
17th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
எச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் இணைந்து தொடக்கி வைத்தனர்
- ஏஐ உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக மூன்று நாள்கள் பயணமாக இந்தியாவுக்கு வருகைப் புரிந்துள்ள இமானுவல் மேக்ரானை பிரதமர் நரேந்திர மோடி இன்று (பிப். 17) மும்பையில் சந்தித்துப் பேசினார்.
- இந்த சந்திப்பின்போது, இரு நாடுகளிடையேயான பாதுகாப்பு, வணிகம் உள்ளிட்ட துறைகள் சாா்ந்த ஒத்துழைப்பு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. மேலும், பிராந்திய மற்றும் சர்வதேச அளவில் நிலவும் பிரச்னைகள் குறித்துப் பேசவும் முக்கியத்துவம் அளிக்கப்பட்டது.
- பேச்சுவார்த்தையின்போது வெளியுறவுத் துறை அமைச்சர் ஜெய்சங்கர், பாதுகாப்பு ஆலோசகர் அஜித் தோவல் உள்பட பிரான்ஸ் நாட்டு உயரதிகாரிகள் உடன் இருந்தனர்.
- இதனைத் தொடர்ந்து, கர்நாடகத்தின் வெமகல் பகுதியில் டாடா குழுமத்தின் டாடா அட்வான்ஸ்டு சிஸ்டம் லிமிடெட் மற்றும் ஏர்பஸ் இணைந்து தயாரிக்கும், எச் 125 ஹெலிகாப்டர் உற்பத்தியின் இறுதி அசெம்ளியை பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இமானுவல் மேக்ரானும் இணைந்து தொடக்கி வைத்தனர்.
- இந்த எச் 125 ஹெலிகாப்டர், பொது பாதுகாப்பு மற்றும் ராணுவத்தில் இலகு ரக ஹெலிகாப்டர்களின் தேவையை பூர்த்தி செய்யும். எவரெஸ்ட் சிகரங்களில் ராணுவ நடவடிக்கைகளின்போது எச் 125 ஹெலிகாப்டர்கள் பயன்படுத்தப்படும்.
- டாடாவும் ஏர்பஸும் இணைந்து ராணுவ நடவடிக்கைகளுக்கான பிரத்யேகமாக எச் 125எம் என்ற இலகு ரக ஹெலிகாப்டர்களை தயாரித்து வருகிறது. இவை எச் 125 ஹெலிகாப்டர்களில் இருந்து சற்று மாறுபட்டதாக ராணுவ சூழல்களுக்கு ஏற்றதாக இருக்கும்.
- பிரான்ஸும் இந்தியாவும் இணைந்து இந்தியாவில் தயாரிக்கும் இந்த எச் 125 ஹெலிகாப்டர்கள் 2027-ல் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படும் என டாடா அறிவித்துள்ளது.
- ரபேல் விமானம் தயாரிப்பு உள்பட பாதுகாப்பு ஒத்துழைப்பு, எரிசக்தி, பொருளாதாரம், வர்த்தகம் மற்றும் இருதரப்பு ஒத்துழைப்பு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினர்.
- அதனை தொடர்ந்து கேட்வே ஆப் இந்தியாவில் இன்று மாலை பிரதமர் நரேந்திர மோடியும், மேக்ரானும் இணைந்து 'இந்தியா-பிரான்ஸ் புத்தாக்க ஆண்டு 2026'-ஐ தொடங்கி வைத்தனர்.
- மும்பையில் வர்த்தகம், பாதுகாப்பு, எரிசக்தி மற்றும் முக்கியமான தொழில்நுட்பங்கள் போன்ற முக்கிய துறைகளில் உறவுகளை மேம்படுத்துவதற்காக பிரதமர் நரேந்திர மோடி பிரான்ஸ் அதிபர் மேக்ரானுடன் பேச்சுவார்த்தை நடத்தினார்.
- இருதரப்பு பேச்சுவார்த்தைகளுக்குப் பிறகு, பிரதமர் நரேந்திர மோடியும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவல் மேக்ரானும் பாதுகாப்பு, திறன் மேம்பாடு, தொழில்நுட்ப ஒத்துழைப்பு, செய்யறிவு ஒத்துழைப்பு, வர்த்தகம் மற்றும் சுகாதாரம் ஆகிய துறைகள் உள்பட 20-க்கும் மேற்பட்ட ஒப்பந்தங்களில் கையொப்பமிட்டனர்.

