//
Type Here to Get Search Results !

8th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

8th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

தேசிய குவான்டம் கம்ப்யூட்டர் மைய கட்டிடத்திற்கு அமராவதியில் மத்திய அமைச்சர் ஜிதேந்தர சிங் அடிக்கல் நாட்டினார் 
  • ஆந்திர மாநில தலைநகர் அமராவதியில் மாலை 'அமராவதி குவான்டம் வாலி' மைய கட்டிடத்திற்க்கு மத்திய தகவல் தொழில்நுட்பத்துறை அமைச்சர் ஜிதேந்தர் சிங், ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு ஆகியோர் கூட்டாக அடிக்கல் நாட்டினர்.
  • இதில் ஆந்திர முதல்வர் சந்திரபாபு நாயுடு மற்றும் மத்திய அமைச்சர்கள், மாநில அமைச்சர்கள் பலர் பங்கேற்றனர்.
இந்தியா - மலேசியா இடையே புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் 
  • இந்தியா மற்றும் மலேசியா இடையிலான நட்புறவை வலுப்படுத்தும் நோக்கில் பிரதமர் மோடி மலேசியாவில் இரண்டு நாள் அரசுமுறை சுற்றுப்பயணம் மேற்கொண்டார்.
  • இந்தப் பயணத்தில் தான் இந்தியா - மலேசியா இடையே சுகாதாரம் மற்றும் தேசிய பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் ஆறு முக்கிய ஒப்பந்தங்கள் கையெழுத்தானது.
  • இந்த 'IMPACT' (India-Malaysia Partnership for Advancing Collective Transformation) ஒப்பந்தங்களின் முக்கிய அம்சங்கள்.
  • மலேசியாவில் புதிய‌ இந்திய தூதரகம் ஒன்று அமைக்கப்பட உள்ளது. இது இரு நாடுகளின் உறவையும் வலுப்படுத்தும்.
  • இரு நாடுகளின் பிணைக்கப்பட்ட பாரம்பரியத்தைப் போற்றும் வகையில், மலேசியாவில் 'திருவள்ளுவர் மையம்' அமைக்கப்படும்.
  • இந்தியாவின் UPI-யும், மலேசியாவின் PayNet-உம் ஒருங்கிணைக்கப்படுகிறது.
  • இதன்‌ மூலம் இரு நாடுகளுக்கு இடையே எளிதான பணி பரிவர்த்தனை நடக்கும். மேலும், அதற்கு ஆகும் செலவுகளும் குறையும்.
  • இது இந்தியாவில் பணிபுரியும் மலேசியர்களுக்கும், மலேசியாவில் பணிபுரியும் இந்தியர்களுக்கும் பெரும் உதவியாக இருக்கும்.
  • விநியோகச் சங்கிலி மற்றும் பணியாளர் மேம்பாட்டில் கவனம் செலுத்தி, செமி கண்டக்டர் துறையில் இரு‌ நாடுகளும் ஒத்துழைப்பை மேம்படுத்தும்.
  • கடல் பாதுகாப்பு, தீவிரவாத எதிர்ப்பு, உளவுத்துறைப் பகிர்வு ஆகியவற்றில் இரு நாடுகளும் இணைந்து செயல்படும்.
  • மலேசியாவில் பணிபுரியும் இந்திய தொழிலாளர்களின் நலனை மேம்படுத்த சமூக பாதுகாப்பு ஒப்பந்தம்.
  • இந்தியாவில் படிக்க மலேசியா மாணவர்களுக்கு ஊக்கமளிக்க 'திருவள்ளுவர் ஊக்கத்தொகை' வழங்கப்படும்.
  • இந்த ஆண்டின் டிசம்பர் 31-ம் தேதி வரை, இந்தியர்கள் மலேசியாவிற்கு விசா இல்லாமல் பயணம் செய்யலாம்.
  • வனவிலங்கு பாதுகாப்பிற்காக இந்தியா முன்னெடுத்துள்ள International Big Cat Alliance (IBCA)-ல் மலேசியா சேரும்.
  • சுகாதாரம், மருத்துவம், பேரிடர், ஊழலுக்கு எதிராக போராடுவதில் போன்றவற்றிலும் இரு நாடுகளும் புரிந்துணர்வு ஒப்பந்தத்தைக் கையெழுத்திட்டுள்ளது.
ஆசிய துப்பாக்கிச் சுடுதல் 2026 - 3வது முறையாகத் தங்கம் வென்று இளவேனில் வாலறிவன் சாதனை
  • டெல்லியில் நடைபெற்று வரும் ஆசிய துப்பாக்கிச் சுடுதல் சாம்பியன்ஷிப் போட்டியில், ஜப்பான் வீராங்கனையுடன் கடும் போட்டி நிலவியது. இளவேனில் 252.0 புள்ளிகள் பெற்று முதலிடம் பிடித்தார். ஜப்பானின் மிசாகி நோபாடா (251.5) வெள்ளிப் பதக்கத்தையும், இந்தியாவின் மேகனா சஜ்ஜனர் (229.5) வெண்கலப் பதக்கத்தையும் வென்றனர்.
  • தனிநபர் பிரிவில் தங்கம் வென்றது மட்டுமின்றி, குழுப் பிரிவிலும் இளவேனில் சாதனை படைத்துள்ளார். இளவேனில் வாலறிவன், ஆர்யா போர்ஸ் மற்றும் மேகனா சஜ்ஜனர் அடங்கிய இந்திய அணி, மொத்தமாக 1892.6 புள்ளிகள் குவித்து குழுப் பிரிவிலும் தங்கப்பதக்கம் வென்றது.
  • இந்த வெற்றியின் மூலம் ஆசிய அளவில் ஒரு அபூர்வமான சாதனையை இளவேனில் நிகழ்த்தியுள்ளார். 2019 மற்றும் 2025-ஆம் ஆண்டு ஆசிய சாம்பியன்ஷிப் போட்டிகளில் தங்கம் வென்றிருந்த இளவேனில், தற்போது 2026-லும் தங்கம் வென்று, இத்தொடரில் தனது 3-வது தனிநபர் தங்கப்பதக்கத்தைக் கைப்பற்றியுள்ளார். 

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel