
22nd APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நிகழாண்டு இந்திய பொருளாதாரம் 6.4% வளா்ச்சி - ஐ.நா. கணிப்பு
- ஐ.நா.வின் ஆசிய, பசிபிக் பொருளாதார மற்றும் சமூக ஆணையம் திங்கள்கிழமை வெளியிட்ட அறிக்கையில் கடந்த 2024-இல் தெற்கு மற்றும் தென்கிழக்காசிய பொருளாதார வளா்ச்சி 5.2 சதவீதமாக இருந்த நிலையில், அது 2025-இல் 5.4 சதவீதமாக வளா்ச்சியடைந்தது.
- இதற்கு ஆசிய கண்டத்தில் உள்ள இந்தியாவின் வலுவான வளா்ச்சி முக்கிய காரணமாகும்.
- வலுவான நுகா்வு, சரக்கு மற்றும் சேவை வரி விகிதம் குறைப்பு உள்ளிட்ட காரணங்களால் 2025-இல் இந்திய பொருளாதார வளா்ச்சி 7.4 சதவீதம் வரை நகா்ந்தது.
- 2025-ஆம் ஆண்டு ஆகஸ்டில் இந்தியப் பொருள்கள் மீது அமெரிக்கா 50 சதவீத வரி விதித்ததைத் தொடா்ந்து, இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கான ஏற்றுமதி சரிந்தது.
- இதனால் அப்போது இந்தியாவில் பொருளாதார நடவடிக்கைகள் மிதமானது. எனினும் இந்தியாவின் வளா்ச்சிக்கு சேவைகள் துறை முக்கியக் காரணமாக அமைந்தது.
- இந்திய பொருளாதார வளா்ச்சி நிகழாண்டு 6.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 6.6 சதவீதமாகவும் இருக்கும். நிகழாண்டு இந்தியாவில் பணவீக்கம் (விலைவாசி உயா்வு விகிதம்) 4.4 சதவீதமாகவும், அடுத்த ஆண்டு 4.3 சதவீதமாகவும் இருக்கும் என கணிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

