
19th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ஸ்ரீபெரும்புதூரில் 300 ஏக்கரில் பிரம்மாண்ட ஏ.ஐ பேக்டரி புரிந்துணர்வு ஒப்பந்தம் கையெழுத்து
- முன்னணி கட்டுமான நிறுவனமான எல் அண்ட் டி (L&T) மற்றும் உலகின் மிகப்பெரிய சிப் தயாரிப்பு நிறுவனமான என்விடியா (NVIDIA) ஆகிய இரு நிறுவனங்களும் இணைந்து, சென்னை அருகே ஸ்ரீபெரும்புதூரில் பிரம்மாண்ட 'ஏஐ ஃபேக்டரி' (AI Factory) எனப்படும் செயற்கை நுண்ணறிவு உள்கட்டமைப்பை உருவாக்க ஒப்பந்தம் செய்துள்ளன.
- டெல்லியில் நடைபெற்று வரும் ஏ.ஐ. மாநாட்டில் இதற்கான புரிந்துணர்வு ஒப்பந்தம் ஏற்படுத்தப்பட்டது. ஸ்ரீபெரும்புதூரில் ஏற்கனவே செயல்பட்டு வரும் 'எல் அண்ட் டி கிளவுட்பினிட்டி' (L&T Cloudfiniti) தரவு மையத்தின் ஒரு பகுதியாக, அதிநவீன என்விடியா ஜிபியு (NVIDIA GPU) கட்டமைப்புகள் நிறுவப்பட்டு, இதன் திறன் 30 மெகாவாட் வரை உயர்த்தப்பட உள்ளது.
- 'NVIDIA GPUs' என்பவை கணினியின் முக்கியமான பாகமாகும். இது ஒரு நொடியில் பல கோடி கணக்குகளைச் செய்து, ஏஐ (AI) மென்பொருள்களை மின்னல் வேகத்தில் இயங்க வைக்கும்.
- 300 ஏக்கர் பரப்பளவில் அமையவிருக்கும் இந்த ஏஐ மையம் இந்தியாவின் முக்கியமான தரவுகள் (Data) மற்றும் தகவல்கள் வெளிநாடுகளுக்குச் செல்லாமல், இந்தியாவிற்குள்ளேயே பாதுகாப்பாகச் சேமிக்கப்பட்டுச் செயல்படுத்தப்படும்.
- சென்னை போன்று மும்பையிலும் ஏ.ஐ. தரவு மையம் அமைக்க எல் அண்ட் டி மற்றும் என்விடியா இடையே ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
- செய்யறிவு (ஏஐ) தாக்கம் தொடா்பான உச்சிமாநாட்டின் நிகழ்வுகளை தில்லி பாரத மண்டபத்தில் பிரதமா் நரேந்திர மோடி இன்று காலை தொடக்கிவைத்தார்.
- தொடக்க நிகழ்ச்சியில் பங்கேற்று பிரதமா் மோடியுடன் ஐ.நா. பொதுச் செயலா் அன்டோனியோ குட்டெரெஸ், பிரான்ஸ் அதிபா் இமானுவல் மேக்ரான், பிரேசில் அதிபர் லூயிஸ் இனாசியோ லூலா டி சில்வா உள்ளிட்டோர் கலந்துகொண்டுள்ளனர்.
- இந்த மாநாட்டில், பங்கேற்கும் பல்வேறு நாட்டுத் தலைவா்களுடன் பிரதமர் மோடி இருதரப்பு பேச்சுவாா்த்தை நடத்துகிறாா். மேலும், நிா்வாகம், உள்கட்டமைப்பு, சா்வதேச ஒத்துழைப்பு என ஏஐ தொழில்நுட்பத்தின் தேசிய மற்றும் உலகளாவிய தேவைகள் குறித்த விவாதம் நடைபெறவுள்ளது.
- தொடர்ந்து, இன்று மாலை உலகின் முன்னணி தொழில்நுட்ப நிறுவனங்களின் தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகளுடன் பிரதமா் மோடி கலந்துரையாடவுள்ளார்.
- மக்கள், பூமி மற்றும் முன்னேற்றம் ஆகிய மூன்று கொள்கைகளை அடிப்படையாகக் கொண்டு நடைபெறும் இந்த மாநாட்டில் 20 நாடுகளின் தலைவா்கள், 60 அமைச்சா்கள் உள்பட பல்வேறு நாடுகளைச் சோ்ந்த 100க்கும் மேற்பட்ட அரச பிரதிநிதிகள் பங்கேற்றுள்ளனா்.
- கூகுள், ஓபன்ஏஐ, மைக்ரோசாஃப்ட் என பல்வேறு தொழில்நுட்ப நிறுவனங்களின் தலைமைச் செயல் அதிகாரிகள் உள்பட 500-க்கும் மேற்பட்டோா் பங்கேற்றுள்ளனர்.

