//
Type Here to Get Search Results !

28th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

28th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்
  • பிரதமர் திரு நரேந்திர மோடி, ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் 14 வயது சிறுமிகளுக்கு நாடு தழுவிய எச்பிவி - கருப்பைவாய் புற்றுநோய் தடுப்பூசி இயக்கத்தை தொடங்கி வைத்தார். 
  • இது இந்தியாவின் கர்ப்பப்பை வாய்ப் புற்றுநோய்க்கு எதிராக மத்திய அரசு மேற்கொண்டு வரும் ஒரு வரலாற்றுச் சிறப்புமிக்க நடவடிக்கையாக அமைந்துள்ளது.
INS அஞ்சதீப் போர்க்கப்பல் நாட்டுக்கு அர்ப்பணம்
  • இந்திய கடற்படை தனது போர்க்கப்பல் திறனை தொடர்ந்து மேம்படுத்தி வருகிறது. அதன் ஒரு பகுதியாக, எதிரி நாடுகளின் நீர்மூழ்கிக் கப்பல்களை கண்டறிந்து துல்லியமாக தாக்கும் திறன் கொண்ட அதிநவீன போர்க்கப்பலான ஐஎன்எஸ் அஞ்சதீப், சென்னை துறைமுகத்தில் நடைபெற்ற விழாவில் நாட்டுக்கு அர்ப்பணிக்கப்பட்டது.
  • உள் நாட்டிலேயே வடிவமைக்கப்பட்ட மற்றும் தயாரிக்கப்பட்ட நீர்மூழ்கி எதிர்ப்பு 'ஷாலோ வாட்டர்' போர்க்கப்பல்களில் இதுவும் ஒன்றாகும். சுயசார்பு இந்தியா திட்டத்தின் மூலம், 80 சதவீத உள்நாட்டு பொருட்களை கொண்டு உருவாக்கப்பட்டுள்ள இந்த கப்பல், ஆழம் குறைந்த கடலோரப் பகுதிகளில் மறைந்து செயல்படும் எதிரி நீர்மூழ்கி கப்பல்களை கண்டறிந்து அழிக்கும் திறன் பெற்றது.
  • கொல்கத்தாவை தலைமையிடமாக கொண்ட கார்டன் ரீச் ஷிப் பில்டர்ஸ் & இன்ஜினியர்ஸ் நிறுவனம் கட்டிய இந்த கப்பல், கடலோர மற்றும் ஆழமற்ற கடல் சூழல்களில் செயல்படுவதற்காகவே சிறப்பாக வடிவமைக்கப்பட்டுள்ளது. 
  • சுமார் ரூ.780 கோடி செலவில் உருவான இந்த போர்க்கப்பல், இந்தியாவின் பிரத்யேக பொருளாதார மண்டலம் மற்றும் நீண்ட கடற்கரை பாதுகாப்பில் முக்கிய பங்கு வகிக்கும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
  • சுமார் 77 மீட்டர் நீளமுள்ள இந்த கப்பல், அதிவேக நீர்-ஜெட் உந்துவிசை அமைப்புடன் 25 நாட்டிகல் வேகத்தில் பயணிக்கக் கூடியது. அதிநவீன சோனார் அமைப்புகள், இலகுரக டார்பிடோக்கள், நீர்மூழ்கி எதிர்ப்பு ராக்கெட்டுகள் மற்றும் மேம்பட்ட போர்முறை மேலாண்மை அமைப்புகள் இதில் இடம்பெற்றுள்ளன. இந்த கப்பல்கள் ரோந்து, கண்காணிப்பு, தேடுதல் மற்றும் மீட்பு நடவடிக்கைகளையும் மேற்கொள்ளும் திறன் கொண்டதாகும்.
முதல்முறையாக ரஞ்சி கோப்பையை வென்ற ஜம்மு காஷ்மீர்
  • கர்நாடக அணிக்கு எதிராக நடைபெற்ற இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீர் அணி பேட்டிங், பந்துவீச்சு என அனைத்திலும் மிகச் சிறப்பாக விளையாடி ரஞ்சி கோப்பையை முதல்முறையாகக் கைப்பற்றியுள்ளது.
  • கர்நாடகத்தில் நடைபெற்ற இந்தப் போட்டியில் டாஸ் வென்ற ஜம்மு காஷ்மீர் அணி முதலில் பேட்டிங் செய்து முதல் இன்னிங்ஸில் 584 ரன்கள் குவித்தது.
  • இந்தப் போட்டியில் ஜம்மு காஷ்மீரின் சுபம் பண்டிர் 121, சாஹில் லோத்ரா 72, பராஸ் டோக்ரா, கன்னையா வதாவன் தலா 70 ரன்கள் எடுத்தார்கள். கர்நாடகம் சார்பில் பிரசித் கிருஷ்ணா 5 விக்கெட்டுகள் எடுத்தார்.
  • கர்நாடக அணி தனது முதல் இன்னிங்ஸில் 293 ரன்களுக்கு ஆல் அவுட்டானது. இதில் அதிகபட்சமாக மயங்க் அகர்வால் 160 ரன்கள் எடுத்தார்.
  • ஜம்மு காஷ்மீர் அணியில் ஆகிப் நபி 5 விக்கெட்டுகள் எடுத்து அசத்தினார். இரண்டாம் இன்னிங்ஸில் இந்த அணி 113 ஓவர்களில் 342/4 ரன்கள் எடுத்து ஐந்தாம் நாள் முடிவு வரை ஆட்டமிழக்காமல் இருந்தார்கள்.
  • இரண்டாம் இன்னிங்ஸில் அதிகபட்சமாக கம்ரான் இக்பால் 160, சாஹில் லோத்ரா 101 ரன்கள் எடுத்து அசத்தினார்கள்.
  • போட்டி சமனில் முடிந்தாலும், முதல் இன்னிங்ஸில் அதிக ரன்கள் குவித்த ஜம்மு காஷ்மீர் அணி கோப்பை வென்றதாக அறிவிக்கப்பட்டது.
  • 67 ஆண்டுகளுக்குப் பிறகு முதல்முறையாக இறுதிப் போட்டிக்கு முன்னேறிய ஜம்மு காஷ்மீர் அணி தனது முதல் ரஞ்சி கோப்பையை வென்று வரலாறு படைத்துள்ளது.
  • ஆட்ட நாயகனாக சுபம் பண்டிர், தொடர் நாயகனாக ஆகிப் நபி தார் தேர்வாகியுள்ளார்கள். இவர்கள் இருவருமே ஜம்மு காஷ்மீர் அணியைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
சென்னை உயர் நீதிமன்ற தலைமை நீதிபதியாக எஸ்.ஏ.தர்மாதிகாரி நியமனம்
  • உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி சூர்யாகாந்த் தலைமையிலான கொலீஜியம் குழு கடந்த இரு தினங்களுக்கு முன்னதாக கூடியிருந்த நிலையில், அதில் பல்வேறு முக்கிய முடிவுகள் எடுக்கப்பட்டன. 
  • அதன்படி, கேரளா உயர்நீதிமன்றத்தில் பணியாற்றும் நீதிபதி எஸ்.ஏ.தர்மாதிகாரியை சென்னை உயர்நீதிமன்றத்தின் புதிய தலைமை நீதிபதியாக நியமிக்க பரிந்துரைக்கப்பட்டுள்ளது.
  • இதையடுத்து இந்த நடவடிக்கைக்கு ஒன்றிய சட்டத்துறை மற்றும் குடியசுத் தலைவர் ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில் அவர் பதவிப் பிரமாணம் எடுத்துக் கொள்வார் என்று தெரியவருகிறது. 
  • இதில் சென்னை உயர்நீதிமன்றத்தின் தற்போதைய தலைமை நீதிபதியாக இருக்கும் மணிந்திர மோகன் வஸ்தவா வரும் மார்ச் 5ம் தேதியுடன் ஓய்வு பெறவுள்ளார். எனவே மார்ச் 6ம் தேதி முதல் தர்மாதிகாரி பொறுப்பேற்பார் என்று தெரியவருகிறது. 
  • இதேப்போன்று அரியானா உயர்நீதிமன்ற நீதிபதி லிசா கில், ஆந்திரா உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாக பரிந்துரைக்கப்பட்டுள்ளார். 
  • பாட்னா உயர்நீதிமன்ற நீதிபதிகளாக முகமது நதீம் செராஜ் உட்பட ஒன்பது வழக்கறிஞர்களை நியமிக்க உச்ச நீதிமன்ற கொலீஜியம் ஒப்புதல் வழங்கியுள்ளது.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel