Type Here to Get Search Results !

உலக புற்றுநோய் தினம் 2024 / WORLD CANCER DAY 2024

 

  • உலக புற்றுநோய் தினம் 2024 / WORLD CANCER DAY 2024: உலகளவில் இதய நோய்களுக்கு அடுத்ததாக அதிக மரணத்தை ஏற்படுத்த கூடிய நோயாக இருந்து வருகிறது புற்றுநோய்.
  • புற்றுநோயை பற்றிய விழிப்புணர்வை ஏற்படுத்தவும் இந்த கொடிய நோய் வராமல் தடுக்கவும், புற்றுநோயை கண்டறிதல் மற்றும் சிகிச்சையை ஊக்குவிக்கவும் ஆண்டுதோறும் பிப்ரவரி 4 (இன்று) உலக புற்றுநோய் தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.
  • ஆனால், தொற்றாத நோய்களான புற்றுநோய், நீரிழிவு, இதய நோய் போன்றவை முன்பை விட அதிகரித்துள்ளது. தாலுகாவுக்கு ஒருவர் புற்றுநோயால் பாதிக்கப்பட்டிருந்த காலம் மாறி, தெருவுக்கு ஒருவராக அதிகரித்தது.
  • தற்போது அக்கம் பக்கத்தில் ஒருவர் என்ற நிலையில் நிற்கிறோம். உலகளவில் 5ல் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக புள்ளிவிவரங்கள் தெரிவிக்கிறது.
  • புற்றுநோயால் பாதிக்கப்பட்டவர்களில் ஆண்களில் 8 பேரில் ஒருவரும், பெண்களில் 11 பேரில் ஒருவரும் உயிரிழப்பதாகவும் கூறுகின்றனர்.
  • புற்றுநோய் குறித்த போதிய விழிப்புணர்வு இல்லாமையாலும் ஆண்டுக்கு ஆண்டு புற்றுநோயால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது.
  • இந்நிலையில் 2000ம் ஆண்டில் இருந்து புற்றுநோய் பாதிப்புகளை தடுப்பது குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையில் உலக புற்றுநோய் தினம் பிப்ரவரி 4ம் தேதி (இன்று) அனுசரிக்கப்படுகிறது.
  • இந்தியாவில் புற்றுநோயால் பாதிக்கப்படுபவர்களின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே தான் செல்கிறது. அதன்படி, கடந்த 2020ம் ஆண்டில் மட்டும் 13,24,413 பேர் புற்று நோயால் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • இதில் ஆண்கள் 6,46,030 பேரும், பெண்கள் 6,78,383 பேரும் அடங்குவார்கள். 
  • மேலும், கடந்த ஆண்டில் 8,51,678 பேர் உயிரிழந்துள்ளனர். அதன்படி, இந்தியாவில் 9 பேரில் ஒருவருக்கு புற்றுநோய் இருப்பதாக புள்ளி விவரங்கள் தெரிவிக்கின்றன.
  • ஆண்களில் 68 பேரில் ஒருவருக்கு நுரையீரல் புற்றுநோயும், பெண்களில் 29 பேரில் ஒருவருக்கு மார்பக புற்றுநோயாலும் பாதிக்கப்படுகின்றனர். குறிப்பாக மார்பகம், வாய் புற்றுநோய், கர்ப்பப்பை வாய், இரைப்பை, நுரையீரல் புற்றுநோய் பாதிப்புகள்தான் அதிகம்.
  • ஒட்டுமொத்தமாக பார்க்கும் போது, மார்பக புற்றுநோயால் 13.5 சதவீதம் பேரும், நாக்கு, வாய் புற்றுநோயால் 10.3 சதவீதம் பேரும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 9.4 சதவீதம் பேரும், நுரையீரல் புற்றுநோயால் 5.5 சதவீதம் பேரும், பெருங்குடல் புற்றுநோயால் 4.9 சதவீதம் பேரும் மற்றும் இதர புற்றுநோயால் 56.5 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டள்ளனர்.
  • புற்றுநோயால் உயிரிழப்பு ஏற்படுவதில் மார்பக புற்றுநோயால் 10.6 சதவீதம் பேரும், வாய் மற்றும் நாக்கு புற்றுநோயால் 8.8 சதவீதம் பேரும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 9.1 சதவீதம் பேரும், நுரையீரல் புற்றுநோயால் 7.8 சதவீதம் பேரும், பெங்குடல் புற்றுநோயால் 6.9 சதவீதம் பேரும் உயிரிழந்துள்ளனர்.
  • பெண்களில் மார்பக புற்றுநோயால் 26.3 சதவீதம் பேரும், கர்ப்பப்பை வாய் புற்றுநோயால் 18.3 சதவீதம் பேரும், கருப்பை புற்றுநோயால் 6.7 சதவீதம் பேரும், வாய் புற்றுநோயால் 4.6 சதவீதம் பேரும், பெருங்குடல் புற்றுநோயால் 3.7 சதவீதம் பேரும் மற்றும் இதர புற்றுநோயால் 4.4 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • அதேபோல், ஆண்களில் வாய் புற்றுநோயால் 16.2 சதவீதம் பேரும், நுரையீரல் புற்றுநோயால் 8 சதவீதம் பேரும், வயிற்று புற்றுநோயால் 6.3 சதவீதம் பேரும், பெருங்குடல் புற்றுநோயால் 6.3 சதவீதம் பேரும், உணவுகுழாய் புற்றுநோயால் 6.2 சதவீதம் பேரும் மற்றும் இதர புற்றுநோயால் 57 சதவீதம் பேரும் பாதிக்கப்பட்டுள்ளனர்.
  • தமிழகத்தில் கடந்த 2020ம் ஆண்டில் ஆண்கள் 35,863 பேரும், பெண்கள் 42,778 பேரும் என மொத்தமாக 78,641 பேர் பாதிக்கப்பட்டுள்ளனர். இதில் ஆண்களை விட பெண்கள்தான் அதிகளவில் பாதிக்கப்படுகின்றனர்.
  • புகையிலை மற்றும் புகையிலைப் பொருட்களை முற்றிலுமாக கட்டுப்படுத்துவதால், மனிதர்களின் சராசரி ஆயுள் 10 ஆண்டுகள் அதிகரிக்கலாம் என புள்ளிவிவரங்கள் தெரிவிக்கின்றன.

இந்த தினத்தின் பின்னணியில் உள்ள வரலாற்று உண்மைகள்

  • உலக புற்றுநோய் தினம் 2024 / WORLD CANCER DAY 2024: 1993 இல் நிறுவப்பட்ட சர்வதேச புற்றுநோய் கட்டுப்பாட்டு ஒன்றியம் (UICC) கடந்த 2000 ஆம் ஆண்டில் உலக புற்றுநோய் தினத்தை உருவாக்கியது.
  • உலகளவில் புற்றுநோய் விழிப்புணர்வை ஒருங்கிணைத்து பரப்புவதற்கான முயற்சிகளில் WHO மற்றும் பல சர்வதேச நிறுவனங்கள் UICC-ஐ ஆதரித்து வருகின்றன.
  • பாரிஸில் நடைபெற்ற புற்றுநோய்க்கு எதிரான முதல் உலக உச்சி மாநாட்டில் தான் இந்த நாளைக் கடைப்பிடிப்பதற்கான முடிவு எடுக்கப்பட்டது.
  • உலகெங்கிலும் உள்ள அரசாங்க நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் அமைப்புகளின் தலைவர்கள் புற்றுநோயாளிகளின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதற்கான உலகளாவிய உறுதிப்பாட்டை கோடிட்டுக் காட்டும் 10 கட்டுரைகளைக் கொண்ட ஒரு ஆவணத்தை உருவாக்கினர்.
  • இந்த ஆவணம் புற்றுநோய்க்கு எதிரான Charter Of Paris என்று அழைக்கப்பட்டது. உலகளவில் புற்றுநோய் ஆராய்ச்சி, தடுப்பு மற்றும் சிகிச்சையின் முன்னேற்றங்களில் நிலையான முதலீடு செய்வதை இது நோக்கமாகக் கொண்டுள்ளது.

UICC அமைப்பு இந்த தினத்தில் எவ்வாறு விழிப்புணர்வை ஏற்படுத்துகிறது?

  • உலக புற்றுநோய் தினம் 2024 / WORLD CANCER DAY 2024: UICC அமைப்பு ஆண்டு முழுவதும் மில்லியன் கணக்கான மக்களை புற்றுநோயிலிருந்து காப்பாற்ற வேண்டும் என்ற ஒரே நோக்கத்துடன் செயல்படுகிறது.
  • மேலும் இந்த தினத்தில் விழிப்புணர்வை அதிகரிக்கும் வகையில், UICC சுகாதார அமைப்பு புற்றுநோய் நிறுவனங்களுடன் இணைந்து கல்வி நடவடிக்கைகளை வகுத்தல், பொது சேவை அறிவிப்புகளை வெளியிடுதல் போன்ற நடவடிக்கைகளில் ஈடுபட்டு வருகிறது.
  • மேலும், புற்றுநோய் தடுப்பு தொடர்பான பல பாடம் புகட்டும் விஷயங்களை வீடியோக்களாக பதிவு செய்து உலக புற்றுநோய் தினத்தை முன்னிட்டு சுகாதார நிறுவனங்கள் மற்றும் புற்றுநோய் மையங்களால் வலைத்தளங்களில் பரப்பப்படுகின்றன.
  • இதுதவிர சில இடங்களில் அணிவகுப்பு நடத்துவது அல்லது உள்ளூர் நிதி திரட்டும் நிகழ்வான அணிவகுப்பு, கச்சேரி, கண்காட்சி அல்லது ஏலம் போன்றவற்றை ஏற்பாடு செய்வதன் மூலம் இந்த நாள் அனுசரிக்கப்படுகிறது.
  • சிறப்பு தொலைக்காட்சி ஒளிபரப்பு அல்லது புற்றுநோய் பற்றிய வானொலி நிகழ்ச்சிகளை ஒளிபரப்புவதன் மூலம் அந்த முழு வாரமும் சில நாடுகளால் புற்றுநோய் தினம் கவுரவிக்கப்படுவதைக் காணலாம்.

உலக புற்றுநோய் தினம் 2022, 2023, 2024 தீம் - பராமரிப்பு இடைவெளியை மூடு

  • உலக புற்றுநோய் தினம் 2024 / WORLD CANCER DAY 2024: இந்த உலக புற்றுநோய் தினத்தில், அறிவின் சக்தியை அங்கீகரிக்கிறோம்.
  • நம்மில் ஒவ்வொருவருக்கும் பெரியதாகவோ அல்லது சிறியதாகவோ ஒரு வித்தியாசத்தை ஏற்படுத்தும் திறன் உள்ளது என்பதை நாங்கள் அறிவோம், மேலும் புற்றுநோயின் உலகளாவிய தாக்கத்தை குறைப்பதில் நாம் உண்மையான முன்னேற்றத்தை அடைய முடியும்.
  • 2022: சிக்கலை உணர்தல்
  • 2023: எங்கள் குரல்களை ஒன்றிணைத்து நடவடிக்கை எடுப்பது
  • 2024: ஒன்றாக, அதிகாரத்தில் இருப்பவர்களுக்கு சவால் விடுகிறோம் 

ENGLISH

  • WORLD CANCER DAY 2024: Cancer is the second leading cause of death worldwide after heart disease. World Cancer Day is observed annually on February 4 (today) to raise awareness about cancer and to prevent the spread of this deadly disease and to promote cancer diagnosis and treatment.
  • But noncommunicable diseases such as cancer, diabetes and heart disease are on the rise. The period when one person was diagnosed with cancer per taluka changed and increased to one per street.
  • We are currently standing as one on the neighborhood side. Statistics show that one in 5 people worldwide has cancer. It is estimated that one in 8 men and one in 11 women die from cancer.
  • The number of cancer deaths is increasing year by year due to lack of awareness about cancer. World Cancer Day is observed on February 4 (today) to raise awareness about the prevention of cancer since 2000.
  • The number of cancer victims in India is on the rise. Accordingly, in the year 2020 alone, 13,24,413 people were diagnosed with cancer. This includes 6,46,030 males and 6,78,383 females. In addition, 8,51,678 people died last year. Accordingly, statistics show that one in 9 people in India has cancer.
  • One in 68 men is diagnosed with lung cancer and one in 29 women is diagnosed with breast cancer. Breast, cervical, cervical, gastric and lung cancers are especially common.
  • Overall, breast cancer accounts for 13.5 percent, tongue and mouth cancer for 10.3 percent, cervical cancer for 9.4 percent, lung cancer for 5.5 percent, colon cancer for 4.9 percent and 56.5 percent for other cancers.
  • Breast cancer accounts for 10.6 percent of all cancer deaths, 8.8 percent for oral and tongue cancer, 9.1 percent for cervical cancer, 7.8 percent for lung cancer and 6.9 percent for colorectal cancer.
  • Among women, 26.3 percent were diagnosed with breast cancer, 18.3 percent with cervical cancer, 6.7 percent with cervical cancer, 4.6 percent with oral cancer, 3.7 percent with colon cancer and 4.4 percent with other cancers.
  • Similarly, 16.2 per cent of men are diagnosed with oral cancer, 8 per cent with lung cancer, 6.3 per cent with stomach cancer, 6.3 per cent with colon cancer, 6.2 per cent with esophageal cancer and 57 per cent with other cancers.
  • In Tamil Nadu, a total of 78,641 people has been affected by the year 2020, including 35,863 males and 42,778 females. Women are more affected than men. Statistics show that complete control of tobacco and tobacco products can increase the average life expectancy of humans by up to 10 years.

The historical facts behind this day

  • Founded in 1993, the International Union for Cancer Control (UICC) established World Cancer Day in 2000. The WHO and many international organizations have been supporting the UICC in its efforts to co-ordinate and spread cancer awareness worldwide.
  • The decision to observe this day was made at the first World Summit Against Cancer held in Paris. Leaders of government agencies and cancer organizations around the world have produced a document containing 10 articles outlining the global commitment to improving the quality of life of cancer patients.
  • This document is called the Anti-Cancer Charter Of Paris. It aims to consistently invest in advances in cancer research, prevention and treatment worldwide.

How is the UICC organization raising awareness on this day?

  • WORLD CANCER DAY 2024: The UICC system works with the sole purpose of saving millions of people from cancer throughout the year. And to raise awareness on this day, the UICC Health Organization has been working with cancer organizations to organize educational activities and publish public service announcements.
  • In addition, many lessons related to cancer prevention are recorded as videos and circulated on websites by health organizations and cancer centers on the eve of World Cancer Day.
  • In addition, this day is observed by organizing a parade in some places or by organizing a local fundraising event such as a parade, concert, exhibition or auction.
  • Broadcast special television broadcasts or radio programs about cancer.

World Cancer Day 2022, 2023, 2024 Theme - Close the Care Gap

  • WORLD CANCER DAY 2024: This World Cancer Day, we recognize the power of knowledge. We know that every single one of us has the ability to make a difference, large or small, and that together we can make real progress in reducing the global impact of cancer.
  • This 4 February, we call on you, whoever and wherever you are, to play your part in creating a cancer-free world.
  • World Cancer Day 2022 Theme is Realising the problem
  • World Cancer Day 2023 Theme is Uniting our voices and taking action
  • World Cancer Day 2024 Theme is Together, we challenge those in power.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel