
23rd FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
நாட்டின் முதல் அதிவேக நமோ பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்
- இந்தியாவில் ரயில் போக்குவரத்தை நவீனப்படுத்தவும் துரிதப்படுத்தவும் மத்திய அரசு பல்வேறு முன்னெடுப்புகளை மேற்கொண்டு வருகிறது.
- கடந்த 2024 ஆம் ஆண்டு குஜராத்தின் அகமதாபாத்-புஜ் நகரங்களுக்கு இடையே நமோ பாரத் விரைவு ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.
- இதன் அடுத்தக்கட்டமாக, டெல்லியில் இருந்து உத்தரப்பிரதேச மாநிலம் மீரட் வரை 82 கிலோ மீட்டர் தூரத்தை இணைக்கும் நாட்டின் முதல் மண்டல அதிவேக போக்குவரத்து அமைப்பான நமோ பாரத் மெட்ரோ ரயில் சேவையை பிரதமர் மோடி கொடியசைத்து தொடங்கி வைத்தார்.
- டெல்லியின் சராய் கலே கான் மெட்ரோ ரயில் நிலையத்தில் இருந்து சுமார் 82 கிலோ மீட்டர் தூரத்தில் மீரட்டில் உள்ள மோடிபுரம் ரயில் நிலையத்தை இந்த அதிவேக ரயில் சேவையின் மூலம் 55 நிமிடங்களில் சென்றடைலாம்.
- அதாவது நமோ பாரத் விரைவு ரயிலால் அதிகபட்சமாக மணிக்கு 180 கிலோ மீட்டர் வேகத்தில் செல்ல முடியும். தற்போது, முதற்கட்டமாக நமோ பாரத் ரயில் மணிக்கு 160 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்கப்படுகிறது.

