//
Type Here to Get Search Results !

8th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

8th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி தொடக்கி வைத்தார்
  • தில்லியில் ரூ.33,500 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி இன்று (மார்ச் 8) தொடக்கி வைத்து, சில திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.
  • இந்த நிகழ்ச்சிக்கு முன்னதாக, சரோஜனி நகரில் பொதுக் குடியிருப்புத் திட்டத்தில், பெண் பயனாளிகளுக்கு வீட்டு சாவிகளை பிரதமர் மோடி வழங்கினார்.
  • இதைத் தொடர்ந்து, 12.3 கி.மீ. நீளமுள்ள மஜ்லிஸ் பார்க்-மௌஜ்பூர்-பாபர்பூர் (இளஞ்சிவப்பு) மெட்ரோ வழித்தடத்தையும், 9.9 கி.மீ. நீளமுள்ள தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பார்க் (மெஜந்தா) மெட்ரோ வழித்தடத்தையும் மோடி தொடக்கி வைத்தார்.
  • புராரி, ஜகத்பூர்-வஜீராபாத், காஜூரி காஸ், பஜன்புரா, யமுனை விஹார் உள்ளிட்ட வடக்கு மற்றும் கிழக்கு தில்லி பகுதிகளுக்கு இந்த மஜ்லிஸ் பார்க்-மௌஜ்பூர்-பாபர்பூர் வழித்தடம் சிறந்த இணைப்பை ஏற்படுத்தும்.
  • அதேபோல், தீபாலி சௌக்-மஜ்லிஸ்-பார்க் உயர்நிலை மெட்ரோ வழித்தடம் மதுபன் சௌக், உத்தர் பீதம்புரா-பிரசாந்த் விஹார், ஹைதர்பூர் பட்லி மோர், பாலாஸ்வா உள்ளிட்ட பகுதிகளுக்கு மெட்ரோ இணைப்பை மேம்படுத்தும்.
  • மெட்ரோ விரிவாக்கத்துக்கு அடிக்கல்: மெட்ரோ விரிவாக்கம் பகுதி 5-ஏ திட்டத்தில் 3 புதிய மெட்ரோ வழித்தடங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.
  • ராமகிருஷ்ணா ஆசிரம் மார்க்-இந்திரபிரஸ்தா, ஏரோசிட்டி-இந்திரா காந்தி சர்வதேச விமான நிலையம் முனையம்-1 மற்றும் துக்ளகாபாத்-கலிந்தி குஞ்ஜ் ஆகிய வழித்தடங்கள் இதில் அடங்கும்.
  • இவை மத்திய தில்லி, தெற்கு தில்லி, நொய்டா மற்றும் விமான நிலையம் ஆகியவற்றுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தும்.
டி20 உலககோப்பை 2026 - 3வது முறையாக வென்று இந்திய அணி சரித்திர சாதனை
  • அகமதாபாத் நரேந்திர மோடி மைதானத்தில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் டாஸ் வென்ற நியூசிலாந்து அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது. 
  • இதனை அடுத்து களமிறங்கிய இந்திய அணி 20 ஓவர் முடிவில் 5 விக்கெட் இழப்பிற்கு 255 ரன்கள் குவித்தது. இது டி20 உலக கோப்பை இறுதிப் போட்டியில் அடிக்கப்பட்ட அதிகபட்ச ஸ்கோர் ஆகும். 
  • இதனால் 256 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற கடினமான இலக்கில் நியூசிலாந்து களமிறங்கியது. நியூசிலாந்து அணி 159 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வியை தழுவியது. 
  • இதன் மூலம் மூன்றாவது முறையாக டி20 உலக கோப்பையை வென்று இந்திய அணி வீரர்கள் சாதனை படைத்தனர். இறுதிப் போட்டியில் சிறப்பாக பந்துவீசிய பும்ரா 4 ஓவர்களில் 15 ரன்கள் விட்டு கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel