//
Type Here to Get Search Results !

16th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

16th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

வேளாண் உணவு முறைகளில் மகளிர் குறித்த உலகளாவிய மாநாடு 2026
  • வேளாண் உணவு முறைகளில் பெண்கள் குறித்த உலகளாவிய மாநாடு (GCWAS–2026) சனிக்கிழமை புதுதில்லியில் நிறைவடைந்தது. வேளாண்மை, வேளாண் உணவு முறைகளில் பெண்களின் தலைமை, மற்றும் புதுமைகளை வலுப்படுத்துவதற்கான வலுவான அழைப்போடு இந்த மாநாடு முடிவடைந்தது. 
  • பாலின சமத்துவத்துடன் நிலையான விவசாய மேம்பாட்டில் கவனம் செலுத்தும் வகையில் இந்த மூன்று நாட்கள் உலகளாவிய மாநாடு நடைபெற்றது.
  • வேளாண் உணவு முறைகளில் பெண்கள் அதிகாரமளிப்பதன் முக்கியமான பரிமாணங்களைக் கையாளும் ஒன்பது கருப்பொருள்களில் தொழில்நுட்ப அமர்வுகள் இந்த மாநாட்டில் இடம்பெற்றன.
  • இந்த அமர்வுகள் பெண்களின் தலைமையை வலுப்படுத்துதல், சந்தைகளுக்கான அணுகலை மேம்படுத்துதல், தொழில்நுட்பத்தை ஏற்றுக்கொள்வதை ஊக்குவித்தல் ஆகியவற்றில் கவனம் செலுத்தின.
  • முன்னதாக மத்திய வேளாண்மை அமைச்சர் திரு சிவராஜ் சிங் சௌஹான் முன்னிலையில், குடியரசுத் தலைவர் திருமதி திரௌபதி முர்மு மார்ச் 12, 2026 அன்று இந்த மாநாட்டைத் தொடங்கி வைத்தார். 
  • விவசாயம், உணவு முறைகளில் பெண்களின் முக்கிய பங்கை அங்கீகரித்து வலுப்படுத்துவதில் இந்தியாவின் உறுதிப்பாட்டை இந்த மாநாடு எடுத்துக் காட்டுகிறது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel