
25th APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
பேடிஎம் வங்கியின் உரிமத்தை ரத்து செய்தது ஆர்பிஐ
- யுபிஐ மற்றும் வங்கி சேவைகள் வழங்கும் பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கியின் உரிமத்தை ரத்து செய்வதாக, வெள்ளிக்கிழமை (ஏப்.24) இந்திய ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது.
- இதனைத் தொடர்ந்து, அந்த வங்கியின் சேவைகள் நிறுத்தப்படுவதால் அதன் முழுமையான வைப்புத்தொகை சார்ந்த பொறுப்புகளைத் திருப்பி வழங்குவதற்குத் தேவையான நிதியைக் கொண்டுள்ளது எனவும், வங்கியைக் கலைக்கக் கோரி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்போவதாகவும் ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது.
- முன்னதாக, பேடிஎம் பேமெண்ட்ஸ் வங்கி புதிய வாடிக்கையாளர்களைச் சேர்ப்பதற்கு, கடந்த 2022 மார்ச் மாதம் முதல் தடை விதிக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

