
11st MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழ்நாடு சட்டசபை சபாநாயகராக ஜேசிடி பிரபாகர் போட்டியின்றி தேர்வு
- தமிழகத்தில் தவெக தலைமையிலான புதிய அரசு ஆட்சி அமைந்துள்ளது. அக்கட்சியின் தலைவர் விஜய் தமிழக முதல்வராக பொறுப்பேற்று கொண்டார்.
- தற்காலிக சபாநாயகர் கருப்பையா தலைமையில் இன்று சட்டசபை கூட்டம் நடந்தது. அவர் புதிய எம்எல்ஏக்களுக்கு பதவி பிரமாணம் செய்து வைத்தார்.
- இந்த சூழலில் நாளைய தினம் (மே 12) சபாநாயகர், துணை சபாநாயகர் தேர்தல் நடைபெறுகிறது.சபாநாயகர் தேர்தலில் போட்டியிடுவதற்காக ஆளும் கட்சியான தவெக சார்பில், ஆயிரம் விளக்கு சட்டமன்ற உறுப்பினர் ஜே.சி.டி. பிரபாகர் இன்று வேட்புமனுத் தாக்கல் செய்தார்.
- சென்னை தலைமைச் செயலகத்தில் உள்ள சட்டமன்றச் செயலாளர் அலுவலகத்தில் அவர் தனது மனுவை சமர்ப்பித்தார். இன்று மாலையுடன் அவகாசம் முடிந்த நிலையில், வேறு யாரும் வேட்புமனு தாக்கல் செய்யவில்லை.
- இதனால், ஜே.சி.டி. பிரபாகர் போட்டியின்றி தேர்வாகிறார். துணை சபாநாயகராக துறையூர் தொகுதி எம்.எல்.ஏ. ரவிசங்கர் தேர்வு செய்யப்பட உள்ளார்.

