//
Type Here to Get Search Results !

20th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

20th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

அமெரிக்கா தலைமையிலான 'பாக்ஸ் சிலிக்கா' கூட்டமைப்பில் இணைந்தது இந்தியா
  • குறைக்கடத்தி உற்பத்தி முதல் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பு வரை சிலிக்காண் அடுக்கைப் பாதுகாப்பதில் உறுதிபூண்டுள்ள நம்பகமான நாடுகளின் கூட்டமைப்பாக பாக்ஸ் சிலிக்கா கருதப்படுகிறது. 
  • அமெரிக்கா தலைமையிலான இந்த கூட்டமைப்பு, வளர்ந்து வரும் தொழில்நுட்பங்கள் வெளிப்படையானதாகவும், ஜனநாயக சமூகங்களால் நிர்வகிக்கப்படுவதாகவும் இருப்பதை உறுதி செய்வதை நோக்கமாகக் கொண்டுள்ளது.
  • இந்த கூட்டமைப்பில் இந்தியா இன்று முறைப்படி இணைந்தது. டெல்லியில் நடைபெற்று வரும் செயற்கை நுண்ணறிவு தாக்க உச்சி மாநாட்டில் இந்திய தகவல் தொடர்பு துறை அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ், அமெரிக்க பொருளாதார வளர்ச்சி, எரிசக்தி, சுற்றுச்சூழல் துறை இணை அமைச்சர் ஜேக்கப் ஹெல்பெர்க், இந்தியாவுக்கான அமெரிக்க தூதர் செர்ஜியோ கோர் உள்ளிட்டோர் முன்னிலையில் இதற்கான ஒப்பந்தத்தில் இந்தியா கையெழுத்திட்டது.
  • இந்த கூட்டமைப்பில் ஆஸ்திரேலியா, கிரீஸ், இஸ்ரேல், ஜப்பான், தென் கொரியா, கத்தார், சிங்கப்பூர், ஐக்கிய அரபு எமிரேட்ஸ், இங்கிலாந்து ஆகிய நாடுகள் உள்ளன. 
  • அதேநேரத்தில், கனடா, நெதர்லாந்து, ஐரோப்பிய யூனியன், தைவான் ஆகிய நாடுகள் இதற்கான ஒப்பந்தத்தில் கையெழுத்திடவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
ககன்யான் திட்டத்துக்குப் பயன்படுத்தப்படும் நவீன பாராசூட் சோதனை வெற்றி
  • வானில் பறக்கும் விமானம், ஹெலிகாப்டரில் இருந்து கீழே குதிக்க பாராசூட் பயன்படுத்துவது போல, விமானம் உள்ளிட்டவை தரையிறங்கும்போது, அதன் வேகத்தை மட்டுப்படுத்த டிரோக் பாராசூட் பயன்படுத்தப்படும்.
  • விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் ககன்யான் திட்ட விண்கலத்துக்கு இதுபோன்ற பாராசூட் பயன்படுத்தப்படவுள்ளது. இந்த பாராசூட்டை புதன்கிழமை சண்டீகரில் உள்ள சோதனை மையத்தில் டிஆா்டிஓ பரிசோதித்துள்ளது.
  • இதுகுறித்து பாதுகாப்பு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ககன்யான் திட்டத்துக்காக டிரோக் பாராசூட் வெற்றிகரமாக பரிசோதிக்கப்பட்டிருப்பது, விண்வெளிக்கு மனிதா்களை அனுப்பும் இந்தியாவின் திட்டத்தில் முக்கிய மைல்கல் ஆகும்.
  • அதிக சக்தி கொண்ட ரிப்பன் பாராசூட்டுகளை வடிவமைப்பது, உற்பத்தி செய்வதில் இந்தியா நிபுணத்துவம் பெற்றுள்ளது என்பதை இந்த பரிசோதனை நிரூபித்துள்ளது எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
காஸா அமைதிக் குழுவின் முதல் கூட்டம்
  • கடந்த செப்டம்பரில் இஸ்ரேல்-ஹமாஸ் போரை நிறுத்த டிரம்ப் முன்மொழிந்த அமைதிக் குழுவின் முதல் ஆலோசனைக் கூட்டம், அமெரிக்க தலைநகா் வாஷிங்டனில் வியாழக்கிழமை நடைபெற்றது. இதில் பல்வேறு உலக நாடுகளின் தலைவா்கள் பங்கேற்றனா்.
  • நிகழ்வில் அதிபா் டிரம்ப் ஆற்றிய உரை: காஸா மறுசீரமைப்புக்காக அமைதிக் குழுவின் பல உறுப்பு நாடுகள் இணைந்து இதுவரை 700 கோடி டாலா் திரட்டியுள்ளது. அமெரிக்கா கூடுதலாக 1,000 கோடி டாலா் வழங்கும். அதேபோல், மனிதாபிமான உதவிகளுக்காக ஐ.நா. 200 கோடி டாலா் நிதி வழங்கும்.
  • காஸாவின் நீடித்த அமைதிக்கு, அங்கு நிலைநிறுத்தபடவுள்ள சா்வதேச படைக்கு இந்தோனேசியா, மொராக்கோ, கஜகஸ்தான், கொசோவோ, அல்பேனியா ஆகிய 5 நாடுகள் வீரா்களை அனுப்புகின்றன. காஸா காவல்துறைக்குப் பயிற்சி அளிக்கும் பொறுப்பை எகிப்து மற்றும் ஜோா்டான் ஏற்றுக்கொண்டுள்ளது என்றாா்.
  • மறுசீரமைப்புப் பணிகளுக்காக அமெரிக்கா மற்றும் அமைதிக் குழு நாடுகளின் சாா்பில் 1,700 கோடி டாலா் (இந்திய மதிப்பில் சுமாா் ரூ.1.55 லட்சம் கோடி) நிதி ஒதுக்கீடு செய்யப்படும் என்று அமெரிக்க அதிபா் டொனால்ட் டிரம்ப் அறிவித்தாா்.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel