
29th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
மியாமி ஓபனில் பட்டம் 2026
- மியாமி ஓபன் மகளிர் இறுதிப் போட்டியில் கோகோ கௌஃப் மற்றும் அரினா சபலென்கா மோதினார்கள். இந்தப் போட்டியில் சபலென்கா 6-2, 4-6, 6-3 என்ற செட்களில் வென்றார்கள்.
- இண்டியன் வெல்ஸ் மற்றும் மியாமி ஓபனில் பட்டம் வெல்பவர்களுக்கு 'சன்ஷைன் டபுள்' விருது அளிக்கப்படும். இகா ஸ்வியாடெக் கடந்த 2022ல் இந்த விருதை வென்றிருந்தார். இவருக்குப் பிறகு சபலென்கா இந்த விருதைப் பெறுகிறார்.
- ஒட்டுமொத்தமாக பெண்கள் டென்னிஸ் வரலாற்றில் அரினா சபலென்கா ஐந்தாவது வீராங்கனையாக இந்த சன்ஷைன் டபுள் என்ற அடையாளப் பெருமையைப் பெற்றுள்ளார்.
- டென்னிஸ் காலண்டரின் தொடக்கத்தில் தலா 1,000 புள்ளிகள் கொண்ட முதலிரு போட்டிகளாக இண்டியன் வெல்ஸ் ஓபன், மியாமி ஓபன் உள்ளன.
- இந்த இரு போட்டிகளிலுமே சாம்பியன் பட்டம் வெல்வோருக்கு 'சன்ஷைன் டபுள்' என்ற அடையாளப் பெருமை கிடைக்கிறது.

