//
Type Here to Get Search Results !

தமிழ்நாடு அரசின் 2026-27 இடைக்கால பட்ஜெட் / TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027

பிப்ரவரி 2026இன் முக்கியமான நாட்களின் பட்டியல் / LIST OF IMPORTANT DAYS IN FEBRUARY 2026
  • தமிழ்நாடு அரசின் 2026-27 இடைக்கால பட்ஜெட் / TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: தமிழ்நாடு அரசின் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டு வருகிறது. அரசின் பதவிக்காலம் விரைவில் முடிவதால் இந்த பட்ஜெட் வழக்கமான முழு பட்ஜெட்டாக இல்லாமல் இடைக்கால பட்ஜெட்டாக அமைகிறது. 
  • இடைக்கால பட்ஜெட்டில் புதிய அரசு அமைவது வரையிலான அரசின் செலவினங்களுக்கான நிதிஒதுக்கப்பட்டு அதற்கான ஒப்புதல் பெறப்படும். 
  • இந்நிலையில் 2026-27ஆம் ஆண்டுக்கான இடைக்கால பட்ஜெட்டை நிதியமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்து பட்ஜெட் உரையை வாசித்தார்.

2026-27 ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடு

  • தமிழ்நாடு அரசின் 2026-27 இடைக்கால பட்ஜெட் / TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: 2026-27 ம் ஆண்டு இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீட்டில் வருவாய்ப் பற்றாக்குறை 48,696.32 கோடி ரூபாயாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • வரி வசூலை மேம்படுத்துதல், வரி வசூல் நிர்வாகத்திறனை மேம்படுத்துதல் உள்ளிட்ட வருவாயைப் பெருக்கும் நடவடிக்கைகளைக் கருத்திற்கொண்டு, வருவாய்ப் பற்றாக்குறை 2027-28 ஆம் ஆண்டில் 42964.61 கோடி ரூபாயாக குறையும் எனவும், அதன் தொடர்ச்சியாக 2028-29 ஆம் ஆண்டில் 35,115.33 கோடி ரூபாயாக குறையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது. இது கூடுதல் மூலதனச் செலவினத்திற்கு வழிவகை செய்யும்.
  • 2026-27 ஆம் ஆண்டிற்கான இடைக்கால வரவு-செலவுத் திட்ட மதிப்பீடுகளில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி (GSDP) மதிப்பில் நிதிப்பற்றாக்குறையின் விகிதம் 200 சதவீதமாக மதிப்பிடப்பட்டுள்ளது. 
  • இது, பொருளாதாரம் மற்றும் நிதிநிலையில் பல்வேறு சவால்களை சந்தித்து வரும் நிலையிலும், நிதிநிலையை மேம்படுத்துவதில் அரசிற்கு உள்ள உறுதிப்பாட்டை வெளிக்காட்டுகிறது.2027-28 மற்றும் 2028-29 ஆம் ஆண்டுகளில், இது முறையே, 288 சதவீதம் மற்றும் 230 சதவீதமாக இருக்கும் எனவும் கணிக்கப்பட்டுள்ளது. இது, தமிழ்நாடு நிதிநிலை நிருவாகப் பொறுப்புடைமைச் சட்டம், 2003 இல் குறிப்பிடப்பட்டுள்ள இலக்கிற்குள் உள்ளது.
  • ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2026-27 ஆம் ஆண்டில் மாநில அரசு 178,308.05 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. 
  • மேலும், 60,418,42 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக் கடனை அரசு திருப்பிச் செலுத்தும்.
  • இதன் விளைவாக, 31.03.2027 அன்று நிலுவையில் உள்ள கடன் 10,71,770.34 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2020-27 ஆம் ஆண்டில் மாநில மொத்த உள்நாட்டு உற்பத்தி மதிப்பில் இது 20:35 சதவீதம் ஆகும்.

என்னென்ன துறைக்கு எத்தனை கோடி முதலீடு?

  • தமிழ்நாடு அரசின் 2026-27 இடைக்கால பட்ஜெட் / TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: அனைத்து சமூகத் திட்டங்களுக்கும் சேர்த்து நிதிநிலை அறிக்கையில் 5463 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • உயர்கல்வி - உயர்கல்வித்துறைக்கு 8505 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது
  • செயலாக்கம் - 17088 கோடி ரூபாய் சிறப்புத் திட்ட செயலாக்கத்துறைக்கு ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • பொதுப்பணி - பொதுப்பணித்துறைக்கு 1694 கோடி ரூபாய் ஒதுக்கீடு. கோயம்புத்தூர் திருச்சி கடலூர் சேலம் திருநெல்வேலி ஆகிய இடங்களில் மாபெரும் நூலகங்கள் அமைக்கும் பணிகளை பொதுப்பணித்துறை மேற்கொண்டு உள்ளது.
  • தொழில் - 1943 கோடி ரூபாய் சிறு, குறு நடுத்தர தொழில் துறைக்கு ஒதுக்கீடு.
  • தகவல் தொழில்நுட்பம் - தகவல் தொழில்நுட்பத்துறைக்கு 219 கோடி ஒதுக்கீடு.
  • நீர்வளம் - நீர்வளத்துறைக்கு 10,076 கோடி ஒதுக்கீடு. சென்னைக்கு அருகே திருப்போரில் 342 கோடி மதிப்பீட்டில் மாமல்லன் நீர்த்தேக்கம் எனும் புதிய நீர்த்தேக்கத்திற்கு முதல்வர் அண்மையில் அடிக்கல் நாட்டியுள்ளார்.
  • எரிசக்தி - எரிசக்தி துறைக்கு 18,091 கோடி ஒதுக்கீடு
  • போக்குவரத்து - போக்குவரத்து துறைக்கு 13062 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. இடைக்கால வரவு செலவுத் திட்டம் மதிப்பீடுகளில் மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக 4000 கோடி ஒதுக்கீடு. மாணவர்கள் பேருந்து பயண கட்டணம் திட்டத்திற்காக 1782 கோடி ரூபாய், டீசல் மானியத்திற்காக 1857 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • மின்சாரம் - மின்சாரத்துறைக்கு 18091 கோடி ரூபாய் ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலை - நெடுஞ்சாலைகள் மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு 21132 கோடி ரூபாய் ஒதுக்கீடு. 
  • ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் - பழங்குடியின மக்களின் குடியிருப்பு உள்கட்டமைப்பு மேம்பாடுக்காக 300 கோடி ஒதுக்கீடு, பழங்குடியினர் வீடு கட்டுமான பணிகள் மேற்கொள்ள 755 கோடி ரூபாய் ஒதுக்கீடு, மொத்தமாக ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறைக்கு 3934 கோடி ஒதுக்கீடு. ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறையில் 420 கோடி ரூபாய் மானியம் வழங்கப்பட்டுள்ளது.
  • இந்து சமய அறிநிலையத்துறை - 8100 கோடி மதிப்பீட்டில் திருப்பணிகள் மேற்கொள்ளப்பட்டு 4100 கோயில்களில் குடமுழுக்கு மேற்கொள்ளப்பட்டுள்ளது. 1048 கோயில்களுக்கு சொந்தமான - 8163 கோடி ரூபாய் மதிப்பிலான நிலங்கள் ஆக்கிரமிப்பாளர்களிடம் இருந்து மீட்கப்பட்டுள்ளது.
  • சிறுபான்மை - பிற்படுத்தப்பட்டோர் நலன் மற்றும் சிறுபான்மையினர் நலத்துறைக்கு சேர்த்து 1,634 கோடி ஒதுக்கீடு.
  • சுற்றுலா - சுற்றுலா துறைக்கு 1394 கோடி ஒதுக்கீடு. 
  • கால்நடை - கால்நடை , பால்வளம் மீன்வளத்துறைக்கு 4435 கோடி ஒதுக்கீடு

முக்கிய அறிவிப்புகள்

  • தமிழ்நாடு அரசின் 2026-27 இடைக்கால பட்ஜெட் / TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: புதிய டைடல் பூங்கா - 1070 கோடி முதலீட்டில் புதிய டைடல் பூங்காக்கள் திருச்சிராப்பள்ளி, மதுரை, ஒசூர் ஆகிய நகரங்களில் நிறுவப்பட்டு வருகின்றன.
  • டைடல் நியோ மினி தகவல் தொழில்நுட்பப் பூங்காக்கள் - விழுப்புரம், தஞ்சாவூர், சேலம், தூத்துக்குடி, வேலூர், காரைக்குடி, திருப்பூர் ஆகிய 7 நியோ டைடல் பூங்காக்கள் திறக்கப்பட்டுள்ளன.
  • நாமக்கல், திருவண்ணாமலை, விருதுநகர், திருநெல்வேலி, கன்னியாகுமரி, ஈரோடு, நாகப்பட்டினம், கரூர், புதுக்கோட்டை ஆகிய 9 நியோ டைடல் பூங்காக்கள் ரூ.388 கோடியில் பணிகள் நடைபெற்று வருகின்றன. இதன்மூலம் 25,500 புதிய வேலைவாய்ப்புகள் கிடைக்க வழிவகை செய்யப்பட்டுள்ளன.
  • செமி கண்டக்டர் - அடுத்த 5 ஆண்டுகளில் செமி கண்டக்ட் துறையில் முன்னேற 500 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • தஞ்சை, ஈரோடு, ராமநாதபுரம், சென்னையில் ரூ.285 கோடியில் அருங்காட்சியகங்கள் அமைக்கப்பட உள்ளது
  • 8 பிற மாநிலங்கள், அயல்நாடுகளில் தமிழ் படிப்பதற்கான மையங்கள் தொடங்கப்பட்டுள்ளன
  • மகளிர் சுய உதவிக் குழுக்களில் ரூ.6.23 லட்சம் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • கோவில்களில் பெண் ஓதுவார் நியமனம் திமுக அரசின் மகத்தான சாதனையாகும்.
  • அரசு மருத்துவமனைகளில் பாதுகாப்பாக பிரசவம் இந்தியாவிலேயே தமிழ்நாடு முதலிடம்
  • மகளிருக்கான இளஞ்சிவப்பு ஆட்டோ திட்டம் செயல்படுத்தப்பட்டுள்ளது.
  • தமிழ்நாடு பெண்கள் வேலைவாய்ப்பு மற்றும் பாதுகாப்பு திட்டம் உலக வங்கியின் உதவியுடன் செயல்படுத்தப்பட்டு வருகிறது.
  • தமிழ்நாட்டில் மகளிருக்காக 19 தோழிகள் விடுதிகள் திறக்கப்பட்டுள்ளன
  • 6,23,529 மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு ரூ.1.41 லட்சம் கோடி வங்கி கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • பெற்றோரை இழந்த குழந்தைகளுக்கான அன்புக்கரங்கள் திட்டத்தில் 10,637 குழந்தைகள் பயன்பெறுகின்றனர்.
  • மூத்த குடிமக்களுக்கான பராமரிப்பு மையங்களாக 25 இடங்களில் அன்புச்சோலைகள் திறக்கப்பட்டுள்ளன.
  • தாயுமானவர் திட்டத்தின் கீழ் 27 லட்சம் பேர் பயனடைந்துள்ளனர்.
  • உள்ளாச்சி அமைப்புகளில் மாற்றுத் திறனாளிகள் 3,632 பேர் நியமன உறுப்பினர்களாக பொறுப்பேற்பு
  • ரூ.10 கோடியில் அயலக தமிழர்களுக்கு தமிழ் கற்பிக்கும் பணி நடைபெறும்.
  • மாற்றுத்திறனாளிகள் நலத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,471 கோடி ஓதுக்கீடு
  • இலங்கை தமிழர்களுக்காக உதவித்தொகை உட்பட பல திட்டங்களுக்கு மொத்தம் ரூ.456 கோடி செலவிடப்பட்டுள்ளது.
  • பேராசிரியர் அன்பழகனார் திட்டத்தில் 3,721 வகுப்பறைகள் கட்டப்பட்டுள்ளன.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு
  • முதலமைச்சர் கோப்பை விளையாட்டு போட்டியில் 5 ஆண்டுகளில் ரூ.101 கோடி அளவில் பரிசுத்தொகை வழங்கப்பட்டுள்ளது.
  • சிறப்பு திட்ட செயலாக்கத் துறைக்கு ரூ.17,088 கோடி ஒதுக்கீடு.
  • உயர்கல்வி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.8505 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • ஊரக வளர்ச்சித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,638 கோடி ஒதுக்கீட செய்யப்படுகிறது.
  • இளைஞர் நலன் மற்றும் விளையாட்டுத்துறைக்கு ரூ.718 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
  • கலைஞர் கனவு இல்லத் திட்டத்தின் கீழ் 1.71 லட்சம் வீடுகள் கட்டி முடிப்பு- மேலும் 1 லட்சம் வீடுகள் கட்ட இலக்கு
  • முதல்வர் விளையாட்டு போட்டிக்கு ரூ.47 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • நகராட்சி நிர்வாகத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.28,227 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கலைஞர் விளையாட்டு தொகுப்புகள் திட்டத்தில் 12,525 கிராம ஊராட்சிகளுக்கு ரூ.88 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • கூட்டு குடிநீர் திட்டங்களை செயல்படுத்த ரூ.809 கோடி ஒதுக்கப்பட்டு பணிகள் நடக்கின்றன.
  • சென்னையில் உள்ள நீர் நிலைகளை ஒருங்கிணைத்து சமச்சீராக குடிநீர் வியோகிக்க முதன்மை சுற்றுக்குழாய் திட்டம் ரூ.3,109 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • ஆசிரியர்கள் நலம் பேண முழு உடல் பரிசோதனை திட்டம் செயல்படுத்தப்படுகிறது.
  • காலை உணவுத் திட்டம் மூலம் 19.34 லட்சம் மாணவர்கள் பயன்பெறுகின்றனர். 4 ஆண்டுகளில் ரூ.1,284 கோடி ஒதுக்கீடு
  • சென்னை மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் இதுவரை 77,800 வீட்டுமனைப் பட்டாக்கள் வழங்கப்பட்டுள்ளது.
  • 10 லட்சம் மடிக்கணினி வழங்கும் திட்டத்தில் இதுவரை 6.75 லட்சம் மாணவர்களுக்கு ம டிக்கணினி வழங்கப்பட்டுள்ளன.
  • 8,52,680 மாற்றுத்திறனாளிகள் மாதம் ரூ.2,000 பராமரிப்பு தொகை, ரூ,1,500 உதவித்தொகை பெறுகின்றனர்.
  • கடந்த 5 ஆண்டுகளில் 38 புதிய அரசு கலை, அறிவியல், கல்லூரிகள் உருவாக்கப்பட்டு 18,760 மாணவர்கள் கூடுதலாக பயனடைந்து வருகின்றனர்.
  • பள்ளிக்கல்வித் துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் நிதி ரூ.48,534 கோடி ஒதுக்கீடு.
  • 11 பொறியியல் கல்லூரிகளில் செயற்கை நுண்ணறிவு உள்ளிட்ட பாடத் திட்டங்கள் அறிமுகம்
  • புதுமைப்பெண் திட்டத்தில் 6.95 லட்சம் மாணவிகளுக்கு மாதம் ரூ.1000 வழங்கப்படுகிறது.
  • தொழிலாளர் நலத்துறைக்கு ரூ.1,996 கோடி ஒதுக்கீடு
  • நதிக்கரை மேம்பாட்டுக்கு ரூ.374 கோடி ஒதுக்கீடு.
  • மக்களை தேடி மருத்துவம் திட்டத்தில் 2.55 கோடி பேர் பயனடைந்துள்ளனர்.
  • நான் முதல்வன் திட்டத்தில் 48,65,050 மாணவர்களுக்கு திறன் சான்றிதழ்கள் வழங்கப்பட்டுள்ளன.
  • GIG தொழிலாளர்கள் 2000 பேருக்கு தலா ரூ.20,000 மானியம்.
  • புதிதாக 30 முதல்வர் படைப்பகங்கள் அமைக்க ரூ.104 கோடி ஒதுக்கீடு
  • அண்ணா கிராம மறுமலர்ச்சி திட்டத்திற்கு ரூ.6000 கோடி ஒதுக்கீடு.
  • மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.22,090 கோடி ஒதுக்கீடு.
  • திருச்சி, மதுரை, ஓசூரில் ரூ.1,070 கோடியில் புதிய டைடல் பூங்கா நிறுவப்பட்டு வருகிறது.
  • 2030-ம் ஆண்டுக்குள் 1 டிரில்லியன் டாலர் என்கிற பொருளாதார வளர்ச்சி உடன் அரசு இயங்கி வருகிறது.
  • சென்னை தரமணியில் செமிகண்டக்டர் மையம் அமைக்கும் பணி நடைபெறுகிறது.
  • செமி கண்டக்டர் இயக்கத்துக்கு 5 ஆண்டு செயல்திட்டமாக ரூ.500 கோடி ஒதுக்கீடு
  • தொழில்துறையில் ரூ.12.30 லட்சம் கோடியில் புரிந்துணர்வு ஒப்பந்தங்கள்.
  • கப்பல் கட்டும் தொழிலில் உலகளாவிய முதன்மையான மையமாக தமிழகத்தை மாற்ற நடவடிக்கை
  • 11.19% எனும் இரட்டை இலக்க பொருளாதார வளர்ச்சி பெற்று நாட்டிலேயே முதலிடம் பிடித்துள்ளது தமிழ்நாடு.
  • வடசென்னை வளர்ச்சி திட்டத்தின் கீழ் ரூ.6,500 கோடி மதிப்பில் பணிகள் நடந்த வருகின்றன.
  • விரிவான மருத்துவக் காப்பீடு திட்டத்திற்கு ரூ.6,374 கோடி ஒதுக்கப்பட்டு 87,34,363 கோரிக்கைகள் தீர்ப்பு
  • தகவல் தொழில்நுட்பத்துறைக்கு ரூ.219 கோடி ஒதுக்கீடு.
  • 5 ஆண்டில் 36 லட்சத்துக்கும் மேலான வேலை வாய்ப்பு உருவாகும் வகையில் நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
  • கன்னியாகுமரி மாவட்டம் வெள்ளிமலையில் 1,000 மெகாவாட் மின்னுற்பத்தி திட்டம்
  • 5 ஆண்டுகளில் 38,62,919 அமைப்பு சாரா தொழிலார்களுக்கு ரூ.3,397 கோடி நலத்திட்ட உதவிகள்.
  • வனவிலங்குகளை பாதுகாப்ப 6 புதிய வனவிலங்கு சரணாலயம்
  • நாமக்கல், விருதுநகர், நெல்லை உள்ளிட்ட இடங்களில் 9 நியோ டைடல் பூங்கா கட்டப்படுகின்றன.
  • இலங்கை தமிழர்களுக்கு வீடு கட்ட நிதி ஒதுக்கீடு, 10,469 வீடுகள் கட்ட ரூ.639 கோடி ஒதுக்கீடு.
  • சென்னை மற்றும் அதனை சுற்றி உள்ள பகுதிகளில் ரூ.1,618 கோடி மதிப்பீட்டில் வெள்ள தடுப்பு பணிகள் மேற்கொள்ளப்பட்டு உள்ளன.
  • அலையாத்தி காடுகளை மீள் உருவாக்கம் செய்யும் பணி நடைபெறுகிறது.
  • 5 ஆண்டில் 100 புதிய பாதுகாக்கப்பட்ட காடுகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
  • கிண்டி ரேஸ்கோர்ஸ் பகுதியில் 118 பரப்பளவில் சுற்றுச்சூழல் பூங்காவையும் அரசு அமைக்கிறது.
  • ஆண்டுதோறும் ரூ.2.5 லட்சம் கோடி தகவல் தொழில்நுட்பம் சார்ந்த ஏற்றுமதி செய்யப்படுகிறது.
  • புதிய சிற்றுந்து திட்டம் மூலம் 6303 புதிய வழித்தடங்களில் சிற்றுந்து சேவை வழங்கப்பட்டுள்ளது.
  • தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டில் எரிசக்தி துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு.
  • கடந்த 5 ஆண்டுகளில் ரூ.6130 கோடியில் 12,087 பேருந்துகள் வாங்க நிதி ஒதுக்கீடு.
  • கலைஞர் நகர்ப்புற மேம்பாட்டு திட்டத்தில் 10,226 பணிகள் ரூ.5300 கோடியில் மேற்கொள்ளப்பட்டன.
  • மாணவர்களுக்கு கட்டணமில்லா பஸ் பாஸ் திட்டத்திற்கு ரூ.1782 கோடி ஒதுக்கீடு.
  • கலைஞர் கைவினை திட்டம் மூலம் ரூ.405 கோடி கடன் உதவி, ரூ.83 கோடி மானியம் வழங்கப்பட்டுள்ளது.
  • மகளிர் விடியல் பயணம் திட்டத்திற்காக இடைக்கால பட்ஜெட்டில் ரூ.4000 கோடி ஒதுக்கீடு.
  • நெடுஞ்சாலை துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.21,132 கோடி ஒதுக்கீடு.
  • போக்குவரத்து துறைக்கு ரூ.13,062 கோடி ஒதுக்கீடு
  • ஆதி திராவிடர், பழங்குடியினர் நலத்துறைக்கு ரூ.3,934 கோடி ஒதுக்கீடு.
  • பழங்குடியின மக்களுக்கு 6655 வீடுகள் கட்டும் திட்டத்திற்காக ரூ.450 கோடி ஒதுக்கீடு.
  • பழங்குடியினர் வீடு கட்டுமான பணிகளுக்கு ரூ.755 கோடி ஒதுக்கீடு
  • சென்னையில் தேனாம்பேட்டை முதல் சைதாப்பேட்டை வரை ரூ.621 கோடி மதிப்பில் உயர்மட்ட சாலை
  • 30.79 கோடி உள்நாட்டு, வெளிநாட்டு சுற்றுலா பயணிகள் தமிழ்நாடு வந்துள்ளனர்.
  • மின்சார துறைக்கு ரூ.18,091 கோடி ஒதுக்கீடு.
  • சிறுபான்மை நலத்துறைக்கு ரூ.1634 கோடி ஒதுக்கீடு.
  • 5 ஆண்டுகளில் சிறுபான்மை மாணவர்கள் 90,773 பேருக்கு கல் உதவித்தொகை.
  • அனைத்து கிராம அண்ணா மறுமலர்ச்சி திட்டம் 2-க்கு நிதி ரூ.28,687 கோடி ஒதுக்கீடு.
  • கால்நடை பராமரிப்பு, பால்வளம் மீனவர் நலத்துறைக்கு ரூ.4,435 கோடி ஒதுக்கீடு.
  • அம்பேத்கர் அயலக உயர்கல்வி திட்டத்தின்கீழ் ரூ.160 கோடியில் 385 மாணவர்கள் பயனடைந்துள்ளனர்.
  • சுற்றுலா துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ.1,394 கோடி ஒதுக்கீடு
  • உலகளாவிய சுற்றுலா மாநாடு மூலம் 127 நிறுவனங்களுடன் ரூ.22,794 கோடி ஒப்பந்தங்கள் கையெழுத்து.
  • அதிகம் அறிப்படாத 22 சுற்றுலாத்தலங்கள் ரூ.100 கோடியில் மேம்படுத்தப்பட்டு வருகிறது.
  • கல்வி உதவித்தொகை திட்டங்களுக்கு லு.1317 கோடி ஒதுக்கீடு
  • நெடுஞ்சாலை மற்றும் சிறு துறைமுகங்கள் துறைக்கு ரூ.21,132 கோடி ஒதுக்கீடு.
  • 5 ஆண்டுகளில் 12,931 கோவில்களில் ரூ.8,100 கோடியில் திருப்பணிகள்.
  • 5 ஆண்டுகளில் 4,180 திருக்கோவில்களில் குடமுழுக்கு நடத்தப்பட்டுள்ளது.
  • ரூ.8363 கோடி மதிப்புள்ள 8,113 ஏக்கர் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன.
  • கூட்டுறவுத்துறைக்கு ரூ.17,068 கோடி ஒதுக்கீடு.
  • தமிழ்நாட்டில் பசுமை பரப்பை உயர்த்த அரசு தொடர்ந்து நடவடிக்கை
  • விவசாயிகளுக்கு கடந்த 5 ஆண்டுகளில் ரூ.69,087 கோடி பயிர் கடன் வழங்கப்பட்டுள்ளது.
  • ராமநாதபுரம் மாவட்டம் தங்கச்சிமடத்தில் ரூ.150 கோடியில் மீன் பிடித்துறைமுகம் அமைக்கப்படுகிறது.
  • ரூ.148 கோடியில் குந்துக்கால் மீன்பிடி இறக்குதளம் உள்ளிட்ட பணிகள் நடைபெற்று வருகின்றன
  • பழங்குடியின மக்களுக்கான தொல்குடி திட்டத்தின்கீழ் ரூ.450 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.
  • பழமையான தேவாலயங்கள் ரூ.25 கோடியில் புனரமைக்கப்பட்டு வருகின்றன.
  • கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1943 கோடி ஒதுக்கீடு
  • கிளாம்பாக்கத்தை தொடர்ந்து குத்தம்பாக்கம் பேருந்து நிலையம் விரைவில் பயன்பாட்டுக்கு வர உள்ளது.
  • ராமநாதபுரம் மாட்டம் பாம்பனில் ரூ.58 கோடியில் தூண்டில் வளைவு அமைக்கப்பட்டு வருகிறது.
  • ரூ.471 கோடியில் 64 புராதன கட்டடங்கள் புதுப்பிக்கப்பட்டுள்ளன.
  • தொன்மையான பள்ளிவாசல்கள், தர்காக்கள் மேம்பாட்டுக்கு ரூ.58 கோடி ஒதுக்கீடு
  • தூய்மை பணியாளர்களுக்கு கூடுதலாக 30,000 வீடுகள்
  • அரசு ஊழியர்களுக்கான தமிழ்நாடு உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத்துக்கு ரூ.11,000 கோடி
  • ரூ.758 கோடியில் பால் பண்ணைகள் நவீனமயமாக்கப்படும்.
  • மக்களுடன் முதல்வன் திட்டத்தின் கீழ் 23.50 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டுள்ளது.
  • 5 ஆண்டுகளில் 43 அனைத்து மகளிர் காவல் நிலையங்கள் திறக்கப்பட்டுள்ளது.
  • கடந்த 5 ஆண்டுகளில் 81 புதிய காவல் நிலையங்கள் உருவாக்கப்பட்டு செயல்பட்டு வருகின்றன.
  • 5 ஆண்டுகளில் 14,318 பேர் காவல்துறையில் பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • மனிதவள மேலாண்மை துறையில் 1,55,131 பேர் பணி நியமனம் செய்யப்பட்டு ரூ.1.55 லட்சம் ஒதுக்கீடு.
  • மக்களின் குறைகளுக்கு உடனுக்குடன் தீர்வு ஏற்படுத்த மாநிலம் முழுவதும் 4135 முகாம்கள் நடத்தப்பட்டு 23.5 லட்சம் மனுக்களுக்கு தீர்வு காணப்பட்டன.
  • பள்ளி, கல்லூரிகளில் போதைப்பொருள் பயன்பாட்டை தடுக்க திட்டம்.
  • போதைப்பொருட்களுக்கு எதிராக தூதுவர்களாக செயல்பட 4 லட்சம் மாணவர்களுக்கு பயிற்சி.
  • பொருளாதாரத்தில் நலிவுற்ற மக்களுக்கு 58,211 வீடுகள் கட்டப்பட்டுள்ளன,
  • கோவை, திருச்சி, கடலூர், சேலம், திருநெல்வேலியில் நூலகங்கள் அமைக்கப்பட்டு வருகின்றன.
  • கடந்த 5 ஆண்டுகளில் 37 புதிய தீயணைப்பு நிலையங்கள் ஏற்படுத்தப்ப்டடுள்ளன.
  • கடந்த 5 ஆண்டுகளில் 1.55 லட்சம் பேர் அரசுப்பணியில் தேர்வு செய்யப்பட்டு பணியமர்த்தப்பட்டுள்ளனர்.
  • தஞ்சை, சேலம், நாமக்கல்லில் மாவட்ட சிறை வளாகங்கள் அமைக்க நடவடிக்கை
  • கைத்தறி, கதர் துறைக்கு ரூ.1,943 கோடி ஒதுக்கீடு.
  • பொதுப்பணி துறைக்கு இடைக்கால பட்ஜெட்டில் ரூ1,694 கோடி ஒதுக்கீடு.
  • 5 ஆண்டுகளில் பேரிடம் நிவாரண நிதியாக மத்திய அரசிடம் கேட்டது ரூ.50,922 கோடி- கிடைத்தது ரூ.1,151 கோடி.
  • சென்னை மாநகாட்சியில் பேரிடம் மேலாண்மை ஆணையம் உருவாக்கப்பட்டுள்ளது.
  • பெண் அரசு ஊழியர்களுக்கான மகப்பேறு விடுப்பு 9 மாதங்களில் இருந்து 12 மாதங்களாக உயர்வு
  • உங்களுடன் ஸ்டாலின் திட்டத்தின் கீழ் 10,000 முகாம்கள் நடத்தப்பட்டு 38.48 லட்சம் மனுக்களுக்கு தீர்வு
  • கூட்டுறவு துறையின் மூலம் ரூ.12,359 கோடி பயிர் கடன், ரூ.4889 கோடி நகைக்கடன், ரூ.2118 கோடி சுய உதவி குழு கடன் தள்ளுபடி செய்யப்பட்டுள்ளது.
  • மாநில வளர்ச்சிக்கு கடன் பொருளாதாரம் முக்கியமானது. முன்னுரிமைத் துறைகளுக்காக ரூ.11 லட்சம் கோடி கடன் வழங்க இலக்கு
  • காவல்துறைக்கு ரூ.17,111 கோடி ஒதுக்கீடு
  • விருதுநகர், ராமநாதபுரம், சிவகங்கை மாவட்டங்களில் வறட்சி தடுப்பு பணிகள்.
  • மின்னணு பொருட்கள் ஏற்றுமதியில் 41.23% பங்களிப்பு நாட்டிலேயே தமிழ்நாடு முதலிடம்.
  • 10.86 லட்சம் வங்கி கணக்குள் ஆய்வு செய்யப்பட்டு ரூ.12,078 கோடி செயலற்ற நிதிகள் கண்டறிப்பட்டன.
  • பேரிடர் மேலாண்மை பணிக்கு தமிழக அரசு கூடுதலாக ரூ.9,160 கோடி ஒதுக்கீடு
  • நிதிப்பகிர்பு 4.07 சதவீதமாக குறைந்ததால் ரூ.3.17 லட்சம் கோடி இழப்பு, கர்நாடகா, கேரளாவை விட தமிழ்நாட்டுக்கு நிதிப்பகிர்வு விகிதம் குறைவு
  • ஜிஎஸ்டி வரிவிகித மாற்றத்தால் தமிழ்நாட்டுக்கு ரூ.9,600 கோடி இழப்பு
  • நடப்பாண்டில் மட்டும் ரூ.9600 கோடி வருவாள் இழப்பு ஏற்படும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
  • நிதி வருவாய் பகிர்வு முறையை மாற்றி அமைக்க வேண்டும்.
  • தற்போதைய நிதிக்குழுவின் வரிப்பகிர்வு குறித்த பரிந்துரை ஏமாற்றம் அளிக்கிறது.
  • 0.44% அளவிலேயே தமிழகத்திற்கான நிதிப்பகிர்வு அதிகரிப்பு
  • போதிய அளவு நிதியை வழங்காமல் செயற்கையான நெருக்கடியை ஏற்படுத்த ஓன்றிய அரசு முயற்சி.
  • வரிப்பங்கு குறைப்பால் தமிழ்நாட்டுக்கு ரூ.1,202 கோடி இழப்பு
  • தமிழ்நாட்டின் சொந்த வரிவருவாள் ரூ.2 லட்சத்து 6 ஆயிரத்து 540 கோடி
  • 16-வது நிதிக்குழுவின் அறிக்கை தமிழ்நாட்டுக்கு மிகுந்த ஏமாற்றத்தை அளித்துள்ளது.
  • சென்னை மெட்ரோ ரயில் 2-ம் கட்ட செலவில் மாநில அரசுக்கு கிடைக்க வேண்டிய நிதி கிடைக்கவில்லை.

ENGLISH

  • TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: The interim budget of the Tamil Nadu government is being presented. Since the government's term is ending soon, this budget is not a regular full budget but an interim budget. 
  • The interim budget will allocate funds for the government's expenditure until the new government is formed and approval will be obtained for it.
  • In this situation, Finance Minister Thangam Thennarasu presented the interim budget for 2026-27 and read the budget speech.

Interim Budget Estimate for 2026-27

  • TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: The revenue deficit in the interim budget estimate for 2026-27 has been estimated at Rs. 48,696.32 crore. 
  • Considering the revenue-enhancing measures including improving tax collection and tax collection management, the revenue deficit is expected to reduce to Rs. 42964.61 crore in 2027-28 and subsequently to Rs. 35,115.33 crore in 2028-29. This will pave the way for additional capital expenditure.
  • The fiscal deficit ratio to the Gross State Domestic Product (GSDP) has been estimated at 200 per cent in the Interim Budget Estimates for 2026-27. 
  • This reflects the government’s commitment to improving the fiscal position despite facing various challenges in the economy and fiscal position. It is estimated to be 288 per cent and 230 per cent in 2027-28 and 2028-29, respectively. This is within the target specified in the Tamil Nadu Fiscal Responsibility Act, 2003.
  • The borrowing and repayment have been estimated based on the overall borrowing limit fixed by the Union Government. In 2026-27, the State Government has planned to borrow a total of Rs. 178,308.05 crore. Moreover, the Government will repay public debt worth Rs. 60,418.42 crore. 
  • As a result, the outstanding debt as on 31.03.2027 is estimated to be Rs. 10,71,770.34 crore. This is 20.35 percent of the State GDP in 2020-27.

How many crores of investment in which sector?

  • TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: An allocation of Rs. 5463 crore has been made in the Budget for all social schemes.
  • Higher Education - Rs 8505 crore allocated for the Higher Education Department
  • Implementation - Rs 17088 crore allocated for the Special Project Implementation Department.
  • Public Works - Rs 1694 crore allocated for the Public Works Department. The Public Works Department is undertaking the work of setting up huge libraries in Coimbatore, Trichy, Cuddalore, Salem and Tirunelveli.
  • Industry - Rs 1943 crore allocated for the Small and Medium Enterprises Department.
  • Information Technology - Rs 219 crore allocated for the Information Technology Department.
  • Water Resources - Rs 10,076 crore allocated for the Water Resources Department. The Chief Minister recently laid the foundation stone for a new reservoir called Mamallan Reservoir at a cost of Rs 342 crore at Thirupor near Chennai.
  • Energy - Rs 18,091 crore allocated for the Energy Department
  • Transport - Rs 13062 crore has been allocated for the Transport Department. In the interim budget estimates, an allocation of Rs 4000 crore has been made for the Women's Dawn Trip Scheme. Rs 1782 crore has been made for the Student Bus Fare Scheme, and Rs 1857 crore for diesel subsidy.
  • Electricity - Rs 18091 crore has been allocated for the Electricity Department.
  • Highways - Rs 21132 crore has been allocated for the Highways and Minor Ports Department.
  • Adi Dravidars and Tribals - Rs 300 crore has been allocated for the development of residential infrastructure for the tribal people, Rs 755 crore has been allocated for the construction of tribal houses, and a total allocation of Rs 3934 crore has been allocated for the Adi Dravidars and Tribal Welfare Department. A subsidy of Rs 420 crore has been provided to the Adi Dravidars and Tribal Welfare Department.
  • Hindu Religious Studies Department - Renovations worth Rs. 8100 crore have been carried out and 4100 temples have been consecrated. Land worth Rs. 8163 crore belonging to 1048 temples has been recovered from encroachers.
  • Minority - 1,634 crore allocated for the welfare of backward classes and minority welfare departments.
  • Tourism - 1394 crore allocated for the tourism department.
  • Livestock - 4435 crore allocated for the livestock, dairy and fisheries departments

Important announcements

  • TAMILNADU INTERIM BUDGET 2026 - 2027: New Tidal Park - New Tidal Parks are being established in the cities of Tiruchirappalli, Madurai and Hosur with an investment of Rs. 1070 crore.
  • Tidal Neo Mini IT Parks - 7 Neo Tidal Parks have been opened in Villupuram, Thanjavur, Salem, Thoothukudi, Vellore, Karaikudi and Tiruppur.
  • Work is underway on 9 neo-tidal parks at Namakkal, Tiruvannamalai, Virudhunagar, Tirunelveli, Kanyakumari, Erode, Nagapattinam, Karur and Pudukkottai at a cost of Rs. 388 crore. This will create 25,500 new jobs.
  • Semiconductor - 500 crores have been allocated for progress in the semiconductor sector in the next 5 years.
  • Museums to be set up in Thanjavur, Erode, Ramanathapuram and Chennai at a cost of Rs. 285 crore
  • Tamil learning centers have been started in 8 other states and foreign countries
  • Rs. 1.41 lakh crore loan has been given to 6.23 lakh groups of women's self-help groups.
  • Appointment of female reciters in temples is a great achievement of the DMK government.
  • Tamil Nadu ranks first in India in safe childbirth in government hospitals
  • Pink auto scheme for women has been implemented.
  • Tamil Nadu Women's Employment and Security Scheme is being implemented with the help of the World Bank.
  • 19 hostels for women have been opened in Tamil Nadu
  • Bank loans of Rs. 1.41 lakh crore have been given to 6,23,529 women's self-help groups.
  • 10,637 children are benefiting from the Anbukaram scheme for orphans.
  • Anbucholais have been opened at 25 places as care centers for senior citizens.
  • 27 lakh people have benefited under the Thayumanavar scheme.
  • 3,632 differently-abled persons have taken charge as appointed members in Ullachi organizations
  • Tamil teaching work will be carried out for Rs. 10 crores to neighboring Tamils.
  • Rs. 1,471 crore allocated in the interim budget for the differently-abled welfare department
  • A total of Rs. 456 crore has been spent on various schemes, including scholarships for Sri Lankan Tamils.
  • 3,721 classrooms have been built under the Professor Anbazhaganar scheme.
  • Rs. 718 crore allocated for the youth welfare and sports department
  • Prize money of Rs. 101 crore has been given in the Chief Minister's Cup sports competition in 5 years.
  • Rs. 17,088 crore allocated for the Special Project Implementation Department.
  • Rs. 8505 crore is allocated for the Higher Education Department in the interim budget.
  • Rs. 28,638 crore is allocated for the Rural Development Department in the interim budget.
  • Rs. 718 crore is allocated for the Youth Welfare and Sports Department.
  • 1.71 lakh houses completed under the Kalaignar Dream Home Scheme - target to build 1 lakh more houses
  • Rs. 47 crore has been allocated for the Chief Minister's Sports Competition.
  • Rs. 28,227 crore has been allocated for the Municipal Administration Department in the interim budget.
  • Rs. 88 crore has been allocated for 12,525 village panchayats under the Kalaignar Sports Complex Scheme.
  • Rs. 809 crore has been allocated for the implementation of joint drinking water schemes and work is underway.
  • The main circuit project has been allocated Rs. 3,109 crore to integrate the water bodies in Chennai and distribute water evenly.
  • A complete physical examination project is being implemented to maintain the health of teachers.
  • 19.34 lakh students are benefiting from the breakfast program. An allocation of Rs. 1,284 crore in 4 years
  • 77,800 housing pattas have been issued so far in Chennai and surrounding areas.
  • 6.75 lakh students have been provided with laptops so far under the 10 lakh laptop distribution program.
  • 8,52,680 differently-abled persons are receiving a monthly maintenance allowance of Rs. 2,000 and a scholarship of Rs. 1,500.
  • 38 new government arts, science and engineering colleges have been established in the last 5 years, benefiting an additional 18,760 students.
  • An allocation of Rs. 48,534 crore has been made for the school education department in the interim budget.
  • Introduction of courses including Artificial Intelligence in 11 engineering colleges
  • Rs.1000 per month to 6.95 lakh girl students under the Innovative Women's Programme
  • Rs.1,996 crore allocated for the labour welfare department
  • Rs.374 crore allocated for riverbank development
  • 2.55 crore people have benefited from the People's Health Scheme
  • Skill certificates have been issued to 48,65,050 students under the Naan Mulwalvan Scheme
  • Rs.20,000 each subsidy to 2000 GIG workers
  • Rs.104 crore allocated for setting up 30 new CM workshops
  • Rs.6000 crore allocated for the Anna Grama Rejuvenation Scheme
  • Rs.22,090 crore allocated for the Medical and Public Welfare Department in the interim budget
  • New Tidal Parks are being set up in Trichy, Madurai and Hosur at a cost of Rs. 1,070 crore.
  • The government is running with an economic growth target of $ 1 trillion by 2030.
  • Work is underway to set up a semiconductor center in Chennai's Taramani.
  • Allocation of Rs. 500 crore for the semiconductor movement as a 5-year action plan
  • MoUs worth Rs. 12.30 lakh crore in the industry.
  • Efforts to transform Tamil Nadu into a global leading center in the shipbuilding industry
  • Tamil Nadu has ranked first in the country with a double-digit economic growth of 11.19%.
  • Work worth Rs. 6,500 crore is being carried out under the North Chennai Development Project.
  • Rs. 6,374 crore has been allocated for the Comprehensive Health Insurance Scheme and 87,34,363 claims have been settled
  • Allocation of Rs. 219 crore for the Information Technology sector.
  • Steps have been taken to create more than 3.6 million jobs in 5 years.
  • 1,000 MW power generation project in Vellimalai, Kanyakumari district
  • Rs. 3,397 crore welfare assistance to 38,62,919 unorganized workers in 5 years.
  • 6 new wildlife sanctuaries to protect wildlife
  • 9 neo-tidal parks are being built in places including Namakkal, Virudhunagar, Nellai.
  • Funds allocated for building houses for Sri Lankan Tamils, Rs. 639 crore allocated for building 10,469 houses.
  • Flood prevention works have been carried out in Chennai and its surrounding areas at an estimated cost of Rs. 1,618 crore.
  • Work is underway to regenerate the Alaiyathi forests.
  • 100 new protected forests have been announced in 5 years.
  • The government is also setting up an eco-park covering an area of ​​118 in the Guindy Racecourse area.
  • Rs.2.5 lakh crore IT-related exports are made annually.
  • 6303 new routes have been provided through the new Chittundu scheme.
  • In the interim budget of the Tamil Nadu government, Rs.18,091 crore has been allocated for the Energy Department.
  • In the last 5 years, funds have been allocated for the purchase of 12,087 buses out of Rs.6130 crore.
  • 10,226 works have been carried out under the Kalaignar Urban Development Scheme at a cost of Rs.5300 crore.
  • Rs.1782 crore has been allocated for the free bus pass scheme for students.
  • Rs.405 crore has been provided as loan assistance and Rs.83 crore as subsidy through the Kalaignar Craft Scheme.
  • Rs.4000 crore has been allocated in the interim budget for the Women's Dawn Trip Scheme.
  • Rs.21,132 crore has been allocated for the Highways Department in the interim budget.
  • Rs. 13,062 crore allocated for the transport sector
  • Rs. 3,934 crore allocated for the Adi Dravidar and Tribal Welfare Department.
  • Rs. 450 crore allocated for the construction of 6655 houses for the tribal people.
  • Rs. 755 crore allocated for the construction of tribal houses
  • High-level road from Teynampet to Saidapet in Chennai worth Rs. 621 crore
  • 30.79 crore domestic and foreign tourists have visited Tamil Nadu.
  • Rs. 18,091 crore allocated for the electricity sector.
  • Rs. 1634 crore allocated for the minority welfare department.
  • Stone scholarship for 90,773 minority students in 5 years.
  • Rs. 28,687 crore allocated for the All Village Anna Rejuvenation Scheme 2.
  • Rs.4,435 crore allocated for Animal Husbandry, Dairy and Fishermen Welfare Department.
  • 385 students have benefited from Rs.160 crore under Ambedkar Ayalaka Higher Education Scheme.
  • Rs.1,394 crore allocated for Tourism Sector in Interim Budget
  • Agreements worth Rs.22,794 crore signed with 127 companies through Global Tourism Conference.
  • 22 lesser-known tourist destinations are being developed at a cost of Rs.100 crore.
  • Rs.1,317 crore allocated for educational scholarship schemes
  • Rs.21,132 crore allocated for Highways and Minor Ports Department.
  • Rs.8,100 crore allocated for renovations in 12,931 temples in 5 years.
  • Kudamuzhuku has been conducted in 4,180 temples in 5 years.
  • 8,113 acres of temple lands worth Rs. 8363 crore have been recovered.
  • Rs. 17,068 crore allocated for the cooperative sector.
  • The government continues to take steps to increase the green cover in Tamil Nadu
  • Rs. 69,087 crore crop loans have been given to farmers in the last 5 years.
  • A fishing port is being built at Thangachimadam in Ramanathapuram district at a cost of Rs. 150 crore.
  • Work including a kunthukal fishing landing platform is underway at a cost of Rs. 148 crore
  • Rs. 450 crore has been allocated under the Tholkudi scheme for the tribal people.
  • Old churches are being renovated at a cost of Rs. 25 crore.
  • Rs. 1943 crore allocated for the handloom and khat sector
  • Kudhampakkam bus stand is to come into use soon after Kalampakkam.
  • A bait arch is being constructed at Ramanathapuram, Mattam Pamban at a cost of Rs. 58 crore.
  • 64 ancient buildings have been renovated at a cost of Rs. 471 crore.
  • Rs. 58 crore allocated for the development of ancient mosques and dargahs
  • 30,000 additional houses for sanitation workers
  • Rs. 11,000 crore for Tamil Nadu Guaranteed Pension for government employees
  • Dairy farms will be modernized at a cost of Rs. 758 crore.
  • 23.50 lakh petitions have been resolved under the Loksath Multhanvan scheme.
  • 43 all-women police stations have been opened in 5 years.
  • 81 new police stations have been created and are functioning in the last 5 years.
  • 14,318 people have been recruited in the police in 5 years.
  • 1,55,131 people have been appointed in the Human Resource Management department and an allocation of Rs. 1.55 lakh has been made.
  • 4135 camps have been held across the state to provide immediate redressal to the grievances of the people and 23.5 lakh petitions have been resolved.
  • A plan to prevent drug use in schools and colleges.
  • 4 lakh students have been trained to act as ambassadors against drugs.
  • 58,211 houses have been built for the economically weaker sections of the society,
  • Libraries are being set up in Coimbatore, Trichy, Cuddalore, Salem and Tirunelveli.
  • 37 new fire stations have been set up in the last 5 years.
  • In the last 5 years, 1.55 lakh people have been selected and employed in government jobs.
  • Action to set up district jail complexes in Thanjavur, Salem and Namakkal
  • Allocation of Rs. 1,943 crore for the handloom and khadir sector.
  • Allocation of Rs. 1,694 crore for the public works department in the interim budget.
  • In 5 years, Rs. 50,922 crore was asked from the central government as relief funds for the people - Rs. 1,151 crore was received.
  • A People Management Commission has been formed in the Chennai Municipality.
  • Maternity leave for female government employees increased from 9 months to 12 months
  • 10,000 camps held under the Stalin scheme and 38.48 lakh petitions resolved
  • Rs. 12,359 crore crop loan, Rs. 4889 crore jewelry loan, Rs. 2118 crore self-help group loan waived off through the cooperative sector.
  • Credit economy is important for the development of the state. Target to provide Rs. 11 lakh crore loan for priority sectors
  • Rs. 17,111 crore allocated to the police
  • Drought prevention work in Virudhunagar, Ramanathapuram, Sivaganga districts.
  • Tamil Nadu tops the country with 41.23% contribution in electronic goods exports.
  • 10.86 lakh bank accounts were examined and inactive funds of Rs. 12,078 crore were found.
  • Tamil Nadu government allocates additional Rs. 9,160 crore for disaster management work
  • Loss of Rs. 3.17 lakh crore due to reduction in financial allocation to 4.07 percent, financial allocation ratio for Tamil Nadu is lower than Karnataka and Kerala
  • Loss of Rs. 9,600 crore for Tamil Nadu due to change in GST tax rate
  • It is estimated that there will be a loss of Rs. 9600 crore in revenue in the current year alone.
  • The financial revenue sharing system should be changed.
  • The current Finance Commission's recommendation on tax sharing is disappointing.
  • Increase in financial allocation for Tamil Nadu by only 0.44%
  • The government is trying to create an artificial crisis by not providing adequate funds.
  • Tamil Nadu loses Rs. 1,202 crore due to tax share reduction
  • Tamil Nadu's own tax revenue is Rs. 2 lakh 6 thousand 540 crore
  • The report of the 16th Finance Commission has been a great disappointment for Tamil Nadu.
  • The state government has not received the funds it should have received for the cost of Chennai Metro Rail Phase 2.

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel