//
Type Here to Get Search Results !

2nd APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

2nd APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தமிழக புதிய டிஜிபியாக சந்தீ ராய் ரத்தோர் நியமனம்
  • தமிழகக் காவல்துறையின் சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக பணியாற்றி வந்த வெங்கட்ராமன் மாற்றப்பட்டுள்ளார். அவருக்குப் பதிலாக, புதிய சட்டம்-ஒழுங்கு டிஜிபியாக சந்தீப் ராய் ரத்தோர் (Sandeep Rai Rathore, IPS) நியமிக்கப்பட்டுள்ளார். 
  • இவர் ஏற்கனவே சென்னை மாநகரக் காவல் ஆணையர் மற்றும் ஆவடி ஆணையராகப் பணியாற்றிய அனுபவம் கொண்டவர்.
  • தாம்பரம் மாநகரக் காவல் ஆணையராக இருந்த அமல்ராஜ் மாற்றப்பட்டு, அவருக்குப் பதிலாக சஞ்சய் குமார் புதிய ஆணையராக நியமிக்கப்பட்டுள்ளார். 
  • கோவை உள்ளிட்ட முக்கிய மாவட்டங்களை உள்ளடக்கிய மேற்கு மண்டலத்தின் புதிய ஐஜியாக (IGP) ரம்யா பாரதி நியமிக்கப்பட்டுள்ளார். தேர்தல் நேரத்தில் இந்த மண்டலத்தில் சட்டம்-ஒழுங்கைப் பராமரிப்பதில் இவரது பங்கு முக்கியமானது.
அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது - சென்னை உயர்நீதிமன்றம் தீர்ப்பு
  • நாட்டையே உலுக்கிய சிதம்பரம் அண்ணாமலை பல்கலைக்கழக மாணவன் நாவரசு கொலை வழக்கில், ஆயுள் தண்டனை பெற்ற ஜான் டேவிட்டை முன்கூட்டி விடுதலை செய்யும் தமிழ்நாடு அமைச்சரவையின் முடிவை தமிழ்நாடு ஆளுநர் நிராகரித்தார்.
  • இதை எதிர்த்து சென்னை உயர்நீதிமன்றத்தில் ஜான்டேவிட்டின் தாயார் ஆட்கொணர்வு மனு தாக்கல் செய்தார். இதேபோல முன்கூட்டியே விடுதலை செய்ய அரசு செய்த பரிந்துரையை ஆளுநர் நிராகரித்து உத்தரவை எதிர்த்து பல வழக்குகள் தொடரப்பட்டன.
  • அவ்வாறு சென்னையில் தொடரப்பட்ட வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, தமிழ்நாடு அரசு செய்யும் பரிந்துரையை ஆளுநர் நிராகரித்தது தவறு என்றும், அதற்கு அதிகாரம் இல்லை என்றும் கூறி, அரசின் பரிந்துரைகளை மீண்டும் பரிசீலிக்க வேண்டும் என உத்தரவிட்டது.
  • இதேபோன்று மதுரையில் தாக்கல் செய்யப்பட்ட வழக்குகளை விசாரித்த இரு நீதிபதிகள் அமர்வு, அரசின் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் உள்ளது என்று உத்தரவிட்டது.
  • ஒரே விவகாரத்தில் இரு வேறு தீர்வுகள் காணப்பட்டதால், அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிப்பதற்கோ அல்லது ஏற்பதற்கோ உள்ள அதிகாரம் தொடர்பாக 3 நீதிபதிகள் கொண்ட முழு அமர்வு விசாரணைக்கு பரிந்துரை செய்யப்பட்டது.
  • அதன்படி நீதிபதிகள் ஏ.டி.ஜெகதீஷ்சந்திரா, ஜி.கே.இளந்திரையன், சுந்தர் மோகன் ஆகியோர் கொண்ட முழு அமர்வில் விசாரணை நடைபெற்றபோது, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வழக்கறிஞர்கள், அரசின் பரிந்துரைகளை ஆளுநர் நிராகரிக்க முடியாது என வாதிட்டனர்.
  • தமிழ்நாடு அரசு தரப்பில் ஆஜரான தலைமை குற்றவியல் வழக்கறிஞர் அசன் முகமது ஜின்னா, உச்ச நீதிமன்றம், உயர்நீதிமன்றங்களின் பல்வேறு தீர்ப்புகளை மேற்கோள் காட்டி முன்கூட்டியே விடுதலை செய்ய அமைச்சரவை செய்யும் பரிந்துரையை நிராகரிக்க ஆளுநர்களுக்கு அதிகாரம் இல்லை என்று வாதிட்டார்.
  • அனைத்து தரப்பு வாதங்களையும் நிறைவடைந்த நிலையில், முன் விடுதலை தொடர்பான தமிழக அமைச்சரவையின் பரிந்துரைகளில் ஆளுநரின் அதிகாரம் தொடர்பான வழக்குகளின் மீதான தீர்ப்பை தேதி குறிப்பிடாமல் தள்ளிவைத்திருந்தனர்.
  • இந்த வழக்குகளில் இன்று தீர்ப்பளித்த நீதிபதிகள், முன்கூட்டியே விடுதலை மற்றும் தண்டனை குறைப்பு குறித்த அமைச்சரவை முடிவுக்கு ஆளுநர் கட்டுப்பட்டவர் என்றும், அமைச்சரவை முடிவை நிராகரிக்க ஆளுநருக்கு அதிகாரம் கிடையாது என்றும் கூறி, அதனால் அமைச்சரவை முடிவை ஆளுநர் நிராகரிக்க முடியாது என்று தீர்ப்பளித்துள்ளனர்.
ஆந்திரத்தின் தலைநகராக அமராவதி - இரு அவைகளிலும் மசோதா நிறைவேற்றம்
  • ஆந்திர பிரதேச மாநிலத்தின் நிரந்தர தலைநகரமாக அமராவதியை அங்கீகரிக்கும் மசோதா, மாநிலங்களவையில் இன்று (ஏப்.2) ஒப்புதல் அளிக்கப்பட்டது. முன்னதாக, புதன்கிழமையில் மக்களவையிலும் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
  • இதனைத் தொடர்ந்து, இம்மசோதா குடியரசுத் தலைவா் ஒப்புதலுக்கு அனுப்பப்படும். அவரின் ஒப்புதல் கிடைத்ததும், 2026 ஜூன் 2 முதல் ஆந்திர தலைநகா் அமராவதி என்று சட்ட ரீதியாக அங்கீகாரம் கிடைத்துவிடும்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel