
24th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
முதல்வர் தலைமையில் அமைச்சரவைக் கூட்டம் 2026 - புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல்
- முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தலைமையில் தமிழ்நாடு தலைமை செயலகத்தில் அமைச்சரவைக் கூட்டம் நடைபெற்றது. இந்த கூட்டத்தில், புதிய தொழில் முதலீடுகளுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- அதன்படி, தமிழ்நாட்டில் புதிதாக நிறுவப்படவுள்ள மற்றும் விரிவாக்கம் செய்யப்படவுள்ள 46 திட்டங்களுக்கு ஊக்கச்சலுகைகள் வழங்க ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- இத்திட்டங்களினால் ரூ.31,592.39 கோடி முதலீடு உறுதியளிக்கப்பட்டுள்ளதுடன், 61,521 நபர்களுக்கு வேலைவாய்ப்புகள் உருவாகும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
- அத்துடன், மகளிர் உரிமைத் தொகை பெற்று வரும் மகளிருக்கான கோடை கால சிறப்புத் தொகையுடன் சேர்த்து ரூ. 5000 வரவு வைக்கப்பட்டுள்ளதற்கும் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.
- கடந்த 2023, ஆகஸ்ட்டில் இதேபோன்ற ஒரு தீர்மானம் கேரள சட்டப்பேரவையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டது. அந்த தீர்மானத்தை ஆராய்ந்த மத்திய உள்துறை அமைச்சகம் அதில் சில தொழில்நுட்ப மாற்றங்களை பரிந்துரைத்தது.
- அதன் காரணமாக, கேரளாவின் பெயரை கேரளம் என மாற்ற மத்திய அரசு நடவடிக்கை எடுக்கக் கோரி கேரள சட்டப்பேரவையில் கடந்த 2024, ஜூன் 24 அன்று ஒருமனதாக தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
- இந்த தீர்மானத்தின் மீது மத்திய அமைச்சரவை இன்று ஆலோசனை மேற்கொண்டது. சமீபத்தில் திறக்கப்பட்ட புதிய பிரதமர் அலுவலக கட்டிடமான சேவா தீர்த்தத்தில் முதல் முறையாக மத்திய அமைச்சரவைக் கூடி இது குறித்து ஆலோசித்தது. முடிவில், மாநிலத்தின் பெயரை கேரளா என்பதில் இருந்து கேரளம் என மாற்ற மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
- மத்திய அமைச்சரவையின் ஒப்புதலை அடுத்து, கேரளா (பெயர் மாற்றம்) மசோதா 2026-ஐ, குடியரசு தலைவர், கேரள சட்டப்பேரவையின் ஒப்புதலுக்கு அனுப்பி வைப்பார்.
- கேரள மாநில சட்டப்பேரவையின் ஒப்புதலை அடுத்து, பெயர் மாற்ற மசோதா நாடாளுமன்றத்தில் அறிமுகப்படுத்தப்படும். மசோதா நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டதை அடுத்து, அது குடியரசு தலைவரின் ஒப்புதலுக்காக அனுப்பிவைக்கப்படும். குடியரசுத் தலைவரின் ஒப்புதலை அடுத்து பெயர் மாற்றம் நடைமுறைக்கு வரும்.
- கேரளாவில் விரைவில் சட்டப்பேரவைத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில், மாநில பெயர் மாற்றம் முக்கிய நிகழ்வாகப் பார்க்கப்படுகிறது.
- ரயில்வே அமைச்சகத்தின் சார்பில் ரூபாய் 9,072 கோடி மதிப்பிலான 3 திட்டங்களுக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அமைச்சரவை இன்று ஒப்புதல் அளித்துள்ளது.
- கோன்டியா – ஜபல்பூர் இரட்டை வழிப்பாதை, புனாரக் – கியூல் இடையே 3வது, 4வது வழித்தடம், கம்ஹாரியா – சந்தில் இடையே 3வது, 4வது வழித்தடம் ஆகியவை இதில் அடங்கும். மகாராஷ்ட்டிரா, மத்திய பிரதேசம், பீகார், ஜார்க்கண்ட் ஆகிய மாநிலங்களில் 8 மாவட்டங்களில் இந்த 3 திட்டங்கள் அடங்கும். இதன் மூலம் சுமார் 307 கிலோ மீட்டர் தொலைவிற்கு ரயில் வழித்தடம் அதிகரிக்கும்.
- இதனால் சுமார் 98 லட்சம் மக்கள் வசிக்கும் 5407 கிராமங்களுக்கு போக்குவரத்து வசதி மேம்படும். அத்துடன் கச்னார் சிவாலயம் (ஜபல்பூர், கன்ஹா தேசிய பூங்கா (பாலாகட்), கங்குல்பாரா அணை மற்றும நீர்வீழ்ச்சி, பென்ச் தேசிய பூங்கா, துவாந்தர் நீர்வீழ்ச்சி, பார்கி அணை, கோம்ஜி – சோம்ஜி கோவில், சந்தில் அணை உள்ளிட்ட பல்வேறு சுற்றுலா தலங்களுக்கு ரயில் போக்குவரத்து வசதியையும் இத்திட்டங்கள் மேம்படுத்தும்.
- குஜராத் மாநிலம் கிஃப்ட் நகரத்திலிருந்து ஷாபூர் வரையிலான 3.3 கிமீ தொலைவுள்ள வழித்தட நீட்சிக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டம் ஒப்புதல் அளித்துள்ளது. இந்தத் திட்டம் சுமார் 4 ஆண்டுகளில் நிறைவடையும். இந்த வழித்தடத்தில் 3 உயர்மட்ட நிலையங்களும் அமைக்கப்படும்.
- இந்தத் திட்டத்திற்கு ரூ.1067.35 கோடி செலவாகும் என மதிப்பிடப்பட்டுள்ளது. நீட்டிக்கப்பட்ட வழித்தடத்தின் மூலம் 2029-ல் 23,702 பயணிகளும், 2041-ல் சுமார் 58,059 பயணிகளும் பயனடைவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- இந்த வழித்தடம் அகமதாபாத் மற்றும் கிஃப்ட் நகருக்கு இடையே உள்ள பிராந்தியத்தின் இணைப்பை வலுப்படுத்தும். உத்தேச வழித்தடத்தில் அமைந்துள்ள பன்னாட்டு நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், வணிக மையங்கள் நேரடியாக பயனடையும்.
- இந்த வழித்தடம் அமைக்கும் காலத்தில் சுமார் 1,000 பேருக்கும் கட்டுமானத்திற்குப் பின் செயல்பாடு மற்றும் பராமரிப்புக் காலத்தில் சுமார் 250 பேருக்கும் வேலைவாய்ப்புக் கிடைக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
- 2026-27 சந்தைப் பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலைக்கு பிரதமர் திரு நரேந்திர மோடி தலைமையில் இன்று நடைபெற்ற பொருளாதார விவகாரங்களுக்கான மத்திய அமைச்சரவைக்குழுக் கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டது.
- 2026-27 சந்தைப் பருவத்திற்கு பதப்படுத்தப்படாத சணலுக்கான (டிடி-3 வகை) குறைந்தபட்ச ஆதரவு விலை குவின்டாலுக்கு ரூ.5,925 என நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
- உற்பத்திச் செலவைவிட குறைந்தபட்சம் ஒன்றரை மடங்கு அதிகமாக குறைந்தபட்ச ஆதரவு விலை இருக்க வேண்டும் என்ற கோட்பாட்டிற்கு இணங்க இந்த விலை நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. 2025-26 சந்தைப் பருவத்தைவிட தற்போது குவின்டாலுக்கு ரூ.275 அதிகரிக்கப்பட்டுள்ளது.

