
13th MARCH 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
கோக்ரஜாருக்கான பல்வேறு திட்டங்களை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- இரண்டு நாள் பயணமாக அசாம் வந்துள்ள பிரதமர் நரேந்திர மோடி, இன்று பிற்பகல் குவாஹாட்டி விமான நிலையத்துக்கு வந்தடைந்தார். அவரை ஆளுநர் லக்ஷ்மன் பிரசாத் ஆச்சார்யா, முதல்வர் ஹிமந்த பிஸ்வ சார்மா, அவரது அமைச்சரவை அமைச்சர்கள் மற்றும் மாநில அரசின் மூத்த அதிகாரிகள் ஆகியோர் அன்பாக வரவேற்றனர்.
- கனமழை காரணமாக கோக்ரஜார் பயணம் ரத்து செய்யப்பட்டதைத் தொடர்ந்து, குவாஹாட்டியிலிருந்து காணொலி வாயிலாக ரூ. 4,570 கோடிக்கும் அதிகமான பல்வேறு திட்டங்களை அவர் தொடங்கி வைத்தார்.
- அசாமில், காமாக்யா-சர்லபள்ளி அம்ரித் பாரத் எக்ஸ்பிரஸ், குவாஹாட்டி-புதிய ஜல்பைகுரி எக்ஸ்பிரஸ் மற்றும் நாரங்கி-அகர்தலா எக்ஸ்பிரஸ் ஆகிய மூன்று முக்கிய ரயில் சேவைகளைப் பிரதமர் மோடி கொடியசைத்துத் தொடங்கி வைத்தார்.
- ரயில்வே பராமரிப்புப் பணிகளை வலுப்படுத்தவும், செயல்பாட்டுத் திறனை மேம்படுத்தவும், அம்மாவட்டத்தின் பாஷ்பாரியில் அமையவுள்ள முழுமையான சீரமைப்புப் பணிமனை ஒன்றிற்கு அவர் அடிக்கல் நாட்டினார்.
- முக்கியமான சாலை உள்கட்டமைப்புத் திட்டமான அசாம் மாலா 3.0க்கான பூமி பூஜை நிகழ்விலும் பிரதமர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
- மாநிலங்களுக்கு இடையிலான இணைப்பை மேம்படுத்தவும், தேசிய நெடுஞ்சாலைகளுக்கும் கிராமப்புறச் சாலைகளுக்கும் இடையிலான தொடர்பை வலுப்படுத்தவும், இத்திட்டத்தின் கீழ் 900 கிலோமீட்டருக்கும் அதிகமான சாலைகள் அமைக்கப்படவுள்ளன.
- மேலும், போடோலாந்து பிராந்திய கவுன்சில் பகுதியில் சுமார் ரூ. 1,100 கோடி முதலீட்டில் உருவாக்கப்படவுள்ள நான்கு மேம்பாலங்கள் மற்றும் இரண்டு பாலங்களுக்கான பூமி பூஜை நிகழ்விலும் அவர் காணொலி வாயிலாகப் பங்கேற்றார்.
- 2024-ஆம் ஆண்டை அடிப்படையாகக் கொண்ட புதிய கணக்கீட்டு முறையின்கீழ் மத்திய புள்ளியியல் மற்றும் திட்ட அமலாக்க அமைச்சகம் வெளியிட்டுள்ள 2-ஆம் மாத தரவு இதுவாகும்.
- பிப்ரவர மாத பணவீக்கம் உயா்வுக்கு, உணவுப் பொருள்களின் விலையேற்றம் முக்கியக் காரணியாகப் பாா்க்கப்படுகிறது. ஜனவரியில் 2.13 சதவீதமாக இருந்த உணவுப் பணவீக்கம், பிப்ரவரியில் 3.47 சதவீதமாக அதிகரித்துள்ளது.
- குறிப்பாக, உணவு மற்றும் பானங்கள் பிரிவில் பணவீக்கம் 3.35 சதவீதமாக உள்ளது. காய்கறி வகைகளில் தக்காளி (45.29 சதவீதம்), காலிஃபிளவா் (43.77 சதவீதம்) ஆகியவற்றின் விலை கடுமையாக உயா்ந்துள்ளது.
- அதேபோல், தேங்காய் விலை 46.16 சதவீதம் அதிகரித்துள்ளது. பூண்டு, வெங்காயம், உருளைக்கிழங்கு ஆகியவற்றின் விலை பிப்ரவரி மாதத்தில் சற்று குறைந்துள்ளது. மேலும், பருப்பு வகைகளில் துவரம் பருப்பு மற்றும் பழ வகைகளில் லிச்சி ஆகியவற்றின் விலையும் சரிந்துள்ளதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.
- எரிசக்தி மற்றும் உணவுப் பொருள்களைத் தவிா்த்த 'கோா் இன்ஃபிளேஷன்' எனப்படும் அடிப்படை பணவீக்கம் மட்டும் 2.4 சதவீதத்தில் நிலையாக நீடிக்கிறது.
- நகா்ப்புறங்களை விட கிராமப்புறங்களில் பணவீக்கத்தின் தாக்கம் அதிகமாக உணரப்பட்டுள்ளது. நகா்ப்புற பணவீக்கம் 2.75 சதவீதத்திலிருந்து 3.02 சதவீதமாக உயா்ந்த நிலையில், கிராமப்புறங்களில் இது 2.73 சதவீதத்திலிருந்து 3.37 சதவீதமாகக் கணிசமாக அதிகரித்துள்ளது.
- யுபிஎஸ்சி சிவில் சர்வீஸ் தேர்வில் தேர்ச்சி பெற்ற சில மாணவர்கள் ஓபிசி நான் கிரிமிலேயர் ஒதுக்கீட்டின் கீழ் நியமனம் பெற விண்ணப்பித்திருந்தனர்.
- ஆனால், அவர்களின் பெற்றோர் அரசு நிறுவனங்கள், பொதுத்துறை நிறுவனங்கள் மற்றும் வங்கிகளில் பணிபுரிந்து அதிக சம்பளம் பெறுவதாக கூறி பணியாளர் பயிற்சித் துறை அதிகாரிகள் அவர்களை கிரிமிலேயர் பட்டியல் இணைத்துள்ளனர். இதனால் அவர்கள் ஓபிசி இட ஒதுக்கீட்டின் கீழ் சலுகைகளை பெற முடியாத நிலை ஏற்பட்டது.
- இந்த நடவடிக்கைக்கு எதிராக மனுதாரர்கள் மத்திய நிர்வாக தீர்ப்பாயம் மற்றும் பல்வேறு உயர்நீதிமன்றங்களில் மனுத்தாக்கல் செய்தனர்.
- அவர்களின் வழக்கை விசாரித்த நீதிமன்றங்கள் மனுதாரருக்கு ஆதரவாக தீர்ப்பை வழங்கியிருந்தது. இந்த நீதிமன்ற உத்தரவை எதிர்த்து ஒன்றிய அரசு தரப்பில் உச்ச நீதிமன்றத்தில் மேல்முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த வழக்கானது உச்ச நீதிமன்றத்தில் நீதிபதி பி.எஸ்.நரசிம்மா தலைமையிலான அமர்வில் விசாரணைக்கு வந்தது.
- இதில் நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவில், ''ஒருவரை ஓபிசி கிரிமிலேயர் அல்லது நான் ஓபிசி கிரிமிலேயர் தீர்மானிப்பதில் பெற்றோரின் பதவி, சமூக நிலை மற்றும் சேவை நிலை போன்ற காரணிகளும் கருத்தில் கொள்ளப்பட வேண்டும்.
- வருமானத்தை மட்டும் அடிப்படையாகக் கொண்டு கிரிமிலேயர் என வகைப்படுத்துவது என்பது சரியான நடைமுறை கிடையாது'' என்று தெளிவுபடுத்தி உத்தரவு பிறப்பித்தனர்.

