//
Type Here to Get Search Results !

5th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

5th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

பிச்சாவரத்தில் அலையாத்தி பாதுகாப்பு மையம், மரக்காணத்தில் சர்வதேச பறவைகள் மையம் அமைக்க அடிக்கல் நாட்டினார் முதல்வர் மு.க.ஸ்டாலின்
  • தமிழ்நாடு முதலமைச்சர் திரு.மு.க.ஸ்டாலின் அவர்கள் 4.3.2026 அன்று தலைமைச் செயலகத்தில், சுற்றுச்சூழல், காலநிலை மாற்றம் மற்றும் வனத்துறை சார்பில் தமிழ்நாடு நீடிக்கக்கூடிய கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதார திட்டத்தின் கீழ் பிச்சாவரத்தில் 26.50 கோடி ரூபாய் மதிப்பீட்டில் அமைக்கப்படும் அலையாத்தி பாதுகாப்பு மையம், தமிழ்நாடு கடல் வளங்கள் மற்றும் நீலப் பொருளாதாரம் (TN-SHORE) திட்டத்தின் கீழ் மரக்காணத்தில் 50.30 கோடி ரூபாய் மதிப்பீட்டில் சர்வதேச பறவைகள் மையம், 'நீலகிரி வரையாடு திட்டத்தின்' கீழ் கோயம்புத்தூர் மாவட்டம், காந்திபுரத்தில் நீலகிரி வரையாடு பாதுகாப்பு மையம் ஆகியவற்றிற்கு அடிக்கல் நாட்டினார்.
  • மேலும், 2025 ஆம் ஆண்டிற்கான டாக்டர் ஏ.ஜே.டி. ஜான்சிங் வன உயிரின பாதுகாப்பு விருதினை மறைந்த டாக்டர் வைத்தியநாதன் கிருஷ்ணமூர்த்தி அவர்களுக்கு வழங்கிடும் விதமாக அவரது மகனிடம் வழங்கினார்.
புதுதில்லியில்  மக்கள் தொகை கணக்கெடுப்புக்கான டிஜிட்டல் தளங்கள் மற்றும் சின்னங்களை மத்திய உள்துறை அமைச்சர் அமித் ஷா அறிமுகப்படுத்தினார்
  • மத்திய உள்துறை அமைச்சரும் கூட்டுறவுத் துறை அமைச்சருமான திரு அமித் ஷா, மக்கள் தொகை கணக்கெடுப்பு 2027-க்கான நான்கு டிஜிட்டல் தளங்களை புதுதில்லியில் அறிமுகம் செய்தார். 
  • அத்துடன் கணக்கெடுப்புக்கான "பிரகதி" (பெண்), "விகாஸ்" (ஆண்) என்ற சின்னங்களையும் அவர் வெளியிட்டார். நாடு முழுவதும் கணக்கெடுப்பு நடவடிக்கைகளை எளிதாக்குவதற்காக, கணினி மேம்பாட்டு மையம் மேம்பட்ட டிஜிட்டல் தளங்களை உருவாக்கியுள்ளது. 
மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என். ரவி நியமனம்
  • மேற்கு வங்க ஆளுநராகப் பதவி வகித்து வரும் சி.வி. ஆனந்த போஸ் தனது பதவியை வியாழக்கிழமை (மார்ச் 5 ) ராஜிநாமா செய்துள்ளார். மேற்கு வங்கத்தின் புதிய ஆளுநராக  ஆர்.என். ரவி நியமனம் செய்யப்பட்டுள்ளார்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel