
7th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
தமிழகத்தின் முதல் கடல் ஆமை பாதுகாப்பு மையம் - முதல்வா் மு.க.ஸ்டாலின் அடிக்கல் நாட்டினாா்
- ஆண்டுதோறும் தமிழக கடற்கரைப் பகுதிகளில் ஆலிவ் ரிட்லி வகை கடல் ஆமைகள் ஆயிரக்கணக்கில் முட்டையிடுகின்றன. ஆனால், மீன்பிடி நடவடிக்கைகளை தவறாக கையாளுதல், கடற்கரை வாழ்விட சேதம், கடல் மாசுபாடு உள்ளிட்ட பல்வேறு அச்சுறுத்தல்கள் காரணமாக ஆயிரம் குஞ்சுகளில் ஒன்று அல்லது இரண்டு மட்டுமே வளா்ந்து முதிா்ந்த நிலையை அடைகின்றன.
- இதன் காரணமாக, தமிழக சாா்பில் பல ஆண்டுகளாக ஒருங்கிணைந்த, அறிவியல் சாா்ந்த மற்றும் பல துறைகளின் அணுகுமுறை மூலம் கடல் ஆமை பாதுகாப்பிற்கு முயற்சிகள் மேற்கொண்டு வருகின்றன.
- அந்த வகையில், கடந்த 2019-2020- ஆம் ஆண்டில் கடல் ஆமைகளின் முட்டை சேகரிப்பு 70,700- ஆக இருந்தது. தொடா்ந்து தமிழக அரசின் முயற்சியின் காரணமாக 2024-2025-ஆம் ஆண்டில் அவை 3.20 லட்சமாக வரலாற்று உச்சமாக அதிகரித்துள்ளது.
- இந்நிலையில், கடல் ஆமை பாதுகாப்பில் வளா்ந்து வரும் அறிவியல் மற்றும் செயல்பாட்டு சிக்கலைக் களைய, உலக வங்கியுடன் இணைந்து 'தமிழ்நாடு நெய்தல் மீட்சி இயக்கம்' திட்டத்தின் கீழ், சென்னை, கிண்டியில் ரூ.14.50 கோடியில் கடல் ஆமை பாதுகாப்பு மையம் அமைக்கப்படவுள்ளது.
- இதற்கான கட்டுமானப் பணிகளை முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை அடிக்கல் நாட்டி தொடங்கி வைத்தாா். இந்த மையம் அறிவியல் ஆராய்ச்சி, டெலிமெட்ரி, கண்காணிப்பு மற்றும் மையப்படுத்தப்பட்ட தரவு மேலாண்மை ஆகியவற்றுக்கான சிறப்பு உள்கட்டமைப்பை வழங்கும்.
- தமிழகத்தை காலநிலை தாங்குதிறன் கொண்ட, வாழ்வதற்கு உகந்த மற்றும் நிலையான நகரங்களாக உருவாக்கும் நோக்கத்துடன் 'தமிழ்நாடு மாநிலத்திற்கான நகா்ப்புற பசுமையாக்கல் கொள்கை 2026'-ஐ முதல்வா் மு.க.ஸ்டாலின் வெள்ளிக்கிழமை வெளியிட்டாா்.
- இது, மாநிலம் முழுவதும் நகா்ப்புற திட்டமிடல் மற்றும் வளா்ச்சியில் மரங்கள், நகா்ப்புற காடுகள், ஆகியவற்றை ஒருங்கிணைப்பதற்கான விரிவான மற்றும் முன்னோடி கட்டமைப்பை வழங்கும்.
- உலகளாவிய வர்த்தக நிச்சயமற்ற தன்மைகள் மற்றும் டிரம்ப் வரி விதிப்பு காரணமாக ஏற்பட்ட நிதிச் சந்தை ஏற்ற இறக்கங்களுக்கு மத்தியில், உள்நாட்டுத் தேவையின் நீடித்த தன்மை மீது நம்பிக்கை தெரிவிக்கும் விதமாக, வங்கிகளுக்கு ரிசா்வ் வங்கி வழங்கும் குறுகிய கால கடன்களுக்கான வட்டி விகிதங்களில் (ரெப்போ ரேட்) மாற்றங்களை அறிவிக்காத நாட்டின் மத்திய வங்கியான ரிசர்வ் வங்கி, ஏற்கெனவே கணிக்கப்பட்டிருந்த 2025-26 ஆம் ஆண்டுக்கான உண்மையான மொத்த உள்நாட்டு உற்பத்தி வளர்ச்சி(ஜிடிபி) கணிப்பை 7.3 சதவீதத்தில் இருந்து 7.4 சதவீதமாக உயர்த்தியுள்ளது.
- திருத்தப்பட்ட இந்தக் கணிப்பு, டிசம்பரில் அறிவிக்கப்பட்ட 7.3 சதவீத வளர்ச்சி மதிப்பீட்டிலிருந்து ஒரு மிதமான உயர்வாகும். இது, ஆசியாவின் மூன்றாவது பெரிய பொருளாதாரம் உலகளாவிய சவால்களிலிருந்து ஒப்பீட்டளவில் பாதுகாக்கப்பட்டு தொடர்ந்து வலுவாக உள்ளது என்பதை அடிக்கோடிட்டுக் காட்டுகிறது.
- ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து, இடைநிலை தூர பாலிஸ்டிக் ஏவுகணையான அக்னி-3 ஐ இந்தியா வெற்றிகரமாக சோதனை செய்தது.
- ஒடிசாவின் சந்த்பூரில் அணுஆயுதங்களை ஏந்திச்செல்லும் திறன் கொண்ட அக்னி-3 ஏவுகணை சோதனை நடத்தப்பட்டது. அக்னி-3 ஏவுகணை தோராயமாக 3,000 முதல் 3,500 கிலோமீட்டர் வரை செல்லக்கூடியது.
- ஒடிசாவின் சந்திப்பூரில் உள்ள ஒருங்கிணைந்த சோதனை மையத்திலிருந்து நடத்தப்பட்ட இந்த சோதனையில் ஏவுகணையின் அனைத்து செயல்பாட்டு மற்றும் தொழில்நுட்பமும் வெற்றிகரமாக அமைந்தது.
- ஏவுகணை இரண்டு நிலைகள் கொண்ட, திட எரிபொருள் மூலம் இயங்கும் அமைப்பாகும். முதல் நிலை எரிபொருள் முடித்தவுடன், இரண்டாவது நிலை எரிபொருள் பற்றி எரிந்து, ஏவுகணையை அதன் பாதையில் நியமிக்கப்பட்ட இலக்கை நோக்கி மேலும் தள்ளுகிறது . மேலும் துல்லிய தாக்குதலை உறுதி செய்கிறது.
- 19 வயதிற்கு உட்பட்டோருக்கான இளையோர் 50 ஓவர் உலகக் கோப்பை கிரிக்கெட் தொடரின் இறுதிப் போட்டி ஜிம்பாப்வேயில் உள்ள ஹாராரேயில் நடைபெற்றது.
- இதில் இந்தியா- இங்கிலாந்து அணிகள் மோதின. போட்டியில், டாஸ் வென்ற இந்தியா பேட்டிங் தேர்வு செய்தது. இதில் ஆபரமாக ஆடிய, வைபவ் சூர்யவன்ஷி 80 பந்துகளில் 175 ரன்கள் குவித்து ஆட்டமிழந்தார்.
- இந்தியா 50 ஓவரில் 09 விக்கெட் இழப்பிற்கு 411 ரன்கள் என்ற இமாலய இலக்கை குவித்தது. அதனைத் தொடர்ந்து இங்கிலாந்து 40.2 ஓவரில் 311 ரன்கள் எடுத்து சகல விக்கெட்டுகளை இழந்தது.
- இதன்காரணமாக இந்தியா 100 ரன்கள் வித்தியாசத்தில் அபார வெற்றிபெற்றது. இந்த இந்த வெற்றியின் மூலம் இந்தியா 06-வது முறையாக இளையோர் உலகக் கோப்பையில் சாம்பியன் பட்டம் வென்றுள்ளது.

