//
Type Here to Get Search Results !

12th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

TODAY TNPSC CURRENT AFFAIRS 2026 TNPSCSHOUTERS TAMIL & ENGLISH PDF

12th FEBRUARY 2026 TAMIL TNPSC CURRENT AFFAIRS PDF TNPSC SHOUTERS

எகிப்து பிரமிடு கல்லறைகளில் தமிழ் - பிராமி எழுத்துகள் உள்ள கல்வெட்டுகள் கண்டுப்பிடிப்பு
  • எகிப்தில் உள்ள புகழ்பெற்ற யுனெஸ்கோ உலக பாரம்பரிய தளமான கிங்ஸ் பள்ளத்தாக்கில் உள்ள பாறையில் செதுக்கப்பட்ட கல்லறைகளில் இருந்து தமிழ்-பிராமி, பிராகிருதத்தில் பொறிக்கப்பட்ட 30 கல்வெட்டுகள் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
  • சுவிட்சர்லாந்து மற்றும் பிரான்ஸ் ஆய்வாளர்கள் நடத்திய இந்த ஆய்வில், இது சுமார் 2,000 ஆண்டுகளுக்கு முன்பு இந்தியாவிற்கும் மத்திய கிழக்கு நாடான எகிப்துக்கும் இடையிலான பண்டைய வர்த்தக தொடர்புகளுக்கு மற்றொரு சான்றாக அமைந்துள்ளது.
  • 6 கல்லறைகளில் காணப்படும் கல்வெட்டுகளில், 20 தமிழ் மொழியிலும், மீதமுள்ள 10 சமஸ்கிருதம் மற்றும் பிராகிருத மொழியிலும் உள்ளதாகக் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளன.
  • இந்தியாவிலிருந்து பல பகுதிகளைச் சேர்ந்த மக்கள் எகிப்துக்கு, அதன் பண்டைய தலைநகரான தீபஸுக்குள் உள்ள மன்னர்களின் பள்ளத்தாக்குக்கு கி.பி 1 மற்றும் 3 ஆம் நூற்றாண்டுகளுக்கு இடையில் மசாலாப் பொருள்கள் மற்றும் பிற பொருள்களை வர்த்தகம் செய்வதற்காகச் சென்றதாகக் குறிக்கிறது.
  • தமிழ்நாடு மாநில தொல்பொருள் துறை ஏற்பாடு செய்த தமிழ் கல்வெட்டு குறித்த சர்வதேச மாநாட்டில், சுவிட்சர்லாந்தைச் சேர்ந்த பேராசிரியர் இங்கோ ஸ்ட்ராச் மற்றும் பிரான்சின் பாரிஸில் உள்ள பேராசிரியர் சார்லோட் ஷ்மிட் ஆகியோர் இந்தத் தகவலை வெளியிட்டனர்.
  • 'சிகை கொற்றன்' என்ற தமிழ் வணிகரின் பெயர், 5 வெவ்வேறு பிரமிடுகளில் 8 முறை கண்டறியப்பட்டுள்ளது. ஒரு கல்வெட்டில் 'சிகை கொற்றன் - வர கண்ட' (சிகை கொற்றன் இங்கே வந்து பார்த்தான்) என பொறிக்கப்பட்டுள்ளது. 
  • ரோமானிய காலத்தில் தமிழ் வணிகர்கள் கடல் கடந்து எகிப்து சென்று, அங்கிருந்து உள்நாட்டுப் பகுதிகளுக்கும் பயணம் செய்துள்ளனர் என்பதற்கு இதுவே முதல் நேரடி ஆதாரமாகவும் அமைந்திருக்கிறது.
114 ரஃபேல் போர் விமானங்கள் வாங்க பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) கொள்கை அளவிலான ஒப்புதல்
  • இந்தியாவின் வான்வழிப் பாதுகாப்பை உலகத்தரம் வாய்ந்த நிலைக்கு உயர்த்துவதற்காக, சுமார் ரூ. 3.25 லட்சம் கோடி மதிப்பிலான மெகா ஒப்பந்தத்திற்கு பாதுகாப்பு கையகப்படுத்தல் கவுன்சில் (DAC) கொள்கை அளவிலான ஒப்புதலை வழங்கியுள்ளது.
  • பாதுகாப்பு அமைச்சர் ராஜ்நாத் சிங் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில், 114 ரஃபேல் போர் விமானங்களை வாங்குவதற்கான வரலாற்றுச் சிறப்புமிக்க முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்தியக் கடலோர காவல்படைக்கு 8 டார்னியர் 228 ரக இரட்டை என்ஜின் கொண்ட சிறிய விமானம் வாங்க ரூ.2,312 கோடி ஒப்பந்தம்
  • இந்தியக் கடலோர காவல்படைக்காக ரூ.2,312 கோடி மதிப்பில் 8 டார்னியர் 228 ரக விமானங்களை கொள்முதல் செய்ய கான்பூரில் உள்ள இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்துடன் பாதுகாப்பு அமைச்சகம் கையெழுத்திட்டுள்ளது. 
  • புதுதில்லியில் 2026 பிப்ரவரி 12 அன்று நடைபெற்ற இந்த ஒப்பந்தம், பாதுகாப்புத்துறை செயலாளர் திரு ராஜேஷ் குமார் சிங் தலைமையில் கையெழுத்தானது.
  • இதன் மூலம் இந்துஸ்தான் ஏரோநாட்டிக்ஸ் நிறுவனத்தின் உற்பத்தி அதிகரித்து நேரடி மற்றும் மறைமுக வேலைவாய்ப்பு உருவாகும் என்றும், குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்துறை நிறுவனங்கள் மற்றும் அதுசார்ந்த நிறுவனங்களுக்கு ஆதரவு கிடைக்கும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. தற்சார்பு இந்தியா, மேக்-இன் இந்தியா ஆகிய மத்திய அரசு திட்டங்களுக்கு இந்த ஒப்பந்தம் வலுசேர்க்கிறது.   

Post a Comment

0 Comments
* Please Don't Spam Here. All the Comments are Reviewed by Admin.

Top Post Ad

Below Post Ad

Hollywood Movies

close

Join TNPSC SHOUTERS Telegram Channel

Join TNPSC SHOUTERS

Join Telegram Channel