21st MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
இந்தியாவின் பால் உற்பத்தி 247 மில்லியன் டன்னாக அதிகரிப்பு
- மொத்த உற்பத்தியில் 65 சதவீதப் பங்களிப்பையும், இந்தியாவின் மொத்த மதிப்புக் கூட்டலில் 16% பங்களிப்பையும் அளிக்கிறது.
- இந்தியப் பால் உற்பத்தி 1950ல் 17 மெட்ரிக் டன்னிலிருந்து 2025ல் 247 மெட்ரிக் டன்னாக உயர்ந்துள்ளது. பஞ்சாப்-ஹரியானா உற்பத்தியில் முதலிடம் வகிக்கிறது என்றும் 2047-ஆம் ஆண்டுக்குள் பால் தேவையானது 480 முதல் 606 மெட்ரிக் டன்னாக இருக்கும்.
- நாட்டின் மொத்த பால் உற்பத்தியில், நாட்டு எருமைகளின் பங்கு 31.18 சதவீதமும், அதனைத் தொடர்ந்து கலப்பின மாடுகள் 30.80 சதவீதமும், நாட்டு மாடுகள் 11.20 சதவீதமும், வகைப்படுத்தப்படாத மாடுகள் 9.64 சதவீதமும், வகைப்படுத்தப்படாத எருமைகள் 11.97 சதவீதமும், ஆடுகள் 3.32 சதவீதம் மற்றும் வெளிநாட்டு மாடுகள் 1.89 சதவீதமாக உள்ளது.

