதவியேற்பு
- கேரள சட்டசபை தேர்தலில் காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய ஜனநாயக முன்னணி 102 இடங்களை வாரிக் குவித்து தனிப்பெரும் சக்தியாக உருவெடுத்துள்ளது.
- கேரளாவில் டி.சதீசன் ஒருவழியாகப் புதிய முதலமைச்சராகத் தேர்வு செய்யப்பட்டுள்ளார். திருவனந்தபுரம் சென்டிரல் ஸ்டேடியத்தில் பிரம்மாண்டமாகப் பதவியேற்ற கையோடு கூடிய முதல் அமைச்சரவை கூட்டத்திலேயே, பெண்களுக்கு இலவச பேருந்து பயணம் மற்றும் ஊழியர்களுக்குச் சம்பள உயர்வு உள்ளிட்ட பல அதிரடி நலத்திட்டங்களை அவர் அறிவித்துள்ளார்.
- ஜூன் 15 முதல் மாநிலம் முழுவதும் உள்ள அரசு பேருந்துகளில் பெண்களுக்கு இலவச பயண வசதி அமல்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.
- நீண்டகாலமாக சம்பள உயர்வு கோரி கேரள தலைமைச் செயலகத்திற்கு முன்பு தொடர் போராட்டங்களை நடத்தி வந்த ஆஷா பணியாளர்களின் கோரிக்கைக்கு இந்த கூட்டத்தில் தீர்வு காணப்பட்டுள்ளது. அவர்களின் மாதாந்திர மதிப்பூதியத்தில் மூன்று ஆயிரம் ரூபாய் அதிரடியாக உயர்த்தி வழங்க அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
- இத்துடன் அங்கன்வாடி பணியாளர்கள், பள்ளி சமையல் பணியாளர்கள் மற்றும் ஆரம்பப்பள்ளி ஆசிரியர்கள் உள்ளிட்ட அடித்தட்டு பொதுச்சேவை ஊழியர்களின் மாதாந்திர ஊதியமும் ஆயிரம் ரூபாய் உயர்த்தி வழங்கப்படும் எனப் புதிய முதல்வர் அதிரடியாக அறிவித்துள்ளார்.
- ஜம்மு காஷ்மீரில் போதைப்பொருள் கடத்தல் மற்றும் பயங்கரவாதத்துக்கு நிதியளித்தல் ஆகியவற்றில் ஈடுபட்டதாக சையத் இஃப்திகார் அன்ட்ராபி என்பவர் கைது செய்யப்பட்டு சட்டவிரோத நடவடிக்கைகள் தடுப்புச் சட்டத்தின் (உபா) கீழ் வழக்கு தொடுக்கப்பட்டது.
- ஜாமீன் கோரி அவர் தாக்கல் செய்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் ஆகியோர் அடங்கிய அமர்வு, அவருக்கு ஜாமீன் வழங்கி தீர்ப்பளித்துள்ளது.
- மேலும், அவர் தனது பாஸ்போர்ட்டை ஒப்படைக்கவும், 15 நாட்களுக்கு ஒருமுறை உள்ளூர் காவல் நிலையத்தில் ஆஜராகவும் நிபந்தனைகளை விதித்துள்ளது.
- ஜாமீன் வழங்குவதில் கடுமையான கட்டுப்பாடுகளை விதிக்கும் உபா சட்டத்தின் பிரிவு 43D(5)-ஐ காரணம் காட்டி காலவரையற்ற சிறைவாசத்தை நியாயப்படுத்த முடியாது என்றும், அரசியலமைப்பின் 21 மற்றும் 22வது பிரிவுகளின் கட்டமைப்புக்குள் செயல்பட வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற அமர்வு தனது உத்தரவில் தெரிவித்துள்ளது.
- உபா குற்றச்சாட்டுக்கள் மற்றும் அதன் கடுமையான ஜாமீன் விதிகள் தொடர்புடைய வழக்குகளில்கூட விசாரணையில் ஏற்படும் நீண்ட கால தாமதம் மற்றும் விசாரணைக்கு முந்தைய நீண்ட கால சிறைவாசம் ஆகியவற்றை ஜாமீன் வழங்குவதற்கான காரணங்களாக மூன்று நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அமர்வு கடந்த 2021-ல் கே.ஏ. நஜீப் வழக்கில் அங்கீகரித்துள்ளதாக பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு சுட்டிக்காட்டியுள்ளது.
- உபா சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு ஜாமீன் வழங்கப்படாமல் இருக்கும் உமர் காலித் வழக்கு மற்றும் குர்விந்தர் சிங் வழக்குகளில் அவர்களுக்கு ஜாமீன் மறுத்து உச்ச நீதிமன்றத்தின் இரண்டு நீதிபதிகள் அடங்கிய அமர்வு உத்தரவிட்டதை தங்களால் ஏற்றுக்கொள்வது கடினம் என பி.வி. நாகரத்னா, உஜ்ஜல் புயான் அமர்வு தெரிவித்துள்ளது.
- மூன்று நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பு, இரண்டு நீதிபதிகள் அடங்கிய தீர்ப்பை கட்டுப்படுத்தும் என்றும் அவர்கள் கூறினர்.
- 2020 டெல்லி கலவர சதி வழக்கில் செயற்பாட்டாளர் உமர் காலித்துக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஜனவரி மாதம் ஜாமீன் மறுத்தது. மேலும், அவரது மறு ஆய்வு மனு ஏப்ரல் மாதம் நிராகரிக்கப்பட்டது. கடந்த செப்டம்பர் 2020 முதல் சிறையில் இருக்கும் அவருக்கு இந்த தீர்ப்பு, நம்பிக்கை அளிப்பதாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
- ஸ்வீடன் நாட்டிற்கு நேற்று சென்ற பிரதமர் மோடியை, அந்நாட்டின் பிரதமர் உல்ஃப் கிறிஸ்டர்சன் கோதன்பர்க் விமான நிலையத்தில் வரவேற்றார்.
- இந்தப் பயணத்தின் போது, இந்திய மற்றும் ஸ்வீடன் இடையிலான இருதரப்பு உறவுகளை மேம்படுத்தியதற்காகவும், அவரது தொலைநோக்கு தலைமைப் பண்பைப் பாராட்டும் விதமாகவும் ஸ்வீடன் நாட்டின் உயரிய விருதான 'ராயல் ஆர்டர் ஆப் போலார் ஸ்டார்' பிரதமருக்கு வழங்கப்பட்டது.
- ஸ்வீடன் இளவரசி விக்டோரியா இந்த விருதினை பிரதமர் மோடிக்கு வழங்கி கவுரவித்தார். இது பிரதமர் மோடிக்கு வழங்கப்படும் 31வது சர்வதேச உயரிய விருதாகும்.
- கடந்த 1748ம் ஆண்டில் தோற்றுவிக்கப்பட்ட இந்த விருது, ஸ்வீடன் நாட்டின் நலனுக்காகப் பாடுபடுபவர்களுக்கு வழங்கப்படும் மிக உயரிய கௌரவமாகும்.
- இந்த நிகழ்ச்சியின் போது, 1913ம் ஆண்டில் நோபல் பரிசு பெற்ற ரவீந்திரநாத் தாகூரின் நினைவாக சிறப்புப் பரிசுகளை இரு நாட்டுப் பிரதமர்களும் பரிமாறிக்கொண்டனர்.
- இந்திய தனித்துவ அடையாள ஆணையத்தின் தலைமைச் செயல் அதிகாரியாக திரு சௌரப் விஜய் இன்று (18.05.2026) பொறுப்பேற்றுக் கொண்டார்.
- 1998-ம் ஆண்டு மகாராஷ்டிரா பிரிவைச் சேர்ந்த இந்திய குடிமைப்பணி அதிகாரியான அவர், தில்லி ஐஐடி-யில் பொறியியல் பட்டம் பெற்றவராவார்.
- மத்திய அரசு மற்றும் மகாராஷ்டிரா அரசுகளில் பல்வேறு பொறுப்புகளை அவர் வகித்துள்ளார்.

