//
Type Here to Get Search Results !

10th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

10th MAY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழகத்தின் 13வது முதலமைச்சராக ஜோசப் விஜய் பதவியேற்பு
  • தமிழகத்தின் 13-வது முதலமைச்சராகப் பதவியேற்ற சி. ஜோசப் விஜய், ஆளுநர் புறப்பட்டுச் சென்ற அடுத்த நிமிடமே, தான் பதவியேற்ற அதே மேடையில் மக்கள் முன்னிலையில் மூன்று மிக முக்கியமான அரசாணைகளில் கையெழுத்திட்டுத் தனது அதிரடி ஆட்சியைத் தொடங்கியுள்ளார்.
  • முதலமைச்சரின் முதல் கையெழுத்து தமிழக மக்களின் மின்சாரச் சுமையைக் குறைக்கும் வகையில் இரண்டு மாதங்களுக்கு 500 யூனிட் வரை மின்சாரம் பயன்படுத்துபவர்களுக்கு, 200 யூனிட் மின்சாரம் இலவசம் என்ற திட்டத்தை அவர் அமல்படுத்தியுள்ளார். 
  • பெண்களுக்கு எதிரான குற்றங்களை இரும்புக்கரம் கொண்டு ஒடுக்கவும், மாநிலம் முழுவதும் பெண்களுக்குப் பாதுகாப்பான சூழலை உறுதி செய்யவும் "சிங்கப்பெண் சிறப்பு அதிரடிப்படை" (Singapen Special Task Force) என்ற புதிய பிரிவை உருவாக்கும் கோப்பில் முதல்வர் இரண்டாவது கையெழுத்திட்டார்.
  • தமிழக இளைஞர்களின் எதிர்காலத்தைச் சீரழிக்கும் போதைப்பொருள் நடமாட்டத்தை முற்றிலுமாக ஒழிக்க, ஒரு பிரத்யேக போதைப்பொருள் தடுப்புப் படையை (Anti-Narcotics Force) உருவாக்கும் கோப்பில் மூன்றாவது கையெழுத்திட்டார்.
மேற்கு வங்க முதல்வராக சுவேந்து அதிகாரி பதவியேற்பு
  • மேற்கு வங்க முதலமைச்சராக சுவேந்து அதிகாரி பதவியேற்றார். அந்த மாநிலத்தில் பாஜகவைச் சேர்ந்த முதல் முதலமைச்சர் இவர் ஆவார்.
  • பிரதமர் நரேந்திர மோதி, உள்துறை அமைச்சர் அமித் ஷா மற்றும் பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் உள்ளிட்ட பல பாரதிய ஜனதா தலைவர்கள் முன்னிலையில், அவர் வங்காள மொழியில் பதவியேற்றார்.
தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு பிரதமர் நரேந்திர மோடி அடிக்கல் நாட்டி  தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி இன்று, தெலங்கானாவின் ஹைதராபாத்தில் சுமார் ₹9,400 கோடி மதிப்பிலான பல்வேறு வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்; மேலும் அவற்றை தொடங்கி வைத்து, நாட்டுக்கு அர்ப்பணித்தார். 
  • அங்கு கூடியிருந்த மக்களிடையே உரையாற்றிய பிரதமர், தேசிய மற்றும் உலகளாவிய முக்கியத்துவம் வாய்ந்த ஒரு மையமாக ஹைதராபாத் அடைந்துள்ள மாற்றமிகு முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel