
19th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஆஃப்கோன் கோப்பை 2026 மொராக்கோ அணி சாம்பியன் - ஆப்பிரிக்க கால்பந்து கூட்டமைப்பின் சர்ச்சையான தீர்ப்பு
- ஆப்பிரிக்க நாடுகளுக்கு இடையே நடக்கும் இந்த ஆஃப்கோன் கோப்பையின் இறுதிப் போட்டி கடந்த ஜனவரி 18ஆம் தேதி நடைபெற்றது. இந்தப் போட்டியில் செனகல் 1-0 என மொராக்கோவை வென்றது.
- இந்தப் போட்டியில் ஸ்டாப்பேஜ் நேரத்துக்குப் பிறகு மொராக்கோ அணிக்கு பெனால்டி வழக்கியதால் செனகல் அணியினர் ஆடுகளத்தை விட்டு வெளியேறினர்.
- பின்னர், செனகல் அணி கேப்டன் அவர்களை சமாதானப்படுத்தி களத்திற்கு அழைத்து வந்தார். பெனால்டியில் கோல் அடிக்க மொராக்கோ அணியினர் தவறியதால், 1-0 என செனகல் அணி வெற்றி பெற்றது. கோப்பைகளுடன் செனகல் அணியினரும் கொண்டாட்டத்தில் ஈடுபட்டனர்.
- இந்நிலையில், ஆப்பிரிக்க கூட்டமைப்பு அளித்த அறிக்கையில் செனகலிடம் இருந்து கோப்பையை மொராக்கோ அணிக்கு தர வேண்டும் எனக் கூறியுள்ளது. இந்தத் தீர்ப்புக்கு செனகல் அணியினர் கடும் அதிருப்தி அடைந்தனர்.

