//
Type Here to Get Search Results !

16th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

16th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழக அமைச்சரவையில் பதவியேற்றுள்ள அமைச்சர்களின் இலாகா விபரங்கள்
  • தமிழக வெற்றிக் கழகம் தலைமையிலான அரசு கடந்த 10 ஆம் தேதி பொறுப்பேற்றது. முதல்வராக விஜய் பொறுப்பேற்றார். அவருடன் அமைச்சர்களாக 9 பேர் பதவியேற்றார்கள். புஸ்ஸி ஆனந்த், ஆதவ் அர்ஜுனா, அருண்ராஜ், கே.ஏ. செங்கோட்டையன், பி. வெங்கட்ரமணன், நிர்மல் குமார், ராஜ்மோகன், டி.கே. பிரபு, கீர்த்தனா ஆகியோர் பதவியேற்றார்கள். இவர்களுக்கான துறைகள் கிட்டத்தட்ட ஒருவாரம் நிறைவடைந்த நிலையில் இன்றைய தினம் அறிவிக்கப்பட்டுள்ளது.
  • முதலமைச்சர் விஜய் - பொது நிர்வாகம், உள்துறை, சிறப்பு திட்ட செயலாக்கத்துறை, மகளிர் நலன், இளைஞர் நலன், குழந்தைகள் நலன், முதியோர் நலன், மாற்றுத்திறனாளர்கள் நலத்துறை, நகர்ப்புற நிர்வாகம் மற்றும் குடிநீர் வழங்கல்.
  • என் ஆனந்த் - ஊரக வளர்ச்சி மற்றும் நீர்வளத்துறை. 
  • ஆதவ் அர்ஜுனா - பொதுப்பணித்துறை மற்றும் விளையாட்டு மேம்பாட்டு துறை.
  • கே.ஜி.அருண்ராஜ் - சுகாதாரம் மற்றும் மக்கள் நல்வாழ்வு துறை 
  • கே.ஏ. செங்கோட்டையன் - நிதித்துறை 
  • பி. வெங்கடரமணன் - உணவு மற்றும் நுகர்வோர் பாதுகாப்புத்துறை. 
  • ஆர் நிர்மல் குமார் - மின்சாரம் மற்றும் சட்டத்துறை 
  • ராஜ்மோகன் - பள்ளிக்கல்வித்துறை, தமிழ் வளர்ச்சித் துறை, செய்தி மற்றும் மக்கள் தொடர்பு துறை. 
  • டி.கே.பிரபு - கனிமவளத்துறை 
  • எஸ். கீர்த்தனா - தொழில்துறை
சோழர் கால செப்பேடுகளை இந்தியாவிடம் ஒப்படைத்த நெதர்லாந்து
  • நெதர்லாந்து நாட்டிற்கு ஐந்து நாடுகள் அரசுமுறைப் பயணமாகச் சென்றுள்ள இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் முன்னிலையில், வரலாற்றுச் சிறப்புமிக்க 11-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த சோழர் காலத்து 'ஆனைமங்கலம் செப்புப்பட்டயங்கள்' (லைடன் பட்டயங்கள்) பல ஆண்டுகால தூதரக முயற்சிகளுக்குப் பிறகு இந்தியாவிடம் அதிகாரப்பூர்வமாக ஒப்படைக்கப்பட்டுள்ளன.
  • காலனித்துவ காலத்தில் எடுத்துச் செல்லப்பட்ட கலைப்பொருட்களைத் திரும்பப் பெறும் இந்தியாவின் கலாச்சார மீட்பு நடவடிக்கைகளில் இந்த நிகழ்வு ஒரு முக்கிய மைல்கல்லாகக் கருதப்படுகிறது.
  • நெதர்லாந்தில் 'லைடன் பட்டயங்கள்' என்று அழைக்கப்படும் இந்த வரலாற்று ஆவணங்கள், கி.பி. 985 முதல் 1014 வரை ஆட்சி செய்த மாமன்னர் முதலாம் ராஜராஜ சோழனின் ஆட்சிக் காலத்தைச் சேர்ந்தவை ஆகும். 
  • இந்தியாவின் எல்லைகளுக்கு வெளியே பாதுகாக்கப்பட்ட மிக முக்கியமான தமிழ் பாரம்பரியச் சின்னங்களில் ஒன்றாக இவை கருதப்படுகின்றன.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel