//
Type Here to Get Search Results !

1st APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

1st APRIL 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

மார்ச் மாத 2026 ஜிஎஸ்டி வசூல் 
  • மார்ச் மாத ஜிஎஸ்டி வசூல் ரூ. 2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது. இது, முந்தைய ஆண்டு மார்ச் மாதம் வசூல் ஆன தொகையை விட 9 சதவீதம் அதிகம் ஆகும். 
  • 2025 - 26 நிதியாண்டில் வசூல் ஆன அதிகபட்ச 3வது ஜிஎஸ்டி வருமானம் இதுவாகும். ஏப்ரல் மாதம் ரூ.2.36 லட்சம் கோடியும், மே மாதம் ரூ.2.01 லட்சம் கோடியும் வசூல் ஆகி இருந்தது. கடந்த ஆண்டு மார்ச் மாதம் 1.83 லட்சம் கோடி வசூல் ஆகி இருந்தது.
  • இந்த நிதியாண்டு மட்டும் ரூ.22.27 லட்சம் கோடி ஜிஎஸ்டி வசூல் ஆகி உள்ளது.உள்நாட்டு மொத்த வருமானம் 5.9 சதவீதம் அதிகரித்து ரூ.1.46 லட்சம் கோடியாக உள்ளது. இறக்குமதி மூலம் கிடைக்கும் வருமானம் 17.8 சதவீதம் அதிகரித்து ரூ.53,861 கோடியாக உள்ளது.
  • கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் ஜிஎஸ்டியில் மத்திய அரசு சீர்திருத்தம் செய்தது. 375 பொருட்கள் மீதான வரி விகிதங்கள் குறைக்கப்பட்டன. 4 அடுக்காக இருந்தது 2 ஆக குறைக்கப்பட்டது. புகையிலை மற்றும் ஆடம்பர பொருட்களுக்கு மட்டும் 40 சதவீத ஜிஎஸ்டி விதிக்கப்பட்டது. 
  • இதற்கு பிறகு முதல் மாதம் ஜிஎஸ்டி குறைந்தது. பிறகு நவம்பரில் ரூ.1.70 லட்சம் கோடியும்டிசம்பரில் ரூ.1.74 லட்சம் கோடியும்இந்தாண்டு ஜனவரியில் ரூ. 1.93 லட்சம் கோடி என அதிகரித்தது.
  • கடந்த பிப்., மாதம் ரூ.1.83 லட்சம் கோடியாக குறைந்த நிலையில் மார்ச் மாத வசூல் ரூ. 2 லட்சம் கோடியை தாண்டி உள்ளது
ஆந்திரத்தின் ஒரே தலைநகர் அமராவதி - மக்களவையில் மசோதா நிறைவேற்றம் 
  • ஆந்திர பிரதேசத்தில் இருந்து தெலங்கானா தனி மாநிலமாக பிரிக்கப்பட்டபோது, சட்டப் பிரிவு 5 (2) -இன் படி, தற்காலிகமாக இரு மாநிலங்களுக்கும் பொதுத் தலைநகராக ஹைதராபாத் இருக்கும், 10 ஆண்டுகள் நிறைவடைந்த பிறகு, ஹைதராபாத் தெலங்கானா மாநிலத்தின் தலைநகராகத் தொடரும் என்று அறிவிக்கப்பட்டது.
  • அப்போது ஆந்திரத்தின் முதல்வராக இருந்த சந்திரபாபு நாயுடு, அமராவதியைத் தலைநகராக கட்டமைக்கும் முயற்சியில் ஈடுபட்டார்.
  • ஆனால், 2019-ல் ஆந்திரத்தின் முதல்வராகப் பதவியேற்ற ஜெகன் மோகன் ரெட்டி, அமராவதியைச் சட்டப்பேரவைத் தலைநகராகவும், கர்நூலை நீதித்துறைத் தலைநகராகவும், விசாகப்பட்டினத்தை நிர்வாகத் தலைநகராகவும் கொண்டு, 'மூன்று தலைநகரங்கள்' திட்டத்தைச் செயல்படுத்தும் முயற்சியில் ஈடுபட்டார். எனினும், 2021 -ஆம் ஆண்டில், ஜெகன் மோகன் ரெட்டி அரசு அத்திட்டத்தைத் திரும்பப் பெற்றுக்கொண்டது.
  • ஆந்திரத்தின் முதல்வராக மீண்டும் பதவியேற்றுள்ள சந்திரபாபு நாயுடு அரசு, மாநிலத்தின் ஒரே தலைநகராக அமராவதியை அங்கீகரித்து சட்டப்பூர்வ பாதுகாப்பு வழங்க மத்திய அரசை வலியுறுத்தி தீர்மானம் நிறைவேற்றியது.
  • இந்த நிலையில், அமராவதியை ஆந்திரத்தின் ஒரே தலைநகராக மாற்றும் வகையில், ஆந்திரப் பிரதேச மறுசீரமைப்பு திருத்த மசோதாவை மத்திய உள்துறை இணையமைச்சர் நித்யானந்த் ராய் புதன்கிழமை தாக்கல் செய்தார்.
  • இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவித்து ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்பிக்கள் வெளிநடப்பு செய்த நிலையில், குரல் வாக்கெடுப்பு மூலம் மசோதா நிறைவேற்றப்பட்டது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel