
4th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
என் கனவு என் எதிர்காலம் திட்டத்தை முதல்வர் ஸ்டாலின் தொடக்கிவைத்தார்
- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் பகுதியில் புதன்கிழமை நடைபெற்ற அரசு விழாவில் ‘என் ஊா் என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தை தமிழக முதல்வர் மு.க.ஸ்டாலின் தொடக்கிவைத்தார்.
- தமிழகம் முழுவதும் 2025, ஜூலை மாதத்தில் தொடங்கப்பட்ட உங்களுடன் ஸ்டாலின் முகாம் தொடர்ந்து பல்வேறு பகுதிகளில் நடத்தப்பட்டது.
- மொத்தமாக 10 ஆயிரம் முகாம்கள் நடத்தப்பட்ட நிலையில், அந்த முகாம்களில் பெறப்பட்ட மனுக்கள் அடிப்படையில் நலத்திட்டங்கள், பயன்கள் வழங்கும் விழா, 1.80 லட்சம் பயனாளிகளுக்கு சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்கள் வழங்கும் விழா, ‘என் கனவு என் எதிர்காலம்‘ இணையதளத் தொடக்க விழா மற்றும் விழுப்புரம் மாவட்டத்தில் முடிவுற்ற பணிகள் தொடக்க விழா மற்றும் புதிய திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டு விழா புதன்கிழமை (பிப். 4) நடைபெற்றது.
- விழுப்புரம் மாவட்டம், திண்டிவனம் - செஞ்சி சாலையில் கொள்ளாறிலுள்ள சிப்காட் வளாகத்தில் நடைபெறும் விழாவில் முதல்வர் மு.க. ஸ்டாலின் பங்கேற்று, நலத் திட்டப் பயன்களையும், சமூகப் பாதுகாப்புத் திட்டப் பயன்களையும் வழங்கி, ‘என் கனவு என் எதிர்காலம்‘ என்ற திட்டத்தில் இளைஞர்களின் கனவுகளைப் பதிவு செய்ய உருவாக்கப்பட்டுள்ள இணையதளத்தைத் தொடக்கிவைத்து உரையாற்றினார்.
- இதைத் தொடர்ந்து உங்களுடன் ஸ்டாலின் திட்டம் மற்றும் சமூகப் பாதுகாப்புத் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நல உதவிகளை முதல்வர் வழங்கினார்.
- மணிப்பூரில் குடியரசுத் தலைவர் ஆட்சியை உடனடியாக ரத்து செய்து மத்திய உள்துறை அமைச்சகம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது. மணிப்பூரில் மெய்தி மற்றும் குகி பிரிவினரிடையே கடும் மோதல் ஏற்பட்டு கலவரம் மூண்டது.
- இதில் 200க்கும் மேற்பட்டவர்கள் உயிரிழந்தனர். 60,000க்கும் மேற்பட்ட மக்கள் வீடுகளை இழந்தனர். அங்கு ராணுவம் மற்றும் துணை ராணுவப் படைகள் குவிக்கப்பட்டு இருந்தாலும் இன்னும் அங்கு நிலைமை சீராகவில்லை.
- மணிப்பூர் முதலமைச்சராக இருந்த பைரன் சிங் கடந்த ஆண்டு பிப்ரவரியில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதனால் மணிப்பூரில் கடந்த ஆண்டு பிப்ரவரி 13ம் தேதி குடியரசுத் தலைவர் ஆட்சி கொண்டு வரப்பட்டது.
- இந்த நிலையில் தான் குடியரசுத் தலைவர் ஆட்சி இன்று (பிப்ரவரி 4) வாபஸ் பெறப்பட்டுள்ளது. கலவரத்தால் பாதிக்கப்பட்ட மணிப்பூரில் யும்னம் கெம்சந்த் சிங் முதல்வராக தேர்வு செய்யப்பட்டுள்ளார்.
- யும்னம் கெம்சந்த் சிங்கிற்கு ஆதரவாக இரண்டு துணை முதல்வர்கள் இருப்பார்கள், ஒருவர் குகி-சோ சமூகத்திலிருந்தும், மற்றொருவர் நாகா சமூகத்திலிருந்தும் இருப்பார்கள். கங்போக்பி எம்.எல்.ஏ. நெம்சா கிப்ஜென் துணை முதல்வராக நியமிக்கப்பட்டுள்ளார்.
- நாட்டின் பொருளாதார நிலையை பிரதிபலிக்கும் ஜி.எஸ்.டி (சரக்கு மற்றும் சேவை வரி) வசூல், கடந்த ஜனவரி மாதத்தில் கணிசமான உயர்வை பதிவு செய்துள்ளது.
- மொத்த வருவாய் ரூ.1.93 லட்சம் கோடியை தாண்டி, புதிய மைல்கல்லை எட்டியுள்ளது. கடந்த ஆண்டு ஜனவரியில் ரூ.1,82,094 கோடியாக இருந்த வசூல், இந்த ஆண்டு 6.2 சதவீதம் அதிகரித்து ரூ.1,93,384 கோடியாக உயர்ந்துள்ளது.
- உள்நாட்டு பரிவர்த்தனைகளில் இருந்து மட்டுமே ரூ.1.41 லட்சம் கோடி வருவாய் கிடைத்துள்ளது. மேலும், இறக்குமதி பொருட்களுக்கான ஜி.எஸ்.டி வசூல் 10.1 சதவீதம் உயர்ந்து ரூ.52,253 கோடியாக இருந்தது. இதனால் வெளிநாட்டு வர்த்தகத்திலும் வளர்ச்சி தென்பட்டுள்ளது.
- இதற்கிடையில், திருப்பி வழங்கப்பட்ட தொகை 3.1 சதவீதம் குறைந்து ரூ.22,665 கோடியாக இருந்தது. இந்த ரிஃபண்டுகளை கழித்தபின், ஜனவரி மாதத்திற்கான நிகர ஜி.எஸ்.டி வருவாய் ரூ.1.70 லட்சம் கோடியாக கணக்கிடப்பட்டுள்ளது.
- மேலும், புகையிலைப் பொருட்களிலிருந்து பெறப்பட்ட செஸ் வரி மட்டும் ரூ.5,768 கோடியாக பதிவாகியுள்ளது.
- பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனமான டிஆர்டிஓ, 'திட எரிபொருள் ராம்ஜெட்' தொழில்நுட்பத்தை இன்று காலை 10:45 மணியளவில் ஒடிசா கடற்கரையில் உள்ள சந்திப்பூர் ஒருங்கிணைந்த சோதனைத் தளத்திலிருந்து வெற்றிகரமாகச் சோதித்துள்ளது.
- இந்த மைல்கல் சாதனையின் மூலம், நீண்ட தூரம் சென்று வான் இலக்குகளைத் தாக்கும் ஏவுகணைகளை உருவாக்கும் திறன் கொண்ட மிகச் சில நாடுகளின் வரிசையில் இந்தியா இணைந்துள்ளது. இது எதிரிகளுக்கு எதிராகப் போர்க்களத்தில் இந்தியாவிற்குப் பெரும் சாதகமான நிலையை வழங்கும்.
- இந்தச் சோதனையின் போது, பூஸ்டர் மோட்டார் மூலம் ஏவப்பட்ட ஏவுகணை, குறிப்பிட்ட வேகத்தை எட்டியதும் அதிலுள்ள அனைத்து உள்அமைப்புகளும் எதிர்பார்த்தபடி சிறப்பாகச் செயல்பட்டன.
- வங்காள விரிகுடா கடற்கரையோரம் அமைக்கப்பட்டிருந்த கண்காணிப்பு கருவிகள் மூலம் ஏவுகணையின் செயல்பாடு உறுதி செய்யப்பட்டது.
- இந்தச் சோதனையை ஹைதராபாத் மற்றும் புனே உள்ளிட்ட பல்வேறு டி.ஆர்.டி.ஓ ஆய்வகங்களைச் சேர்ந்த மூத்த விஞ்ஞானிகள் நேரடியாகக் கண்காணித்தனர்.
- தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்களுக்கான துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கும் வகையில் சட்டத்திருத்தம் செய்த தமிழக அரசு, அதனை ஒப்புதலுக்காக ஆளுநர் ஆர்.என்.ரவிக்கு கடந்த சில மாதங்களுக்கு முன்பு அனுப்பியிருந்தது.
- இந்தச் சட்டத்திருத்தம் உட்பட பல்வேறு மசோதாக்கள் ஆளுநர் மாளிகையில் நீண்ட காலமாக கிடப்பில் இருந்தன. இதை எதிர்த்து தமிழக அரசு உச்ச நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தது.
- இந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், தனது சிறப்பு அதிகாரத்தைப் பயன்படுத்தி, 10 மசோதாக்களுக்கு அனுமதி வழங்கியது. அந்த 10 மசோதாக்களில் பல்கலைக்கழகங்களுக்கு துணைவேந்தரை மாநில முதல்வரே நியமிக்கலாம் என்ற சட்டத்திருத்தமும் அடங்கும்.
- இதனைத் தொடர்ந்து மாநில முதல்வரே துணைவேந்தர்களை நியமிப்பதை எதிர்த்து உயர் நீதிமன்ற மதுரைக் கிளையில் வழக்கு தொடரப்பட்டது. அதனை விசாரித்த நீதிமன்றம் இந்தச் சட்டத்திருத்தத்துக்கு இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டது.
- இதனை எதிர்த்து தமிழக அரசு சார்பில் உச்ச நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. சென்னை உயர் நீதிமன்றம் வழக்கை முழுமையாக விசாரிக்காமல் அவசரக்கோலத்தில் இடைக்கால தடை விதித்துள்ளதாகத் தமிழக அரசு சார்பில் தெரிவிக்கப்பட்டது.
- இந்நிலையில் இந்த வழக்கில் இன்று ( பிப்.4) தீர்ப்பு வழங்கிய உச்ச நீதிமன்றம், துணைவேந்தர் நியமனம் தொடர்பாக உயர் நீதிமன்றம் பிறப்பித்த இடைக்காலத் தடையை நீக்கி இருக்கிறது.
- தடையை நீக்கிய உச்ச நீதிமன்ற நீதிபதிகள், இந்த வழக்கை மீண்டும் விசாரிக்க சென்னை உயர் நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டனர். ஆறு வாரங்களில் வழக்கை விசாரித்து முடிக்கவும், அதுவரை புதிய துணைவேந்தர்களை நியமிக்கக் கூடாது என்றும் உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டிருக்கிறது.

