
3rd MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவிலேயே முதன்முறையாக தமிழ்நாட்டில் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம்
- சென்னை ஓமந்தூரார் அரசினர் தோட்டத்தில் உள்ள தமிழ்நாடு அரசு பன்னோக்கு உயர்சிறப்பு மருத்துவமனையில், ரூ.9 கோடி மதிப்பீட்டில் தமிழ்நாடு துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் இன்று (03.03.2026) விளையாட்டு மருத்துவம் மற்றும் நுண்துளை மூட்டு அறுவை சிகிச்சை துறையில் சிறப்பு உயர்திறன் மையம் (Centre of Excellence) திறந்து வைத்து மக்கள் பயன்பாட்டிற்கு கொண்டு வந்தார்.
- இதன்மூலம் தமிழ்நாட்டில் எந்த பகுதியில் உள்ள கிராமமாக இருந்தாலும், குக்கிராமமாக இருந்தாலும் விளையாட்டு வீரர்களுக்கு பிரத்யேகமான சிகிச்சை மையம் மாநில அரசு மருத்துவமனைகளில் முதன்முறையாக தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- தனியார் மருத்துவமனைகளில் ஓரிரு இடங்களில் இதற்குரிய மருத்துவ வசதிகள் இந்தியாவில் இருந்தாலும் மாநில மருத்துவமனைகளில் முதன்முறையாக சிகிச்சை மையம் இங்கு தொடங்கி வைக்கப்பட்டுள்ளது.
- முதல்வர் மு.க.ஸ்டாலின் கடந்த 17.6.2023 அன்று சென்னை மாவட்டம் ஆலந்தூர் வட்டம் நந்தம்பாக்கத்தில் 56 ஏக்கர் நிலப்பரப்பில், நிதிநுட்ப நகரம் அமைப்பதற்கும், அதில் முதற்கட்டமாக 5.56 லட்சம் சதுர அடி கட்டட பரப்பளவில் சர்வதேச தரத்திலான நிதிநுட்ப கோபுரம் என்ற அடுக்குமாடி கட்டடம் கட்டுவதற்கும் அடிக்கல் நாட்டினார்.
- இந்த நிதிநுட்ப கோபுரக் கட்டடம் ரூ.249 கோடி செலவில் 2 அடித்தளங்கள், தரை மற்றும் 11 தளங்களுடன் 5.56 லட்சம் சதுர அடி பரப்பளவில், அதிநவீன உட்கட்டமைப்பு வசதிகளுடன் கட்டப்பட்டு உள்ளது. இதனை முதல்வர் மு.க.ஸ்டாலின் திறந்து வைத்தார்.
- நிதி மற்றும் நிதிநுட்ப நிறுவனங்கள் தங்கள் செயல்பாடுகளை தொடங்குவதற்கு தேவையான அனைத்து வசதிகளுடன் தயார் நிலையில் உள்ள உயர்தர அலுவலக இடங்கள் நிதிநுட்ப கோபுரத்தில் அமைக்கப்பட்டுள்ளன.
- இந்தியக் கடலோர காவல்படைக்கு 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்கள் மற்றும் இந்தியக் கடற்படைக்கு தரையிலிருந்து வானில் உள்ள இலக்கை அழிக்கவல்ல ஷெட்டில் ஏவுகணைகள் ஆகியவற்றை ரூ.5,083 கோடி மதிப்பில் கொள்முதல் செய்வதற்கான ஒப்பந்தத்தில் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. புதுதில்லியில் நடைபெற்ற இந்த ஒப்பந்தம் பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் முன்னிலையில் கையெழுத்தானது.
- இவற்றில் உள்நாட்டிலேயே வடிவமைக்கப்பட்டு உற்பத்தி செய்யப்படும் திட்டத்தின் கீழ், பெங்களூருவில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் ரூ.2,901 கோடி மதிப்பில் 6 எம்கே-II மேம்பட்ட இலகுரக ஹெலிகாப்டர்களை கொள்முதல் செய்ய ஒப்பந்தம் கையெழுத்தானது.
- ரஷ்யாவின் ஜெஎஸ்சி ரோசாபோரான் எக்ஸ்போர்ட் நிறுவனத்துடன் ரூ.2,182 கோடி மதிப்பில் ஷெட்டில் ஏவுகணைகளை ஒப்பந்தம் செய்ய கையெழுத்தானது.
- இந்தியா – கனடா விரிவான பொருளாதார கூட்டாண்மை ஒத்துழைப்புக்கான வழிவகைகள், தொழில்நுட்பம் மற்றும் புதிய கண்டுபிடிப்பில் ஒத்துழைப்பு தொடர்பாக இந்தியா, கனடா, ஆஸ்திரேலியா இடையே முத்தரப்பு ஒப்பந்தம், முக்கிய கனிமங்கள் ஒத்துழைப்பு குறித்த ஒப்பந்தம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தியின் பயன்பாட்டை மேம்படுத்துவது குறித்த ஒப்பந்தம், கலாச்சார ஒத்துழைப்புக்கான ஒப்பந்தம் உள்ளிட்டவை மேற்கொள்ளப்பட்டன.
- செயற்கை நுண்ணறிவு, சுகாதாரப் பராமரிப்பு, வேளாண்மை, புதிய கண்டுபிடிப்பு போன்ற துறைகளில் பல்கலைக்கழகங்கள், நிறுவனங்கள் இடையே 24 ஒப்பந்தங்கள், உலகளாவிய உயிரி எரிபொருள் கூட்டமைப்பு மற்றும் சர்வதேச சூரிய கூட்டமைப்பு ஆகியவற்றில் கனடா இணைதல், இந்தியா – கனடா இடையே நாடாளுமன்ற நட்புணர்வுக் குழு அமைத்தல், இந்தியா – கனடா இடையே பாதுகாப்புத்துறை தொடர்பாக பேச்சுக்களை தொடங்குதல், கனடா பல்கலைக்கழகங்கள் மூலம் புதிய கனடா – இந்தியா கூட்டுத் திறன் மற்றும் புதிய கண்டுபிடிப்பு, உத்திசார் அமைப்பை தொடங்குதல், புதுதில்லியில் 2026 மார்ச் 17 முதல் 30 வரை நடைபெற உள்ள பாரத் பழங்குடியின திருவிழா – 2026-ல் கனடா பங்கேற்பு ஆகியவை குறித்து அறிவிக்கப்பட்டது.

