
14th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS
ரூ.10,000 கோடியுடன் ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0 துவக்கம் - பிரதமர் மோடி ஒப்புதல்
- பிரதமரின் புதிய அலுவலகமான சேவா தீர்த்தத்தில் தனது முதல் நாளில், ஏழைகள், விவசாயிகள், பெண்கள் ஆகியோரின் அதிகாரமளிப்புக்கான கோப்புகளில் பிரதமர் மோடி கையெழுத்திட்டார்.
- இதில், ரூ..10,000 கோடி பங்களிப்புடன் கூடிய ஸ்டார்ட் அப் இந்தியா நிதி 2.0 திட்டத்திற்கும் அவர் ஒப்புதல் அளித்தார்.
- ஒன்றிய உணவுத் துறை அமைச்சகம் வெளியிட்ட அறிக்கையில், ''தற்போதைய நிலைத்தன்மை மற்றும் விலை சூழ்நிலையின் விரிவான மதிப்பீட்டிற்கு பிறகு 25 லட்சம் டன் கோதுமை ஏற்றுமதி செய்வதற்கு அரசு அனுமதி அளித்துள்ளது.
- இதனுடன் கூடுதலாக 5லட்சம் டன் கோதுமை பொருட்கள் மற்றும் சர்க்கரையும் அடங்கும். இது விவசாயிகளின் நலன்களை பாதுகாப்பதில் அரசின் உறுதிப்பாட்டை மீண்டும் உறுதிப்படுத்துகின்றது.
- 2025-2026ம் ஆண்டில் தனியார் நிறுவனங்களுடன் கோதுமை இருப்பு சுமார் 75லட்சம் டன்களாக உள்ளது. இது கடந்த ஆண்டு இதே கால கட்டத்துடன் ஒப்பிடுகையில் கிட்டதட்ட 32லட்சம் டன் அதிகமாகும்.
- இது நாட்டில் வசதியான விநியோக நிலையை குறிக்கின்றது. 2026ம் ஆண்டு ஏப்ரல் 1 நிலவரப்படி இந்திய உணவு கழகத்துடனான மத்திய தொகுப்பில் மொத்த கோதுமை கிடைக்கும் தன்மை சுமார் 182லட்சம் டன்னாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகின்றது.

