
15th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நவீன நடுத்தர போர்விமானத்தின் மைய ஒருங்கிணைப்பு, விமானப் பரிசோதனை மையம் மற்றும் கடற்படை தளவாட உற்பத்தி நிறுவனத்திற்கு பாதுகாப்பு அமைச்சரும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சரும் அடிக்கல் நாட்டினர்
- ஆந்திரப் பிரதேசத்தின் ஸ்ரீ சத்ய சாய் மாவட்டத்தில் உள்ள புட்டபர்த்தியில், பல்வேறு உத்திசார் விண்வெளி மற்றும் பாதுகாப்புத் திட்டங்களுக்கு பாதுகாப்பு அமைச்சர் திரு ராஜ்நாத் சிங் மற்றும் ஆந்திரப் பிரதேச முதலமைச்சர் திரு என் சந்திரபாபு நாயுடு ஆகியோர் 2026 ,மே 15 அன்று அடிக்கல் நாட்டினர்.
- ஐந்தாம் தலைமுறை நவீன நடுத்தரப் போர் விமானம் மற்றும் பிற எதிர்கால உள்நாட்டுத் தளங்களின் மேம்பாட்டை விரைவுபடுத்துவதற்காக புட்டபர்த்தியில் மைய ஒருங்கிணைப்பு மற்றும் விமானப் பரிசோதனை மையத்திற்கும், நீருக்கடியில் இயங்கும் நவீன ஆயுதங்கள் மற்றும் கடற்படை அமைப்புகளின் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்காக அனகாபள்ளி மாவட்டத்தில் உள்ள டி சிரசபள்ளி கிராமத்தில் கடற்படை தளவாடங்கள் உற்பத்தி நிறுவனத்திற்கும் அடிக்கல் நாட்டப்பட்டது.
- நவீன நடுத்தர போர்விமானத் திட்டத்திற்கான மொத்த ஒதுக்கீடு சுமார் ரூ. 15,000 கோடி ஆகும். மேலும், டிஆர்டிஓ -வின் துணை அமைப்பான வானூர்தியியல் மேம்பாட்டு முகமையின் மைய ஒருங்கிணைப்பு மற்றும் விமானப் பரிசோதனை மையம் இத்திட்டத்தின் ஒரு முக்கிய அங்கமாகும். இந்த மையம் ஏறத்தாழ ரூ. 2,000 கோடி செலவில் அமைக்கப்பட்டு வருகிறது.
- பிரதமர் நரேந்திர மோடி ஐக்கிய அரபு எமிரேட்ஸ் உள்ளிட்ட ஐந்து நாடுகளுக்கு அரசு முறை பயணமாக இன்று (மே 15) டெல்லியில் இருந்து புறப்பட்டுச் சென்றார்.
- அபுதாபியில் அவருக்கு உற்சாகமான வரவேற்பு அளிக்கப்பட்டது. ஐக்கிய அரபு எமிரேட்ஸ் அதிபர் ஷேக் முகமது பின் சையாத் அல் நயான் முன்னிலையில் பிரதமர் மோடி முக்கிய ஒப்பந்தங்களில் கையெழுத்திட்டார்.
- மேலும் இருதரப்பு உறவுகளின் அனைத்து அம்சங்களையும் ஆய்வு செய்த தலைவர்கள், எரிசக்தி, வர்த்தகம், முதலீடு, பாதுகாப்பு, ஃபின்தெக், உள்கட்டமைப்பு, கல்வி, கலாச்சாரம் மற்றும் இருநாட்டு மக்களிடையேயான உறவுகள் உட்பட பல துறைகளில் விரிவான மூலோபாய கூட்டாண்மை மேலும் வலுவடைவதை வரவேற்றனர்.
- அதோடு இருதரப்பு ஒத்துழைப்பை மேலும் வலுப்படுத்தும் வகையில், இந்த பயணத்தின் போது கடல்சார் மேம்பாட்டு நிதித் திட்டத்தின் கீழ், வாடினாரில் கடல்சார் உள்கட்டமைப்பு மற்றும் கப்பல் பழுதுபார்க்கும் மையத்தை அமைப்பதற்காக கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம் மற்றும் துபாயின் டிரைடாக்ஸ் வேர்ல்ட் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
- கப்பல் பழுதுபார்ப்பில் திறன் மேம்பாடு குறித்து கொச்சின் ஷிப்யார்ட் நிறுவனம், துபாய் டிரைடாக்ஸ் வேர்ல்ட் மற்றும் கடல்சார் மற்றும் கப்பல் கட்டும் திறன் மேம்பாட்டு மையம் இடையேயான முத்தரப்பு புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்தானது.
- இது திறமையான கடல்சார் பணியாளர்களை திரட்டவும், பயிற்சி அளிக்கவும், வேலைவாய்ப்பு வழங்கவும் ஒரு கட்டமைப்பை உருவாக்குகிறது.·
- இந்தியாவின் சி-டாக் மற்றும் ஐக்கிய அரபு அமீரகத்தின் ஜி-42 கூட்டுறவில் 8 எக்ஸாஃப்ளாப் சூப்பர் கம்ப்யூட்டிங் மையத்தை அமைப்பதற்கான விதிமுறைகள் ஒப்பந்தம் கையெழுத்தானது.

