//
Type Here to Get Search Results !

9th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

9th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

திண்டுக்கல்லில் இந்தியாவின் முதல் தேவாங்கு காப்பகத்தை வனத்துறை அமைச்சர் ராஜகண்ணப்பன்  திறந்து வைத்தார் 
  • 'தேவாங்கு' எனப்படும் அரிய வகை உயிரினத்தைப் பாதுகாக்க, திண்டுக்கல் மாவட்டம் அய்யலூரில் சுமார் 16.5 கோடி மதிப்பீட்டில் அதிநவீனப் பாதுகாப்பு மையத்தை அமைத்துள்ளது தமிழக அரசு.தமிழக வனத்துறை அமைச்சர் ஆர்.எஸ். ராஜகண்ணப்பன் இந்த மையத்தைத் திறந்து வைத்தார். 
  • மரங்களிலேயே தனது வாழ்நாளைக் கழிக்கும், பூச்சிகளை உண்ணும் பழக்கம் கொண்ட இந்தச் சிறிய பாலூட்டி இனத்தைப் பாதுகாப்பதில் இந்த மையம் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க மைல்கல்லாகும்.
  • இந்த விழாவில், தேவாங்கு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்த பிரத்யேக இணையதளம் மற்றும் ஒரு கைபேசி செயலியும் அறிமுகப்படுத்தப்பட்டது. 
  • இதன் மூலம் பொதுமக்கள் மற்றும் ஆராய்ச்சியாளர்கள் தேவாங்கு பாதுகாப்பு குறித்த நேரடித் தகவல்களைப் பெற முடியும். இந்த மையம் வெறும் அருங்காட்சியகமாக மட்டுமில்லாமல், ஒரு வாழும் ஆய்வகமாக செயல்படும். 
  • தேவாங்குகளின் வாழ்க்கை முறை மற்றும் சூழலியல் குறித்து மாணவர்கள் அறிந்துகொள்ளத் தகவல் தொடர்பு மையம் மற்றும் பார்வையாளர்கள் மையம் அமைக்கப்பட்டுள்ளது. 
ராஜ்யசபா தேர்தல் 2026 - தமிழகத்தில் 6 பேரும் போட்டியின்றி தேர்வு
  • மார்ச் 16-ஆம் தேதி தேர்தல் நடைபெறவிருந்த நிலையில், தற்போது 6 வேட்பாளர்களும் போட்டியின்றித் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது. தலைமைச் செயலகத்தில் பிற்பகல் இதற்கான அறிவிப்பைத் தேர்தல் நடத்தும் அதிகாரி சாந்தி வெளியிட்டார்.
  • தமிழக சட்டமன்றத்தில் உள்ள உறுப்பினர்களின் பலத்தின் அடிப்படையில், திமுக கூட்டணி மற்றும் அதிமுக கூட்டணி சார்பில் தலா 3 பேர் வீதம் 6 பேர் களம் கண்டனர்.
  • அதிமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக தம்பிதுரை (அதிமுக), அன்புமணி ராமதாஸ் (பாமக), எல்.கே. சுதீஷ் (தேமுதிக) மற்றும் திமுக & கூட்டணிக் கட்சிகள் சார்பாக திருச்சி சிவா (திமுக), கான்ஸ்டன்டைன் ரவீந்திரன் (திமுக), கிறிஸ்டோபர் திலக் (காங்கிரஸ்) என 6 பேர் போட்டியிட்டிருந்தனர்.
  • இந்தத் தேர்தலுக்காக மொத்தம் 12 பேர் வேட்புமனுத் தாக்கல் செய்திருந்தனர். ஆனால், பிரதான கட்சிகளைச் சேர்ந்த மேற்கண்ட 6 பேரின் மனுக்கள் மட்டுமே முறைப்படி இருந்தன. மற்ற 6 பேரின் மனுக்கள் தகுதியற்றவை எனக் கூறி நிராகரிக்கப்பட்டன. 
  • வேட்புமனுக்களைத் திரும்பப் பெறுவதற்கான கால அவகாசம் இன்று பிற்பகல் 3 மணியுடன் முடிவடைந்த நிலையில், வேறு யாரும் போட்டியில் இல்லாததால் இவர்கள் 6 பேரும் "போட்டியின்றித் தேர்வு" செய்யப்பட்டதாக அறிவிக்கப்பட்டனர். 
  • தேர்வு செய்யப்பட்ட அன்புமணி ராமதாஸ், தம்பிதுரை, சுதீஷ் மற்றும் கிறிஸ்டோபர் திலக் ஆகியோர் நேரில் வந்து அதற்கான சான்றிதழ்களைப் பெற்றுக்கொண்டனர்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel