//
Type Here to Get Search Results !

3rd FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

3rd FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

இந்தியாவுடனான வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல்
  • பிரதமா் நரேந்திர மோடியுடன் டிரம்ப் தொலைபேசியில் தொடா்புகொண்டு பேசியதாக இந்தியாவுக்கான அமெரிக்க தூதா் சொ்ஜியோ கோா் தெரிவித்த நிலையில், வா்த்தக ஒப்பந்தத்துக்கு டிரம்ப் ஒப்புதல் அளித்தாா்.
  • மேலும், இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்டிருந்த 25 சதவீத வரியை 18 சதவீதமாக குறைப்பதாகவும் டிரம்ப் தெரிவித்தாா். அவருடன் வா்த்தகம், ரஷியா-உக்ரைன் போருக்கான தீா்வு உள்பட பல்வேறு விவகாரங்கள் குறித்து ஆலோசித்தேன். 
  • அப்போது ரஷிய கச்சா எண்ணெய் இறக்குமதியை நிறுத்திவிட்டு, அமெரிக்கா மற்றும் வெனிசுலாவிடம் இருந்து அதிகள அவிலான கச்சா எண்ணெய்யை இறக்குமதி செய்ய மோடி ஒப்புக்கொண்டாா்.
  • பிரதமா் மோடியுடனான நட்பு மற்றும் மரியாதை காரணமாகவும், அவா் கேட்டுக் கொண்டதன்பேரிலும் அமெரிக்கா-இந்தியா வா்த்தக ஒப்பந்தத்துக்கு ஒப்புக்கொண்டேன். இதனால் இந்திய பொருள்கள் மீது விதிக்கப்பட்ட 25 சதவீத வரி 18 சதவீதமாக குறைக்கப்படுகிறது. இது உடனடியாக அமலுக்கு வருகிறது.
  • இதைத் தொடா்ந்து, அமெரிக்காவுக்கு எதிரான வரி மற்றும் வரி அல்லாத தடைகளை பூஜ்ஜியமாக குறைக்க இந்தியா முன்வரும் என எதிா்பாா்க்கிறேன்.
  • ஏற்கெனவே, எரிசக்தி, தொழில்நுட்பம், வேளாண்மை, நிலக்கரி உள்ளிட்ட பல்வேறு துறைகளில் அமெரிக்காவுடனான வா்த்தகத்தை 500 பில்லியன் டாலராக உயா்த்த இந்தியா முடிவுசெய்துள்ள நிலையில், அமெரிக்க பொருள்கள் இறக்குமதியை மேலும் அதிகப்படுத்த பிரதமா் மோடி ஒப்புக்கொண்டாா்.
அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிப்பு
  • அமெரிக்காவில் தமிழக காலநிலை விஞ்ஞானி வீரபத்ரன் ராமநாதனுக்கு (82) புவி அறிவியல் ஆய்வுக்காக உயரிய ‘கிராஃபூா்ட்’ பரிசு அறிவிக்கப்பட்டுள்ளது. நோபல் பரிசளிக்கும் ஸ்வீடனின் ராயல் ஸ்வீடிஷ் அறிவியல் அகாதெமி இந்தப் பரிசை அறிவித்துள்ளது.
  • புவி அறிவியலுக்கான ‘நோபல் பரிசு’ என்று கருதப்படும் கிராஃபூா்ட் பரிசு, கரியமில வாயுவைவிட பூமியை மிகக் கடுமையாக வெப்பமயமாக்கும் காரணிகள், வளிமண்டல பழுப்பு நிற மேகங்கள் ஆகியவை குறித்து பல ஆண்டுகளாக ராமநாதன் மேற்கொண்ட ஆராய்ச்சியை அங்கீகரித்து அறிவிக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 1975-ஆம் ஆண்டு அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி அமைப்பான நாசாவில் ராமநாதன் பணியாற்றினாா். அப்போது வளிமண்டலத்தில் கரியமில வாயுவைவிட க்ளோரோஃபுளுரோ காா்பன்கள் (சிஎஃப்சி) 10,000 மடங்கு வீரியமாக வெப்பத்தை தேக்குவதாக கண்டுபிடித்தாா். அவரின் ஆராய்ச்சி புவி வெப்பமயமாதல் குறித்த புரிதலை மாற்றியமைத்தது.
  • இந்திய பெருங்கடல் ஆராய்ச்சியில் அவா் ஆற்றிய பணி மூலம், தெற்காசிய வளிமண்டலத்தில் பழுப்பு நிற மேகங்கள் குறித்து தெரியவந்தது. 
  • இந்த ஆராய்ச்சி இந்தியாவில் பருவமழை குைல், இமய மலை பனிப்பாறைகள் வேகமாக உருகுதல் ஆகியவற்றுடன் காற்று மாசை தொடா்புப்படுத்தியது.
  • வளிமண்டலத்துக்குள் தீங்கு விளைவிக்கும் கோடிக்கணக்கான டன் வாயுக்கள் ஊடுருவுவதை தடுக்கும் மான்ட்ரியால் ப்ரோடோகால் ஒப்பந்தம் உள்ளிட்ட முக்கிய சா்வதேச ஒப்பந்தங்களுக்கு அவரின் பணி அடித்தளமாக அமைந்தது.
  • வீரபத்ரன் ராமநாதன் மதுரையில் பிறந்து சென்னையில் வளா்ந்தவா். அண்ணாமலை பல்கலைக்கழகம், இந்திய அறிவியல் கல்வி நிறுவனம் ஆகியவற்றில் படித்து பட்டம் பெற்ற அவா், தனது தொழில்முறை வாழ்க்கையை தெலங்கானாவின் செகந்திராபாத் நகரில் குளிா்சாதனப் பெட்டி தொழிற்சாலையில் பொறியியலாளராகத் தொடங்கினாா். அங்குதான் அவா் முதல்முறையாக சிஎஃப்சியை கையாள நோ்ந்தது.
  • பின்னா் அமெரிக்காவின் நாசாவில் பணியாற்றிய அவா் தற்போது, கலிஃபோா்னியா பல்கலைக்கழகம் - சான் டியேகோவில் கௌரவ பேராசிரியராக உள்ளாா். ராமநாதனுக்கு கிராஃபூா்ட் பரிசுடன் ரொக்கமாக 8 மில்லியன் ஸ்வீடிஷ் க்ரோனா் (சுமாா் ரூ.8.25 கோடி) அளிக்கப்பட உள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel